புதன், 9 அக்டோபர், 2019

கொலுசு

அவள்தான் !
அவளேதான்!!
என்று காட்டிக்கொடுக்கும் கொலுசே

வாசல் வரை வந்தவள்
வாழ்க்கை வரை வருவாளா

கண்களில் காதலைத் தூவிப்
பேனாவில் பதிலைக் கூறி

என் கையை அவள் கையோடு
இணைத்து நடைபோட ஆசை

அவள் வருவாளா

அவள் விரும்பவில்லை எனில்
இனி வரும் பிறவிகள் அனைத்திலும்
உன்னைப்போல் கொலுசாக மாறி
அவள் விருப்பத்தை மீறி
அவள் காலில் பற்றிக்கொண்டு
அவளுடன் இராஜ நடைப்போடுவேன்
பார்க்கிறாயா

சனி, 5 அக்டோபர், 2019

அன்பு


             

இந்த உலகில் இலவசமாகக் கிடைக்கும் விஷயங்களில் ஒன்று அன்பு. நமக்குச் சிலரைப் பார்த்தவுடன் பிடித்துவிடும். அவர்கள் மீது அளவு கடந்த அன்பு உருவாகும். ஆனால் அந்த அன்பு நமக்கு மீண்டும் கிடைக்காது என்று தெரிந்தும், அவர்கள் மீது செலுத்தும் அன்பைத் தடுக்கமுடியாது. அவர்கள் மீது நாம் அதிகம் உரிமை எடுத்துக்கொள்வோம் ஆனால் அவர்களுக்கு நாம் ஒரு முக்கியமான நபராக இருக்கமாட்டோம்.அதனால் யாரிடமும் அன்புக்காகப் பிச்சை எடுக்காதே. நீ தனித்து இருந்தாலும் தனித்துவமாக இருக்க செய்ய வேண்டியவற்றைச் செய். இருள் நிறைந்த பாதையில் தோன்றும் ஓளிபோல உன் வாழ்க்கையில் உனக்காக ஒருவா் உன்னிடம் மட்டுமே அன்பு செலுத்தக் காத்துக்கொண்டு இருப்பார்.