வியாழன், 8 செப்டம்பர், 2016

சாதி ஏனோ..???

வணிகவியல் துறையின் உதவிப் பேரராசிரியர் வா.சுரேசு அவர்கள் சாதி ஏனோ என்ற தலைப்பில் எழுதிய கவிதையினை இங்கு பகிரவுள்ளேன்... 

Image result for சாதி ஏனோ

ஓரறிவாம் (உணர்வற்ற) தாவரங்களில்
சாதியில்லை...!!!
ஈரறிவாம்(உயிருள்ள) ஈ, கொசுவில்
சாதியில்லை..!!!
மூவறிவாம் நண்டு வண்டில் 
சாதியில்லை..!!!
நான்கறிவாம் எழில்மிகு குயில் மயிலில்
சாதியில்லை..!!!
ஐந்தறிவாம் நாய் சிங்கம்தனில்
சாதியில்லை..!!!
ஆறறிவாம் அறிவுள்ள மனிதனிலே
சாதி ஏனோ...???

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

தன்னம்பிக்கை 7

Image result for மன அமைதி


(தன்னம்பிக்கை தொடர்கின்றது…)

    அடிதடி, கூச்சல், அலறல், அழுகை – நிம்மதியற்ற வீடுகள். அந்தக் குடும்பங்களிலுள்ள பிள்ளைகள்தான் பாவம்! எப்படி படிப்பார்கள்? அமைதியான சூழலும் மகிழ்ச்சியும் இல்லையென்றால் அவர்கள் எப்படித்தான் வளர்ச்சியடைவார்கள்!
   
   இருவரில் ஒருவர் அமைதியாக இருந்துவிட்டால் போதும். இன்னொருவரின் பயங்கரமான வார்த்தைகள் எல்லாம் பலமிழந்து விழுந்துவிடும்.
   
   தெருவீதிகளில் திடீர் திடீரென சண்டை சம்பவங்களைப் பார்க்க முடியும். இருவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அவர்களில் இன்னொருவனை அரிவாளால் வெட்டிவிடுகிறான். எதிர்பாராதவிதமாக ஒரு கொலையே நடந்து முடிந்துவிடுகிறது.
   
   காரணம் என்ன? அனல்தெறிக்கும் வார்த்தைகளின் மோதல்கள். எனவே எப்போதும் அமைதி காப்பதே நலம்.

                                (தொடரும்..)

திங்கள், 5 செப்டம்பர், 2016

மழலை மொழி


Image result for மழலை மொழி புகைப்படங்கள்

கனவில் தோன்றும் கவிதையோ!!

காற்றில் மிதக்கும் பறவையோ!!!

என் கண்ணே!!
உன் திருவாய் அசைத்துப் பேசும் முதல் மொழியோ??

அதுவே உந்தன் மழலை மொழியோ!!!!!

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

தன்னம்பிக்கை 6


Image result for தன்னம்பிக்கை சித்தர்

(தன்னம்பிக்கை தொடர்கின்றது..)
    
   ஒவ்வொரு நாளும் ஒருமணி நேரமாவது அமைதியாக இருந்து பாருங்கள். மயக்கங்கள் நீங்கி மனதில் தெளிவு ஏற்படும். எப்போது பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பதெல்லாம் புரியவரும். பிரச்சனைகளை சர்வ சாதாரணமாக மேற்கொள்வதற்கான மனோபலம் வந்துவிடும். ஒருமணி நேர அமைதி என்பது ஒருமணி நேர தியானத்தைப்போல் உங்களுக்குள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
    
   அமைதி, மவுனம், நிதானம் எல்லாம் ஒன்றுதான். அது நமக்குள் இல்லையெனில், நிம்மதியும் இல்லாமல் தான் போய்விடும்.
    
   சில வீடுகளில் கணவன்-மனைவி சண்டை தெருக்கோடி வரையிலும் கேட்கும். அவன் ஒரு வார்த்தை சொன்னால், பதிலுக்கு அவள் பத்து வார்த்தை பேசுவாள். அவள் பேசிவிட்டால் கையில் கிடைத்ததைத் தூக்கி அவன் எறிவான்.
                      
                               (தொடரும்..)
வியாழன், 1 செப்டம்பர், 2016

தன்னம்பிக்கை 5

Image result for தன்னம்பிக்கை சித்தர்(தன்னம்பிக்கை தொடர்கின்றது…)
   
   `நெடுநேரம் தியானம் செய்தீர்களே! புத்தர் தங்களிடம் என்ன சோன்னார்?’
   
    `அவர் ஒருபோதும் எதுவும் சொல்ல மாட்டார். ஆனால் அமைதியாகக் கேட்டுக் கொண்டுருப்பார்’ என்றார் துறவி.
     
    `அப்படியா? அதுசரி, அவரிடம் தாங்கள் என்ன சொன்னீர்கள்?’ என்று தனது அடுத்த கேள்வியைக் கேட்டார் தலைமைக் குரு.
      
    `நானும் எதுவும் சொல்ல மாட்டேன். அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்’ என்று சொல்லிவிட்டு அந்தத் துறவி அங்கிருந்து கடந்து சென்றார்.
      
     மவுனத்தில் ஆழ்ந்த அர்த்தம் இருக்கின்றது. அதில் ஆழம் இருக்கிது. சப்தங்களை விட மவுனத்திற்கு வலிமை அதிகம் மவுனம் என்பது ஊமைத்தனம் அல்ல.அது ஒரு நிசப்த கர்ஜனை; அது ஓர் ஓசையற்ற சங்கீதம்.

                      
                     (தொடரும்..)