(படித்ததில் பிடித்தது)
சனி, 5 மார்ச், 2016
அலெக்சாண்டரின் அறிவுக் கண் திறந்த நிமிடம்
(படித்ததில் பிடித்தது)
தண்ணீா் மோசம்
முந்தைய காலத்தில் வாழ்ந்த மக்கள்
ஆரோக்கியமாகவும் நோய்கள் தாக்காமலும், நீண்ட
நாள்கள் வாழ்வதற்கு காரணமானவை அவர்கள் மேற்கொண்ட உணவு முறைகளும் சுத்தமான தண்ணீருமே
ஆகும். அவர்கள் நன்னீரை அருந்தி ஆரோக்கியமான
வாழ்வை மேற்கொண்டனர்.
அப்போதெல்லாம் மக்கள் தனியாக சுத்திகரிப்பானைக்
கொண்டெல்லாம் தண்ணீரை சுத்தம் செய்வதில்லை.
ஆனால், தற்போது தண்ணீரை சுத்தம் செய்வதற்காக பற்பல நவீன கருவிகளை பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் நீரில் உள்ள பல சத்துக்கள் (மினரல்ஸ்)
நீக்கப்படுகிறது.
இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட நீரை
பருகுவதால் அதில் உள்ள மினரல்கள் நீக்கப்படுவதாலும் மனிதனுக்கு சிறுநீரககல் ஏற்படுகிறது. சிறுநீரககல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் மினரல்
வாட்டரே என்கிறார்கள்.
முந்தைய காலத்தில் எல்லாம் பானையில்
நீரை ஊற்றி வைப்பார்கள். நீரில் உள்ள கசடுகள்
அனைத்தும் பானையின் துவாரங்களில் சென்று தங்கிவிடும் அதுவே உண்மையில் சுத்திகரிக்கப்பட்ட
நீர் ஆகும். ஆனால் தற்போது சுத்திகரிப்பு என்ற பெயரில் நீரை மாசுபடுத்துகிறோம். மேலும் அந்த நீரை நெகிழி பொருள்களில் சேமித்து வைத்துக்கொள்கிறோம். இதுதான் நம் இந்திய கலாச்சார முறையா?
மேலும், நம் முன்னோர்கள் அனைவரும்
இயற்கையாக கிடைக்கும் ஆறு, கிணறு நீரையே குடிக்கப் பயன்படுத்தினர். ஆனால், தற்போது அவையனைத்தும் கழிவு நீர்களாகவே நமக்கு
கிடைக்கின்றன.
“ஒவ்வொரு ஒரு லிட்டர் தண்ணீரிலும்
ஒரு துளி கழிவு(மலம்) உள்ளது” என கூறுகின்றனர்.
இதற்கு காரணம் இந்தகால தலைமுறை மக்கள் ஆறு, கடல்களில் தான் அனைத்து வகையான கழிவும்
பொருள்களையும் சோ்க்கின்றனர். உடை துவைப்பது,
கால்நடைகளை குளிப்பாட்டுவது, மேலும் சாக்கடைக் கழிவுகள் போன்ற எல்லா வகையான கழிவும்
இதில் சேர்க்கப்படுகிறது.
“கறந்த பாலை போல சுத்தமானது மழைநீர்”
ஆனால், அந்த மழைநீரிலும், அதற்கு உதாரணமாக சொல்லப்படும் இந்த பாலிலும் கூட கலப்படமும்,
கழிவும் கலந்துவிட்டன. அமிலமழை போன்ற மழைகளும்
மேலும் செயற்கையான மழைகளும் கூட வந்துவிட்டன.
ஆண்டு மும்மாரி மழைப்பொழியும் என்பது மாறி நினைத்த போதெல்லாம் பெய்கிறது. சில நேரம் மழை பெய்யாமல் பொய்த்துவிடுகிறது.
முந்தைய காலத்தில் நம் மக்கள் வழிப்போக்கர்கள்
இளைப்பாறுவதற்காகவே தண்ணீர் பந்தல் அமைத்து இலவசமாக தண்ணீர் வழங்கினார். ஆனால் தற்போது பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை
ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் நாம் தண்ணீரைப்
பாதுகாக்காமல் விட்டதும், மரங்களை அழித்து மழையை தடுத்ததே ஆகும்.
மேலும் மனித உடலில் 70% நீரால்
ஆனது. அந்த 70% நீரும் அசுத்தத்தால் நிரப்பப்பட்டால்
உடல் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை சிந்திக்க வேண்டும்.
மேலும் உலகில் 1% மட்டுமே நன்னீர்
உள்ளது. நாம் அந்த 1% நீரையும் பல கழிவுகள்
மூலம் அசுத்தம் செய்கிறோம். பின் உப்புநீரை
குடிநீராக்கும் திட்டம் என ஆரமித்து மீண்டும் அந்த நீரை சுத்தம் செய்யும் பெயரில் அனைத்து
நல்ல மினரல்களையும் அழித்துவிடுகிறோம்.
நம் முந்தைய தலைமுறைகள் நமக்கு
விட்டுச் சென்ற இயற்கையை சிறிதாவது நாம் நமக்கு அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்வோம். இனியாவது இயற்கையையும், நன்னீரையும் மாசுபடுத்தாமல்
பாதுகாப்போம்.
மரங்களை வளர்த்து, இயற்கையை
காப்போம்!!!
நன்னீரை காத்து தலைமுறையை வளர்ப்போம்!!!
வெள்ளி, 4 மார்ச், 2016
சாதனை பெண்கள்
அக்காலத்து பெண்கள்:
அன்றைய காலத்தில்
பெண்களுக்கு சுதந்திரம் என்ற ஒன்று இல்லாமல் அடிமைவாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். அன்றைய காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூட பயப்படுவார்கள். அடுப்பங்கரையை
விட்டு எங்கும் சென்றது இல்லை.தன் கணவனைக்கூட நிமிர்ந்து பார்காமல் இருந்தார்கள். ஒரு
சில பெண்கள் மட்டுமே அவர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு வந்தனர்.அன்றைய காலத்து பெண்களுக்கு
சமுதாயத்தில் ஒரு இடம் கூட இல்லை. அன்றைய காலத்தில் பெண்களைவிட ஆண்கள் தான் முதல் இடத்தில்
இருந்தனர்.
இக்காலத்து பெண்கள்:
இன்றைய காலத்து பெண்கள் ஆண்களுக்கு இணையாக வாழ்ந்து வருகிறார். அடுப்பங்கரையில் இருப்பதைவிட சாதனை செய்பவர்கள்தான் அதிகம்.எந்தத்துறையிலும்
பெண்கள் இல்லாத துறையே இல்லை. பெண்கள் தன் வாழ்க்கையை தானே தேர்ந்தெடுக்கும் அளவிற்க்கு உயர்ந்து கொண்டு இருக்கின்றனர். பள்ளி, கல்லூரி போன்ற இடங்களில் பெண்களும் முதல் இடத்தில்
இருக்கின்றார். இன்றைய காலத்து பெண்களுக்கு சமுதாயத்தில் ஒரு இடம் இருக்கிறது. ஆனால்
திருமணம் என்று வந்தால் கட்டாயப்படுத்திதான் அதிகமாக திருமணம் நடத்துகிறார்கள். தன்னை
சுற்றியுள்ளவர்களுக்கு பிடித்தால் மட்டுமே திருமணம் நடக்கிறது. அதுவே பெண்களுக்கு பிடித்தவனை
திருமணம் செய்து வைப்பது இல்லை. இன்றைய காலத்தில் மகளிர் கல்லூரி என இருக்கிறது, எங்கயாவது
ஆண்கள் கல்லூரி என இருக்கிறதா!.
நாலடியார்
கல்வியே சிறந்த செல்வம்;
பாடல்:
கல்வி கரை இல; கற்பவர் நாள் சில;
மெல்ல நினைக்கின், பிணி பல; தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, நீர்
ஒழியப்
பால் உண் குருகின் தெரிந்து.
பொருள்:
கல்வி வைத்த இடத்திலிருந்து பிறரால்
கவர்ந்து கொள்ள முடியாது. தமக்கு கிடைத்த கல்வியை பிறருக்கு கொடுப்பதால் கல்வி அறிவு
பெருகுமே தவிர அழிய வாய்ப்பு இல்லை.மேலான படை வலிமையுடை மன்னர் சினத்தாலும் கவர்ந்து
கொள்ள முடியாது.
தாயன்பு
தாயன்பு
தாய் குழந்தையிடத்தில்
வைக்கும் அன்பு மேலானது. தாய் பதில் பலனை எதிர்பாராது குழந்தையிடத்தே அன்பு வைக்கின்றார்.
அது மகிழ்வதைப் பார்த்து அவளும் மகிழ்கின்றாள்.அது வருந்துவதை கண்டு தானும் வருந்து
கின்றாள்.பதில் பலனை எதிர்பாராது செலுத்தும் அன்பு கடவுள் தன்மை உடையது. தன்னலம் கருதாது
இவ்வுலகில் சிலவற்றைச் செய்கின்றவர்களைப் புனிதமுடையவர்களாக வைத்து உலகம் போற்றுகின்றது.
“தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்” என்னும் உயர்ந்த பண்பு காரணமாக புத்தர் உலக மக்களால்
போற்றப்பட்டார்.ஒவ்வொரு தாயும் தன் குழந்தைகளுக்குத் தெய்வம் ஆவள். “அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வம்” என்பதும் இக்கருத்து பற்றியதேயாகும். கடவுள் ஒவ்வொரு வீட்டிலும் இருப்பதற்கு
பதில், தாயை அங்கு அனுப்பியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)