செவ்வாய், 7 ஜூன், 2016

எனது ஐயங்களுடன் தி.தமிழ் இளங்கோ ஐயா...!!

அன்புடையீருக்கு வணக்கம்,

திருபாய் அம்பானி

                                             
Image result for திருபாய் அம்பானி

இன்றைய காலக்கட்டத்தில் மக்களின் கவனத்தைக் கவரும் இந்தியாவின் கோடீஸ்வரர்களான அனில் அம்பானி, முகேஷ் அம்பானி ஆகியாரின் தந்தை திருபாய் அம்பானி ஆவார்.
     சினிமாவில் ஆரம்பத்தில் ஏழையாக தோன்றும் கதாநாயகன், படம் முடிவதற்குள் திடீரென்று மிகப்பெரிய பணக்காரனாகி பார்ப்பவர்களுக்கு அதிசியத்தைத் தருவது போல அமைந்தது திருபாய் அம்பானியின் வாழ்க்கை.
‘இருபதாம் நூற்றாண்டின் தலைச்சிறந்த மனிதர்’ என்று பல தொழிற்நுட்பக் கழகங்களாலும் பாராட்டப்பட்டவர். ‘ இருபதாம் நூற்றாண்டில் மிக அதிகமாக செல்வத்தை சேர்த்த மனிதர் ’ என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
செய்யும் தொழிலில் விடாமுயற்சியுடனும் நம்பக்கையுடனும் முழுமையாக ஈடுபட்டால் வெற்றி நிச்சயம் என்று நம்பியவர்.
இளைஞர்களை ஊக்குவித்து அவர்கள் பணிபுரிய தேவையான சூழ்நிலையை ஏற்படுத்தி, உற்சாகப்படுத்தினால் அதன் விளைவு கணக்கில் அடங்காதது என்று நினைத்ததே அவரது தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்குக் காரணமாகும்.
இன்றைய தினத்தில் முப்பது லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ரிலையன்ஸ் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களில் தங்களின் பணத்தை முதலீடு செய்திருக்கிறார்கள்.
சாதாரண மக்களும் பங்கு சந்தையில் ஈடுபட்டு அதிக லாபம் சம்பாதிக்கலாம். தங்கள் வாழ்க்கை வளத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் என்னும் ஆர்வத்தை தூண்டியது ரிலையன்ஸ் என்று கூறினால் அது மிகையல்ல.
தற்சமயம் குஜராத் மாநிலத்தில் இருக்கும் ஜீனகத் என்னும் நகரத்தில் 1932 ஆம் ஆண்டு பிறந்தவர். தந்தை ஒரு பள்ளி ஆசிரியர். இளமையிலேயே பணம் சம்பாதிப்பதில் அதிக நாட்டத்துடன் காணப்பட்டார். விடுமுறை நாட்களில் அதிக அளவில் டூரிஸ்ட்டுகள் வரும் இடங்களுக்குச் சென்று உணவுப் பண்டங்களை விற்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
படித்தது பள்ளி இறுதி வகுப்பு வரை தான். தனது பதினாறாவாது வயதில் ஓமன் நாட்டில் உள்ள ஓடன் என்னும் இடத்திற்குச் சென்று அங்குள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரிந்தார். தன்னுடைய திறமையால் அந்த நிறுவனத்தில் முக்கிய பதவியை வகித்தார்.
அவர் வேலையில் இருந்தாலும் அவருடைய எண்ணமெல்லாம் ஒரு தொழிலதிபராக ஆக வேண்டும் என்பதிலேயே இருந்தது.
இந்தியா திரும்பிய அவர் 1962 ஆம் ஆண்டில் ‘ ரிலையன்ஸ் கமர்ஷியல் கார்ப்பரேஷன் ’ என்னும் நிறுவனத்தை தனது உறவினரான சம்பக்லால் தமானி என்பவருடன் சேர்ந்து வெறும் 15000 ரூபாய் ( ஆம் வெரும் பதினைந்தாயிரம் ரூபாய்த்தான் அந்த எண்ணோடு லட்சங்களோ கோடிகளோ இல்லை ) முதலீட்டுடன் தொடங்கினார்.
அப்போது அவருக்கு வயது முப்பது தான். அந்த நிறுவனம் 350 சதுர அடி அளவே உள்ள ஒரு அறையைல் ஒரே ஒரு தொலைபேசி, ஒரு மேஜை, மூன்று நாற்காலிகளுடனும் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இரண்டு உதவியாளர்கள் அவர்களுடன் சேர்ந்து பணி புரிந்தனர்.
அந்த காலகட்டத்தில் அம்பானியின் குடும்பம் ஒரே ஒரு படுக்கையறையுள்ள ஒரு இடத்தில் வசித்து வந்தது. இன்று அம்பானி குடும்பத்தின் வளர்ச்சி எல்லாரும் அறிந்ததே.
இதற்கு எல்லாம் வழிகாட்டியவர் திருபாய் அம்பானி என்பதும் அவர் முதல்முதலில் சொந்தமாக தொழில் புரியத் தொடங்கியபோது அவருக்கு வயது முப்பது என்பதும் குறிப்பிடத்தக்கது.

                           (படித்ததில் பிடித்தது)

ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங்

                                                       
     Image result for ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங்


அமெரிக்காவில் இனவெறியை எதிர்த்து போராடியவர். அமெரிக்காவில் அந்த காலக்கட்டத்தில் ஆப்பிரிக்க – அமெரிக்கர்கள் கருப்பர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களுக்கு பள்ளிகளில் தனி இடம், ஓட்டல்களில் தனி இடம், பேருந்துகளில் கூட தனி இடம் தான்.
இப்படிப்பட்ட காலக்கட்டத்தில் பிறந்த மார்ட்டின் லூதர் கிங், இத்தகைய வேறுபாடுகள் நியாமானது அல்ல இவற்றிற்கு முடிவு காண வேண்டும் என்று தீவிரமாக சிந்தித்து செயல்பட்டு வந்தார்.
மகாத்மா காந்தி காட்டிய வழியில் சாத்வீகமான போராட்டங்கள் நடத்தினார். மக்களின் ஆதரவைத் திரட்டி கூட்டங்கள் நடத்துவது, பத்திரிக்கைகள் மற்றும் இதர ஊடகங்களின் ஆதரவைத் திரட்டுவது, அநீதிக்கு எதிராக போராடுவது இது போன்ற வழிகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தினார்.
அவரது வரவேற்பு அறையில் மகாத்மா காந்தியின் படம் இருந்தது. 1955 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் நாள் இவர்கள் இனத்தை சார்ந்த ரோஸாபார்க்ஸ் என்னும் பெண்மணி, ஒரு வெள்ளையனுக்கு பேருந்தில் தான் உட்காந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து இடம் தர மறுத்தது பெரிய போராட்டத்தை உருவாக்கியது. மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் போராட்டம் நடந்தது.
1956 ஆம் வருடம் இது மாதிரி வித்தியாசம் பாராட்டுவதை சட்டப்பூர்வமாக அனுமதிக்கக் கூடாது என்று நீதி மன்றம் தீர்ப்புக் கூறியது.
1963 ஆம் ஆண்டில் வேறு பல துறைகளிலும் வெள்ளையர்களுடன் சம உரிமை வேண்டும் என்று போராடுவதற்கு, வாஷிங்டனில் உள்ள லிங்கன் மெமோரியல் ஹால் எதிரே 2,50,000 பேர்களைத் திரட்டி போராட்டம் நடத்தினார். “ நான் ஒரு கனவு காண்கிறேன் ” என்று தொடங்கும் இவரது உரை உலக புகழ் பெற்றது.
     வாஷிங்டன் சரித்திரத்திலேயே ஒரு போராட்டத்திற்காக அவ்வளவு பேர் கூடியது அந்த சம்பவத்தில் தான். இன்று அமெரிக்காவில் ஆப்பிரிக்க – அமெரிக்கர்கள் சம உரிமைகளைப் பெறுவதற்கு மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் சாத்வீகமான போராட்டங்கள் பெரிதும் உதவின.
     இவரது சேவையை பாராட்டி இவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு 1964 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 35 தான். நோபல் பரிசு வாங்கியவர்களிலேயே அத்தகைய காலக்கட்டத்தில் மிகவும் வயது குறைந்தவர் இவர் தான்.
     1968 ஜனவரி மூன்றாம் நாள் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது நினைவு நாள் அன்று அமெரிக்காவில் தேசிய விடுமுறை நாளாக நடைமுறையில் உள்ளது.

                                ( படித்ததில் பிடித்தது )

திங்கள், 6 ஜூன், 2016

நாம் எல்லோரும் மே டின் இந்தியாவா?


Image result for made in india logo

நாம் தினமும் உபயோகப்படுத்தும் பொருட்களில் பெரும்பாலானவை வெளிநாட்டுத் தயாரிப்புக்களாகவே உள்ளன. அதை நாம் பெரிதும் கண்டுக்கொள்வதில்லை. உதாரணமாக இந்தியாவில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் பொருட்களையும் அவற்றை உற்பத்தி செய்யும் நாடுகளையும் பார்ப்போம்.
சோப்பு;
லக்ஸ் – ஐக்கிய இராஞ்சியம் (UK)
டவ் – ஐக்கிய இராஞ்சியம் (UK)
பியர்ஸ் – இங்கிலாந்த்
டெட்டால் – ஐக்கிய இராஞ்சியம் (UK)
லைபாய் – அமெரிக்கா
கைபேசி;
சாம்சங் – தென் கொரியா
நோக்கியா – பின்லாந்த்
மைக்ரோ சாப்ட் – அமெரிக்கா
பிலாக் பெரி – ஹங்கேரி
சோனி – ஜப்பான்
மடி கணினி;
ஹச்பி – ஐக்கிய இராஞ்சியம் (UK)
டெல் – ஐக்கிய இராஞ்சியம் (UK)
ஆப்பிள் – கலிபோர்னியா
வையோ – ஜப்பான்
லெனோவா – சீனா
தொலைக்காட்சி;
சோனி – ஜப்பான்
எல்ஜி – தென் கொரியா
பிலிப்ஸ் – நெதர்லாந்த்
ஹிடாச்சி – ஜப்பான்
சாம்ப்;
சன் சில்க் – ஐக்கிய இராஞ்சியம் (UK)
பேண்டீன் – சுஜர்லாந்து
ஹெட் அண்ட் சோல்ஜர்ஸ் – அமெரிக்கா
இப்படி நாம் உபயோகப்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் வெளிநாட்டின் தயாரிப்புகளாகவே உள்ளன. ஆனால் பெரும்பாலான வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் தங்கள் நாட்டின் தயாரிப்புகளுக்கே முக்கியத்துவம் தருகின்றன. உதாரணமாக சீன மக்கள் சீன நாட்டின் தயாரிப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் தருகின்றன. அது போல ஒரு இந்தியராக இருந்து கொண்டு இந்தியாவின் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டியது நமது கடமை. ஆனால் அவ்வாறு நாம் செய்வது இல்லை. இந்தியாவின் தயாரிப்புகளுக்கு இந்தியாவிலேயே முக்கியத்துவம் இல்லாத போது உலக அளவில் எவ்வாறு முக்கியத்துவம் பெறும்.
நாம் ஒரு பொருளை வாங்கும் போது அது எந்த நாட்டின் தயாரிப்பு என்று பார்ப்பதே இல்லை என்பதே இதற்கு முக்கியமான காரணம் ஆகும். இனிமேலாவது இந்தியாவின் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முயற்சிப்போம்.


சர் விஸ்வேஸ்வரய்யா

                                                           
Image result for விஸ்வேஸ்வரய்யா


ஆங்கிலேயர் ஆட்சியில் இவரின் பொது சேவையை பாராட்டி இவருக்கு ‘சர்’ பட்டம் வழங்கப்பட்டது.
     சுகந்திர இந்தியாவில் மிக உயர்ந்த ‘ பாரத ரத்னா ’ விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவர் தலைசிறந்த பொறியியலாளர் ஆவார். இவரது நினைவாகவே செப்டம்பர் 15 ஆம் நாள் இந்தியாவில் “பொறியாளர் தினம்” கொண்டாடப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் அன்றைய தினம் விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
     மைசூருக்குச் செல்பவர்கள் கிருஷ்ணராஜ சாகர அணைக்கட்டுக்குச் செல்லாமல் திரும்பி வரமாட்டார்கள். அதை உருவாக்கியவர் சர் விஸ்வேஸ்வரய்யா தான்.
     சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சியில் முதல்முதலில் மின்சார உற்பத்தியை தொடங்கியவர் இவர் தான். மைசூர் சாண்டல் சோப் பேக்டரி தொடங்க காரணமாக இருந்தவர் இவர் தான்.
     பத்ராவதி இரும்பு உற்பத்தி தொழிற்சாலை, பெங்களூர் விவசாய பல்கலைக் கழகம், மைசூர் சர்க்கரை ஆலை போன்ற இன்னும் பல தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஆதரவு அளித்தார். ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் தொடங்குவதற்கும் ஆதரவு அளித்தார்.
     திருமலை - திருப்பதி சாலை அமைப்பதற்கும் முன்னின்று ஆலோசனைகள் வழங்கினார். பெங்களூரில் பொறியியல் கல்லூரி நிறுவ ஆதரவு அளித்தார். மைசூர் பல்கலைக் கழகம் நிறுவ காரணமாக இருந்தவரும் இவரே.
தற்போது ‘ கர்நாடகா ’ என்று வழங்கப்படும் மாநிலம் அவரது காலக்கட்டத்தில் மைசூர் மாநிலம் என்றே கூறப்பட்டு வந்தது. மைசூர் மாநிலத்தின் தந்தை என்று சர் விஸ்வேஸ்வராய்யா ஆராதிக்கப்பட்டு வருகிறார்.
அவரது பெயரால் பல பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவரது நூற்றாண்டு விழாவின் போது பெங்களூரில் “ விஸ்வேஸ்வரய்யா இண்டஸ்ட்ரியல் அண்ட் டெக்னாலஜிகல் மியூசியம்” என்று ஒரு மியூசியம் ஆரம்பிக்கப்பட்டது. பெங்களூர் செல்பவர்கள் தவறாமல் சென்று பார்க்கும் மியூசுயம் இது. இவர் படித்து பொறியியல் பட்டம் பெற்ற பூனா பொறியியல் கல்லூரியில் இவரது உருவச்சிலை நிருவப்பட்டுள்ளது.
உண்மை, உழைப்பு, நேர்மை, தேசபக்தி என்று வாழ்ந்தவர். மிகவும் எளிமையாக வாழ்ந்தவர். 1860 ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1962 ஆம் ஆண்டு மறைந்தார். அப்போது அவருக்கு வயது 102 ஆகும்.
                           ( படித்ததில் பிடித்தது )