வெள்ளி, 18 நவம்பர், 2016

காட் ஈஸ் மெர்சீபுல்

                                                            காட் ஈஸ் மெர்சீபுல்
                                    --டைனி டாட் ஸ்டோரீஸ்
           

குறுநில மன்னர் ஒருவர் தன் தோட்டத்தில் பலவிதமான மரங்களை வைத்திருந்தார்.அதனை கண்காணிக்க திறமையான தோட்டக்காரனை நியமித்தார்.

            தினமும் அந்த தோட்டத்திலிருந்து சுவைமிகுந்த பழுத்த பழங்களை பறித்து கூடையில் சேர்பார்.அந்த பழங்களை காலையில் அரசவை கூடும்போது மன்னருக்குக் கொடுப்பார்.ஒரு நாள்``ச்செரி’’ பழங்களை மன்னருக்காக பரித்து கொண்டு சென்றார்.அப்பொழுது மன்னர் சற்று மனவுலைச்சலில் இருந்தார்.அந்த செரி பழம் ஒன்றை பறித்து சுவைக்கையில் அது புளிப்பாக இருந்தது.அதனால்,ஆத்திரமடைந்த மன்னர் தோட்டக்காரர் நெற்றியில் தூக்கி எரிந்தார்.அதற்கு அந்த தோட்டக்காரன்``கடவுள் கருணையுள்ளவர்’’ என்றார்.மன்னர் அதற்கு``நீ இப்பொழுது கோவப்பட வேண்டும் கடவுள் கருணையுடையவர் என்று ஏன் கூறுகிறாய்?என்று வினவினார்.அதற்கு தோட்டக்காரர்``மன்னரே நான் உங்களுக்கு இன்று அன்னாசி பழம் கொண்டு வர எண்ணியிருந்தேன்.
ஏதோ மனம்மாரி செரி பழங்களை உங்களுக்கு கொண்டுவந்து விட்டேன்.``நீங்கள் என்மீது அன்னாசியை தூக்கி ரிந்திருந்தாள்,நான் மிகவும் வருந்தியிருப்பேன். ஆகையால் ,இறைன் என் மனதை மாற்றி எனக்கு ன்மை புரிந்திருக்கிறார், என்றார்.

தி க்ரேட்டஸ்ட் சொல்யூசன்

                                                  தி க்ரேட்டஸ்ட் சொல்யூசன்
                                    --டைனி டாட் ஸ்டோரிஸ்



ஒரு யாசகர் சிறிய கிராமம் ஒன்றில் வசித்து வந்தார்.ஒரு நாள் அந்த கிராமத்து தலைவரை சந்தித்து யாசகம் கேட்க முடிவு செய்தார்.அங்கு செல்கையில் தலைவர் மன்னரை சந்தித்து கிராம மக்கள் நலனுக்காக நன்கொடை வாங்க சென்ற செய்தியை யாசகர் அறிந்தார்.மன்னர் ஊர் தலைவருக்கு உதவி செய்வதால் அவர் ஊர் தலைவரைவிட மிகுந்த செல்வாக்குடையவர் என்றறிந்து அவரிடம் யாசகம் கேட்க முடிவு செய்தார்.அவ்வூரின் தலைநகருக்கு செல்லும்போது கோயிலுக்கு வெளியே மிகப் பெரிய கூட்டத்தை பார்த்தார்.அங்குள்ளவர்களிடம் விசாரித்ததில் மன்னர் அங்குள்ள கோயிலுக்கு வருகை புரிவதை அறிந்தார்.யாசகர் எட்டிப்  பார்த்ததில் மன்னர் ஆண்டவனிடம்``என்னை ஆசிர்தித்து அரண்மனை கஜானா எப்பொழுதும் நிறைந்திருக்க அருளிபுரிக’’ என்று வேண்டினார்அக்கனம் யாசகர் ஆண்டவன் மன்னரை விட பெரிய பலம் பெற்றவர் என்றறிந்தார்.


      
   

பின்னர் இறைவன் அவர்முன் காட்சி ளித்து``உன்னுடைய சிக்கலுக்காக தீர்வு கடின உழைப்பு. யாசிப்பதை நிறுத்தி உழைக்க ஆரம்பித்தாலே வாழ இயலும்’’`என்று அறிவுறுத்தினார்.அந்த அறிவுரையை மதித்து யாசிப்பதை நிறுத்தி நன்றாக வாழ கடினமாக உழைக்க ஆரம்பித்தார்.
           


டூ வாட் யூ சே

                                                            டூ வாட் யூ சே
                                    --டைனி டாட்
                 

ஒரு சிறிய கிராமத்தில் வயதான முதியவர் ஒருவர் வசித்து வந்தார்.நிறைய முறை அவர்``எனக்கு குடும்பம் என்று எதுவும் இல்லை.இதற்கு நான் இறப்பதே மேல்’’ என்று கூறுவார்.தினமும் காலையில் காட்டிற் சென்று விரகு வெட்டி சேர்ப்பார்.பிறகு அதனை சந்தையில் விற்று விடுவார்.அந்த பணத்தைக் கொண்டு சிறிய உணவு வண்டியில் உணவு உட்கொள்வார்.ஒரு நாள் அவர்க்கு காய்ச்சல் வந்தது.இருந்தும் அவர் வேலைக்கு சென்றார்,ஏனெனில் அந்த காய்ச்சலை குணப்படுத்துவதற்கும் உணவிற்கும் வேறு பணம் அவரிடம் இல்லை.அந்த கட்டைகளை தன் முதுகில் சுமந்து திரும்ப ``எனக்கு எந்த உதவியும் இல்லை இதற்கு எமன் என்னை கொண்டு செல்லலாம்?’’ என்றார்.

            அந்த சொல் எமனிற்கு கேட்டு அவர் முன் காட்சி அளித்து, தன்னுடன் சொர்க்கத்திற்கு வர அழைத்தார்.அதற்கு அந்த முதியவர்``எமதர்ம ராஜா நான் ஏதோ உதவிக்காக புளம்பிக்கொண்டிருந்தேன்?’’ என்றார்.பின்பு எமராஜா அவருக்கு கட்டைகளை தூக்க உதவி புரிந்து புன்முறுவலுடன் தன் மனதிற்குள்``மக்கள் தன் சொல்களை நம்புவதில்லை,’’என்று எண்ணினார்..


தி ஃபூலிஷ் டாக்ஸ்

                                                                           தி ஃபூலிஷ் டாக்ஸ்
                                          --டைனி டாட் ஸ்டோரிஸ்
               

ஒரு ஊரில் ஆடு மேய்பவர் ஒருவரிடம் நிறைய ஆடுகள் இருந்தன.அவர் அவைகளை பாதுகாக்க இரு ஆக்ரோசமான நாய்களை பழக்கி வைத்திருந்தார்.அந்த நாய்களும் ஆடுகளை பாதுகாத்துக்கொண்டு உண்மையாக நடந்து கொண்டன.

ஒரு இரவில் நரி அந்த டுகளை நோட்டமிட்டது.அருகில் சென்று அந்த ஆடுகளை நெருங்கும் போது நாய்கள் நரியை குறைத்து விரட்டின.அந்த நரி அப்பொழுது ஏதாவது,சதி திட்டம் தீட்டினால்தான் இதனை ருசிக்க முடியும் என்று எண்ணியது.கடினமாக இருந்தாலும் திடீரென ஒரு தீர்வு தோன்றியது.அதனை செயல்படுத்த இரு நாய்களிடம் சென்று,``சங்கிலி மூலம் கட்டப்பட்டு மனிதர்களுக்காக நீ உழைப்பதை எண்ணி நான் வருந்தினேன்.என்னுடைய காட்டிற்கு வந்து நீங்கள் இருங்கள்.அங்கு நீங்கள் சுதந்திரமாக சுற்றித் திரிந்து விரும்பியதை உண்ணலாம்’’,என்றது.அந்த நரியின் எண்ணம் அந்த நாய்களைக் கவர்ந்து.



            தந்திரமாக அந்த நாய்களை தன் குகைக்குள் செலுத்தியது.அங்கு ஏற்கவே பதுங்கி இருந்த இரண்டு நரிகள் நாய்களை கடித்தன.பிறகு அனைத்து நரிகளும் ஒன்று சேர்ந்து அந்த ஆடுகளை உண்டனர்.அந்த நாய்களின் அறியாமையிலால் தான் தன் உரிமையாளர்களுக்கும் தனக்கும் தீயன தேடிக்கொண்டன.