கவிதையின் கண்களைக் கண்ணீரில் கண்ட நாட்கள்!
இன்று விழியின் விழிம்பில் நதி வற்றிக் கிடப்பது ஏன் ?
தாயின் உறவு தொப்புக்கோடியில்
தந்தையின் உறவு கைப்பிடியில் அண்ணனின் உறவு அறவணைப்பில்
என்று
உறவுகள் சிற்பிக்குள் உள்ள முத்து போல் ஒன்றாக இருந்த
நாட்கள் ....
ஏனோ!!
சிதறிய முத்துக்கள் நாளடைவில் பிரிந்தன..
முத்துகளை தேடியே தொலைந்தேன்!! விழியில் வழிந்த கண்ணீர் வற்றிப் போய்
கலைத்தன
எழுத்துகளை தேடி நான்
துளைந்தேன்
எண் கண்ணில் கவிதையை
காணவில்லை..
என்னோடு சேர்ந்து என் கவிதையும் தொலைந்தது.. !!!
1st B. Sc., CDF YAMINI. R ksrcasw