சிலேடை மொழியாய் இருந்தவள்
இன்று இரட்டைக் கிளவியாய் மாறினாள்.
கேளாய் மதுரமே!!
சிறுக சிறுக சேமித்தாளோ இனிய மதுரத்தை தன் இதயக் கூட்டில்..
கண் என்னும் கல் பட்டே கூண்டு உடைய
மதுரம் சொட்ட சொட்ட மனம் உருகி நின்றாளே இன்று!!
சிந்தும் தேனை காத்திட தன் கண் என்னும் கூட்டை தந்தாளே!
உடைந்ததோ மனம்!?
அல்ல உரைந்ததோ!?
புரிந்ததோ இக் கவி!?
கவி மட்டுமே என்றாள் தேனியின் நிலையை
கூறாய் மதுரமே!..❤️
Gopikaa shri. G
II b.com FMA. Ksrcasw