வெள்ளி, 13 மே, 2016

நமது உடலும் ஒரு தொழிற்சாலையாம்..!!





ஓர் ஆரோக்கியமான மனித  உடலில் 46 லிட்டர் நீர் இருக்கிறது.

7 சோப்புக்கட்டிகள் செய்வதற்கு தேவையான கொழுப்புப் பொருள் உள்ளது.

900 பென்சில்கள் செய்வதற்கு தேவையான கார்பனும் 2200 தீக்குச்சிகள் செய்வதற்கு தேவையான பாஸ்பரசும்,2 அங்குல நீள ஆணி செய்வதற்கு தேவையான இரும்பும் உள்ளன.

ஒவ்வொரு மனித உடலிலும் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருக்கிறது.இதில் 25 கோடி ரத்த அணுக்கள் உள்ளன.இவற்றைக் கொண்டு 3000 சதுர மீட்டர் பரப்புள்ள சுவருக்கு  வண்ணம் அடிப்பது போது பூசி மெழுகலாம்.

25 வாட் மின் பல்பு சில நிமிடங்கள் எறியத் தேவையான மின்சாரம் நம் உடலில் உள்ளது.

வியாழன், 12 மே, 2016

வலைப்பூக்களின் பூந்தோட்டங்கள்..!!



ஒரு மொழியின் அடையாளம் என்பது அதற்கு தரும் முக்கியத்துவத்தை பொறுத்தது.உலக முழுவதும்  பல்வேறு மொழிகளால்  ஆட்சி செய்யப்பட்டு வருகிறது.உலக மொழிகள் எவ்வளவு இருந்தாலுமே நமது தமிழ் மொழிக்கென்று ஒரு தனிச் சிறப்புண்டு.ஒரு காலக்கட்டத்தில் குமரி முதல் இமயம் வரை அனைவராலும் பேசப்பட்ட மொழி தமிழ் மட்டுமே.ஆனால் இன்று தமிழ் மொழி குறைவாகவும் அன்னிய மொழிகள் அதிகமாகவும் பேசப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு தமிழனின் அடையாளம் அவர்களின் தாய்மொழியான தமிழ் மொழியே.அதற்கு உதாரணமாக இந்த பதிவு அமைய உள்ளது.
நம் இந்தியாவில் மட்டுமல்லாமல் பிற நாடுகளில் வசித்து தமிழர்களால் தமிழ் மொழி உயிர் பெற்று வருகிறது.தமிழின் ஓசை பல்வேறு திசையில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது..தமிழ் வலைப்பூக்கள் மூலமாக தமிழ் மொழி மணம் வீசி வருகிறது.வேறு நாட்டில் வசித்தாலும் அந்த நாட்டு மொழிக்கு அடிமையாகாமல் தனது அடையாளமான தமிழ் மொழியில் பதிவுகளை தருகின்றனர்.இப்படி பல்வேறு தமிழ் வலைப்பூக்கள் ஒன்று சேர்ந்து தமிழ் மணம் வீசி வரும் பூந்தோட்டங்கள் சில உள்ளன.அவை,




செவ்வாய், 10 மே, 2016

மரம் வளர்ப்போம்!! புவியை காப்போம்!!



                மரம் வளர்ப்போம்!! புவியை காப்போம்!!

முன்னுரை

 



      கோடை காலம் என்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. காலம் செல்ல செல்ல வெப்பம் அதிகரிக்கிறதே இன்றி குறைந்தபாடில்லை.இதற்கு முக்கிய காரணம் புவி வெப்பமாதல் தான். புவி வெப்பமடைய காரணங்கள் பல. அவற்றுள் முக்கியமான காரணம் மரங்களை வெட்டுவதுதான்.
மரம் என்றாலே நன்மை தான்
      மரங்களும் குழந்தைகளைப் போலத் தான் விதை மண்ணில் விழுந்து சிறு செடியாய் முளைத்து அது மெல்ல மெல்ல வளர்ந்து மரமாகிறது. ஒரு செடி மரமாக வளர குறைந்தது 2 ஆண்டுகளாவது ஆகும். புவியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் ஆயுட்காலம் உண்டு. ஆனால் ஆயுட்காலம் இல்லாத ஒரே உயிர் மரம் மட்டும் தான். மனிதர்களாலும் இயற்கையாலும் எந்தவித இடையூறும் ஏற்படாத வரை மரங்கள் எத்தனை ஆண்டு காலம் வேண்டுமாலும் புவியில் உயிர்வாழ முடியும். மரங்கள் நமக்கு தரும் நன்மைகள் பல. எதை எடுத்துக்கொண்டாலும் நன்மை தீமை என்று இரு பக்கம் இருக்கும். நன்மை மட்டுமே அதிக அளவில் நிறைந்திருக்கும் ஒரே உயிர் மரம் தான்.
புவி வெப்பமடைதலை தடுக்கிறது
       மரங்களால் உயிரனங்கள் அடையும் நன்மைகள் பல பல. மரங்கள் புவி வெப்பமாதலைத் தடுக்கிறது. மரங்கள் வாகனங்களில் இருந்து வெளிவரும் கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது. இதனால் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும் அதிக கார்பன் வெளியேற்றதாலும் 2000 ஆண்டு வரை 25% மாக இருந்த புவி வெப்பம் இன்று 37%மாக அதிகரித்துள்ளது. இவற்றை கட்டுப்படுத்தும் திறன் மரங்களுக்கு மட்டுமே உண்டு. நன்றாக வளர்ந்து முதிர்ந்த ஒரு மரம் ஒரு ஆண்டில் 48 பவுண்ட் கார்பன்-டை-ஆக்ஸைடை இழுத்துக் கொள்கிறது.

வெள்ளி, 6 மே, 2016

சரணாலயம் – ஓர் அறிமுகம்



சரணாலயம் – ஓர் அறிமுகம்
    இந்த பகுதியானது தமிழக அரசின் 1972 வருட வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் பிரிவு 26(1)ன் கீழ் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அரசானை எண் 44 நாள் 29.2.2000ன் படி அரசிதழில் அறிவிக்கப்பட்டு 22.03.2000 அன்று சரணாலயமாக உருவெடுத்தது.
    வடமுகம் வெள்ளோட்டில் அமைந்துள்ள பெரியகுளம் ஏரியில் (புல எண் 584) 75.935 ஹெக்டேர் பரப்பும், ஓடை புறம்போக்கில் அமைந்துள்ள (புல எண் 503) 1.250 ஹெக்டேர் பரப்பும் சேர்த்து மொத்தம் 77.185 ஹெக்டேரில் இந்த பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
     இந்த பகுதி அதிக அளவில் புலம் பெயர்ந்து வரும் பறவைகளுக்கும், குடியிருக்கும் பறவைகளுக்கும் தொடர்ந்து ஒரு சிறந்த புகழிடமாக இருந்து வருவதால் இங்கு வருகை புரியும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.    


சரணாலதயத்தை பார்வையிட உகந்த காலம்
    ஜூலை முதல் செப்டம்பர் வரை பறவைகள் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்வதை காண உகந்த மாதங்கள். அக்டோபர் முதல் பிப்ரவரி வரையான மாதங்கள் அதிக அளவில் புலம் பெயர்ந்து வருகை புரியும் பறவைகளை காண்பதற்கு உகந்த மாதங்கள். மார்ச் முதல் ஜூன் மாதங்கள் இங்கு குடியிருக்கும் பறவைகளின் இனப்பெருக்கத்தை காண உகந்த மாதங்கள்.

பறவைகள்
     வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் தங்கி வாழும் பறவைகள் தவிர இடம் பெயர்ந்து (வலசை) வாழும் பறவைகளும் பெரிய அளவில் வருகை புரிகின்றன. இவற்றில் சுமார் 25 வகையான நீர் பறவை இனங்கள் அடங்கியது. இடம் பெயரும் (வலசை) பறவைகள் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகும் நேரத்தில் சரணாலம்  வரத் தொடங்கும். சரணாலத்தில் உள்ள  குளம், சதுப்புநிலம், மரங்கள் மற்றும் புகழிடத்தின்  அருகில் உள்ள விவசாய வயல்வெளிகளில் பறவைகளுக்கு தேவையான அளவு மீன்கள், பூச்சிகள், மற்ற உணவுப்பொருட்கள் கிடைப்பதற்கும், பறவைகள் ஓய்வு எடுப்பதற்கும், கூடுகட்டி முட்டைகள் இடுவதற்கும் உகந்த வாழ்விடமாக திகழ்கிறது. சரணாலயத்தில் தங்கி வாழும் பறவை இனங்களுக்கு தேவையான மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் இக்குளத்தில் ஏராளமாக உள்ளன.




   சமீபத்திய கணக்கெடுப்பின்படி 150 வகைக்கும் மேற்பட்ட நிலம் சார்ந்த மற்றும் நீர்வாழ் பறவையினங்களை உள்ளடக்கி மொத்தம் 27,000 க்கும் மேற்பட்ட பறவைகள் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் உண்ணிக்கொக்கு, சின்னக்கொக்கு மற்றும் சிறிய நீர்காகம் போன்ற வகைகள் அதிகமாக இருக்கின்றன.



மூவிடம்



                                     

இடம் மூன்று வகைப்படும். அவை
                        தன்மை
                        முன்னிலை
                        படர்க்கை
தன்மை
தன்னைப் பற்றி கூறும் சொல் தன்மை இடமாகும்.

எடுத்துக்காட்டு- நான் எழுதினேன், நாங்கள் எழுதினோம், நான் செய்தேன்

முன்னிலை
நமக்கு முன்னால் இருப்பவரைக் குறிப்பது முன்னிலை இடமாகும்.

எடுத்துக்காட்டு- நீ கேட்டாயா?, நீங்கள் கேட்டீர்களா?

படர்க்கை
தன்னையோ, முன்னால் நிற்பவரையோ குறிக்காமல் வேறு ஒரு மூன்றாவது நபரைக் குறிப்பது படர்க்கை இடமாகும்.
படர்க்கை உயர்திணை அஃறிணை என்று இரு வகைப்படும்.

எடுத்துக்காட்டு- அவன், அவள், அவர்கள் – படர்க்கை உயர்திணை
                அவை, அது – படர்க்கை அஃறிணை