ஞாயிறு, 26 ஜூன், 2022

தேனியும் மதுரமும்

சிலேடை மொழியாய் இருந்தவள் 
இன்று இரட்டைக் கிளவியாய் மாறினாள்.
கேளாய் மதுரமே!!
சிறுக சிறுக சேமித்தாளோ இனிய மதுரத்தை தன் இதயக் கூட்டில்..
கண் என்னும் கல் பட்டே கூண்டு உடைய 
மதுரம் சொட்ட சொட்ட மனம் உருகி நின்றாளே இன்று!!
சிந்தும் தேனை காத்திட தன் கண் என்னும் கூட்டை தந்தாளே!
உடைந்ததோ மனம்!?
அல்ல உரைந்ததோ!?
புரிந்ததோ இக் கவி!?
கவி மட்டுமே என்றாள் தேனியின் நிலையை
கூறாய் மதுரமே!..❤️

Gopikaa shri. G
II b.com FMA. Ksrcasw

கண்ணீர்



குழாயில் 
சொட்டு சொட்டாக
வீணாகும்
ஒவ்வொரு துளி நீரும்
சொல்லாமல் சொல்கிறது
நாளை
தண்ணீருக்காக விடப்போகும்
கண்ணீரை.....

M.Sanmati 
1st BSC COMPUTER SCIENCE ksrcasw

*வண்ணத்தில் நீ*



கவியோ.... கதையோ...
கண்ணே....!
கண்ணில் தோன்றும் காட்சியோ -
என்னில் வாரணம் ஆயிரமாக உதித்ததை...
மொழித்தேன் வார்த்தையில் வர்ணிக்க....
கண் விளிக்கும் நொடியில் தோன்றும்
பல வண்ணங்களே...
ஏனோ
என்னில் ஒரு மாற்றம்
என்னை நினைத்த உன்னை
நினைக்கும் ஒரு மனம் கண்ணில் தோன்றும்
காட்சியே பல வண்ணமாய் தளிர்ந்தாய்
நீ.. !!
உறவே.... !!

Yamini. R 1st B. Sc.,CDF  ksrcasw

வியாழன், 23 ஜூன், 2022

என் கல்லூரி வாழ்க்கை

அவசரம் இல்லை..
ஆரவாரம் இல்லை..
இறைக்கூட்டம் இல்லை..
சீருடை இல்லை..
விசில் சத்தம் இல்லை..
ஒன்றுபட்ட குரல் இல்லை..
குழந்தையாக இருந்த என் காலம்..
வாழ்க்கையை ருசிக்க...
முகம் தெரியாத மனிதர்களுடன்...
ஆரம்பித்தது என் கல்லூரி வாழ்க்கை...

1st Bsc.nutrition and dietetics 
J . Harshini. Ksrcasw

வளைவு

ஒற்றை பூ தனிமையை ருசிப்பதை விட
ஓர் இதழ் அதை நுகர்தலே
வளைவு தான்
1st B.A Economics Varsha.P ksrcasw