வியாழன், 2 ஜூன், 2016

எங்கள் வலைப்பூவின் வண்ணங்கள்..!!




பேரன்புடையீருக்கு வணக்கம்,

எங்கள் வலைப்பூவின்  இப்பதிவு மிகவும் முக்கியமான ஒன்றாக அமையவுள்ளது.வலைப்பதிவர்களுக்கும்,வாசகர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.

புதன், 1 ஜூன், 2016

அனி ஃப்ராங்க்

                                                          
Image result for anne frank

1942 ஆம் காலகட்டத்தில் அந்தச் சிறுமி எழுதிய நாட்குறிப்பு உலகப் புகழ் பெற்றது.
     ஜெர்மெனியை ஹிட்லர் ஆண்ட காலகட்டம். ஹிட்லர் மது அருந்துவதில்லை. சைவ சாப்பாடு. சித்திரம் வாரைவதில் ஆர்வம் உண்டு. இது போன்ற நல்ல குணங்கள் கொண்ட ஒருவர் மிகவும் நல்லவராகத்தானே வாழ்ந்திருக்க வேண்டும்!
     ஆனால் அவ்வாறு இல்லை. மிகவும் கொடூரமானவனாக வாழ்க்கை நடத்தினார். யூதர்களைக் கண்டால் அவ்வளவு வெறுப்பு. லட்சக்கணக்கான யூதர்களை விஷ வாயு உள்ள ஒரு அறையில் அடைத்து அந்த விஷக் காற்றை அவர்கள் சுவாசிக்கச் செய்து மடிய வைத்தவர். அந்த காலகட்டத்தில் அறுபது லட்சம் யூதர்கள் இவ்வாறு கொல்லப்பட்டனர். அனி ஃப்ராங்க் யூத இனத்தை சேர்ந்தவள்.
     1923 ஆம் ஆண்டில் ஃப்ராங்க்பர்ட்டில் பிறந்தவர் அனி ஃப்ராங்க். அவரது பெற்றோர்கள் 1933 இல் ஆம்ஸ்டர்டாம் வந்தார்கள். 1941 காலகட்டத்தில் ஹிட்லரின் ஆட்கள் யூதர்களை துன்புறுத்த ஆரம்பித்தார்கள்.
அந்த காலகட்டத்தில் அனி ஃப்ராங்கும் இன்னும் சிலரும், ஓட்டோ ஃபிராங்க் என்பரவது வீட்டில் அடைக்கலம் புகுந்தனர். இவரது வீட்டில் ஒரு புத்தக அலமாரி இருந்தது. அதன் பின் ஒரு ரகசிய அறை இருந்தது. அனி ஃப்ராங்க்கும் மற்றவர்களும் அந்த சிறிய அறையில் தான் தங்கி இருந்தார்கள். அனி ஃப்ராங்க் தான் ரசித்தது, பார்ததது, தன்னை பாதிக்க வைத்தது, பார்த்து கொதித்தது போன்ற பல சம்பவங்களை மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ள படியே எழுதி வந்தார். 1942 ஆம் வருடம் ஜூன் மாதம் 12 ஆம் தேதி முதல் எழுத ஆரம்பித்தார். 1944 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி வரை எழுதி இருக்கிறார். இந்த நாட்குறிப்பு ஹிட்லரின் காலக்கட்டத்தில் நடந்த கொடுமைகளையும் சித்தரிக்கிறது.
     இந்த நாட்குறிப்பு உலகின் பல மொழிகளில் பிரசுரமாகி இருக்கிறது. தான் எழுதிய நாட்குறிப்பு புத்தகத்தை தனது நெருங்கிய நண்பனாகக் கருதினாள். அனி ஃப்ராங்க் தங்கியிருந்த இடம் தற்போது ஒரு அருங்காட்சியகமாக 1960 முதல் திகழ்ந்து வருகிறது. அங்கே அவர் கைப்பட எழுதிய அவரது நாட்குறிப்பு புத்தகமும் காணப்படுகிறது.
     பிற்காலத்தில் உலகப் புகழ் பெற்ற இந்த நாட்குறிப்பை, மரண பயத்துடன் எழுத தொடங்கும் போது அவருக்கு வயது 13 தான்.
     போர் வகை இலக்கியத்தில் உன்னதப் படைப்பான இந்நூல் 1947 இல் ஆங்கிலத்தில் “தி டயரி ஆப் தி யங் கேல்” என்னும் பெயரில் வெளிவந்தது.

                                     (படித்ததில் பிடித்தது)

பள்ளியின் முதல் நாள்...

                                      
Image result for பள்ளியின் முதல் நாள்

என்னமோ பட்டப்படிப்பு படிப்பது போல
தேவையானதை எல்லாம் தயார் செய்ததும்!
அ, ஆ போட்டு போட்டு பழகியதும்!
போகும் வழியில் அனைவரிடமும் பள்ளிக்குச்
செல்வதை தெரியமாய் கையசைத்து கூறியதும்! ஆனால்
பள்ளியில் நுழைந்ததும் பயம் தொற்றிக்கொண்ட நிமிடங்களும்!
காதிற்கு கை எட்டவில்லை என்றாலும் எட்டி எட்டி
     காதை தொட்டு ஏமாற்றியதும்!
அம்மாவின் கையை பற்றி இருக்கும் வரை
     இருந்த அந்த நம்பிக்கை ஆசிரியர் என்
கையை பிடித்து கூப்பிடும் போது கண்ணீராய் கரைந்ததுமாக
     இப்படி, கண்களில் கண்ணீர் வடித்த அந்த
பள்ளி முதல் நாள் இன்று நினைத்தால்
     இதழ்களில் புன்னகை தவழ்கிறது!

    



வலைத்தளம் ’திறப்பதற்கு’ அதிக நேரமாகிறதா..??





உங்கள் வலைத்தளம் (ஓபன்) திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறதா..??அப்படியானால் நீங்கள் படிக்க வேண்டிய விஷயமாக  இப்பதிவு அமையவுள்ளது.

பென் டிரைவில் வைரஸ் தாக்கினால்..!!!






தற்போது தகவல்களைச் சேமிக்கப் பயன்படுத்தப்படுவை யு.எஸ்.பி,பென் டிரைவ்கள்.இதில் முக்கியமான பிரச்சனை ’வைரஸ்’ தான்.வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென் டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கும் வாய்ப்பு அதிகம்.
அவ்வாறு பாதிக்கும் போது உங்கள் பென் டிரைவில் உள்ள பைல்கள்  மறைக்கப்பட்டு விடும்.கணினியில் பென் டிரைவை திறந்தால் எந்த பைலும் இருக்காது.காலியாக இருக்கும்.ஆனால் ‘பிராப்பர்டீஸ்’ சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும்.காரணம் நம் தகவல்களை வைரஸ் மறைத்து வைத்துவிட்டது.
பென் டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை என்றால் பார்மட்(format) செய்து பென் டிரைவை திரும்பப் பெறலாம்.ஆனால் ஏதேனும் முக்கியமான தகவல்கள் இருந்தால் எப்படி அந்தப் பைல்களை பத்திரமாக மீட்பது என்று பார்ப்போம்.
இதற்கு நீங்கள் எந்த மெனபொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாகச் செய்துவிடலாம்.கீழே உள்ள வழிமுறைகளை கவனமாகப் பின்பற்றி பைல்களை மீட்டெடுக்கலாம்.
 



1.முதலில் பென் டிரைவை உங்கள் கணினியில் செருகிக் கொள்ளுங்கள்.
2.Start-Run-CMD-Enter கொடுக்கவும்.
3.இப்பொழுது பென் டிரைவ் எந்த டிரைவில் உள்ளது என்று பாருங்கள்.மை கம்ப்யூட்டர் செல்வதன் மூலம் அதைக் கண்டறியலாம்.
4.உதாரணமாக E என்ற டிரைவில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.அதற்கு நீங்கள் E என்று கொடுத்து ‘என்டர்’ அழுத்த வேண்டும்.
5. attrib s h/s/d *.* என டைப் செய்யுங்கள்.ஒவ்வொரு பகுதிக்கும் சரியான ஸ்பேஸ் கொடுக்கவும் .நீங்கள் சரியாகக் கொடுத்துள்ளீர்கள் என்று உறுதி செய்துகொண்டு என்டரை அழுத்துங்கள்.சில வினாடிகள் பொறுத்திருங்கள்.இப்போது உங்கள் பென் டிரைவை சோதித்துப் பாருங்கள்.பைல்கள் அனைத்தும் திரும்ப வந்திருக்கும்.