செவ்வாய், 21 ஜனவரி, 2020

அம்மா

சுட்டெரித்திடும் சூரியனும் நீ
வளம்தரும் மழையும் நீ
மனதில் விதை விதைத்தவளும் நீ
மவுனத்தின் காரணமும் நீ
மகிழ்ச்சியின் காரணமும் நீ
தேவதையின் வடிவமும் நீயே
என் தாயும் நீயே... அம்மா...


8.7.19அன்று தினத்தந்தி  நாளிதழில் வெளியான கவிதை.

நேரம் இல்லை

இதயம் நொருங்குவதற்கு இது கண்ணாடி இல்லை
கதவுகள் திறப்பதற்கு இது வீடு இல்லை
மனதிலே வைப்பதற்கு இடம் இல்லை
என் கதையைச் சொல்வதற்கு இது நேரம் இல்லை

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

குழந்தை

மனதைப் பறிக்கும் பொன்நிறம்
விழிகளைக் கவர்ந்த உன் புன்னகை
செவிகளில் ஒலிக்கும் உன் சிறிய சொற்கள்
புதையலைப்போல் என் கையில்
கிடைத்த நீ என் செல்வா

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

தென்னை மரமே

ஒற்றைக் காலில் நின்று உலகைப் பார்க்கிறது
தாகம் தீர்க்க இளநீர் தருகிறது
குடிசை அமைக்க ஓலையைத் தந்தது
தாயைப்போல் இளம் குருத்தில் இருந்தது
தேங்காயாக வளர்வதற்குப் பத்துமாதம்
பிள்ளைபோல் சுமந்த தென்னைமரமே

ஈ.கன்னிகா
இளங்கலை இரண்டாமாண்டு ஆங்கிலம்

நிலவே நீயும் ஒரு பெண்தானே

நிலவே நீ வானத்தில் மட்டும் உதிக்கிறாய்
நிலத்தில் வாழும் பெண்ணின் முகத்தில் உதிக்கிறாய்
இருண்ட வானில் ஒளியைக் கூட்டுகிறாய்
ஆனால் பெண் இருண்ட வீட்டில்
ஒளியேற்றி அன்பைக் கொடுக்கிறாள்
நீங்கள் இருவரும் ஒருவர் தானே
நிலவே நீயும் ஒரு பெண்தானே

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்