எங்கள் கல்லூரியின் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் வா.சுரேசு அவர்களால் எழுதப்பட்ட கவிதையினை இங்கு பகிரவுள்ளேன்.
சனி, 24 செப்டம்பர், 2016
வியாழன், 22 செப்டம்பர், 2016
ஞாயிறு, 18 செப்டம்பர், 2016
நா.முத்துகுமார்-க்கு சமர்பணம்...!!!
எங்கள் கல்லூரியில் வாரந்தோறும் நடைபெறும் சிந்தனை மன்றத்தில் இந்த வாரம் கவிஞர் நா.முத்துகுமாரின் கவிதைகள் கலந்துரையாடல் என்ற தலைப்பில் நடைபெற்றது.இதில் பல மாணவிகள் அவரின் கவிதைகளை பாடியும்,கலந்துரையாடியும் அவரை நினைவு கூர்ந்தனர்.அதில் ஒரு சிலர் அவரை குறித்த தனது சொந்த படைப்பில் கவிதை ஒன்றை எழுதி வாசித்தனர்.அதில் ஒன்றே இக்கவிதைத் தொகுப்பு.மூன்றாம் ஆண்டு கணிதத் துறையில் பயின்று வரும் வ.கீர்த்தனா அவர்களால் எழுதப்பட்டது.
தன்னம்பிக்கை 10
(தன்னம்பிக்கை தொடர்கிறது…)
உங்கள்
உறவினர்களில் யாருடனாவது உங்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டிருக்குமெனில், சற்று நினைவுபடுத்திப்
பாருங்கள். அதிகப்படியான பேச்சுதான் அதற்கு மூல காரணமாக இருந்திருக்கும்.
எவ்வளவு
அதிகமாக வீண் வார்த்தைகளைப் பேசுகிறோமோ, அவ்வளவு அதிகமாகப் பாவம் செய்கிறோம் என்று
பொருள். எவ்வளவு கண்ணியத்துடன் அமைதி காத்துக் கொள்கிறோமோ அவ்வளவு புண்ணியம் செய்கிறோம்
என்று பொருள்.
நம்உடம்பிலுள்ள
கெட்ட கொழுப்புகள் ஏற்படுத்தக்கூடிய பிரச்சனைகளைவிட, ‘வாய்க்கொழுப்பு’ ஏற்படுத்துகின்ற
பிரச்சனைகள் மிகக் கொடியவை. எனவே நாம் எதை அடக்குகிறோமோ இல்லையோ நாவை அடக்குவது அவசியம்.
‘அவரை
மாதிரி ஒரு ஆளை நீங்க பார்க்கவே முடியாது. வம்புதும்பு கிடையாது. அளவோட அருமையா பேசுவாரு.
ரொம்ப அமைதியான மனுஷன்’ என்று ஒருவரைப் பற்றிச் சொல்லக் கேட்கும்போது, அந்த மனிதர்
மீது தானாக ஏற்பட்டுவிடுகிறது.
எந்தச்
சூழ்நிலையிலும் உணர்ச்சிவசப்படாமல் அமைதியாக இருந்து பாருங்கள். அநீதியாகப் பேசுகிறவர்களும்
அக்கிரமக்காரர்களும் உங்களை விட்டு விலகி ஓடிவிடுவார்கள்.
எனவே
அளவோடு பேசி, உங்கள் மதிப்பையும் மகிழ்ச்சியையும் காத்துக் கொள்ளுங்கள்.
அதுதான்
வாழ்வெனச் சொல்லுகிறேன்.
நீங்கள்
வாழ்வாங்கு வாழ்ந்திடச் சொல்லுகிறேன்.
நன்றி!!!
தன்னம்பிக்கை 9
(தன்னம்பிக்கை தொடர்கின்றது..)
‘பரதா
! நம் தந்தை நான்கு பிள்ளைகளைப் பெற்றார். மூத்தவன் ‘எனக்கு நாடு வேண்டாம். தந்தையின்
விருப்பத்தை நிறைவேற்றக்கூடிய காடுதான் வேண்டும்’ என்று சொல்லிச் சென்றுவிட்டான். அவனுக்கு
உறுதுணையாக இருப்பதே பெருமை என்று இலக்குவன் அவனுடன் சென்று விட்டான். இப்படிச் சென்றவர்கள்
இருவரும் உரிய காலம் கடந்தும்கூட இன்னும் வரவில்லை என்பதால் நீயோ நெருப்பில் விழப்போவதாகக் கூறுகிறாய். அப்படியானால்
ஆட்சியை ஏற்றுக்கொள்ள நான்தான் கிடைத்தேனா?’ என்று கேட்கிறான்.
ராம
காவியத்தில் சத்ருக்கனன் பேசியது இவ்வளவுதானே. ஆனால் சரியான நேரத்தில் நறுக்கென்று
பேசிகிறான் அவ்வளவுதான்!
ஆனால்
இங்கே நிலைமை வேறு. நாம் பார்க்கும் இடங்களிலெல்லாம், பெரும்பாலான மனிதர்கள் நிறைய
பேசிகிறார்கள்; பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
அவர்கள்
பேச்சுகளில் பெரும்பகுதி வீண்கதைகள்; பொய்யான தகவல்கள்; அர்த்தமற்ற வாக்குகள்வாதங்கள்.
அடுத்தவரைக்
கெடுத்துப் பேசுவதென்றால் விடியவிடிய ஒரு சொட்டுத் தண்ணீர்கூட குடிக்காமல் பேசுவார்கள்.
வீண்பழி சுமத்துவதென்றால் அது அவர்களுக்குத் தேன் குடிப்பதுபோல்.
‘புறம்
பேசுதல் என்பது இறந்துபோன தன் சகோதரனின் இறைச்சியைப் புசிக்க விருப்பம் கொள்ளுதலுக்கு
சமம்’ என்று திருக்குர் ஆன் கூறுகிறது. ஒருவரை ஒருவர் நிந்தனை செய்தால், வீண்பழி சுமத்தினால்,
அதனால் விளைகின்ற பாவம், யார் அந்தச் செயலை முதலாவது தொடங்கினாரோ அவரையே சாரும் என்றும்
அது நம்மை எச்சரிக்கிறது.
தூங்கிற
நேரம் தவிர மீதி நேரமெல்லாம் பேசிக் கொண்டே இருப்பவர்கள் பிரச்சினைக்குரியவர்கள். அநீதியான
வார்த்தைகளும், பொய்யும் புரட்டும் அவர்களிடமிருந்து வெளிப்படும்.
(தொடரும்..)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)