சனி, 1 பிப்ரவரி, 2020

வெற்றிக்கான வழி

வாழ்க்கையில் வேகமாக
முன்னேறவில்லையே என்று
கவலைப்படுவதைவிட
பின் வாங்காமல்
ஒவ்வொரு நாளும் விடா முயற்சியோடும்
நம்பிக்கையோடும் தொடர்ந்து
முன்னோக்கி நடைபோடுவதே
வெற்றிக்கான வழி
ஏனெனில் உலகில் ஒரே நாளில்
உயர்ந்தவர்கள் யாருமில்லை.

நூல்களை வாசிப்போம்

முட்டாளின் முழு வாழ்கையும்
புத்திசாலியின் ஒரு நாள் வாழ்க்கைக்குச் சமம்.
-அரேபிய பழமொழி.

அறியாமை நீங்க அறிவை வளர்த்திட நாளும் வாசித்திடுவோம் நல்ல நூல்களை. 

வெள்ளி, 31 ஜனவரி, 2020

இன்றைய தினம்

31.01.2020 (வெள்ளி) 
இன்றைய தினம்
       நகைச்சுவை நடிகர் நாகேஷ் நினைவு தினம்.
நேற்றைய தொடர்ச்சி 
சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் 
       21.பாரிமகளிர்
       22.பூங்கன் உத்திரையார்
       23.பூதப்பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு
       24.பேய்மகள் இளவெயினி
       25.பொதும்பிற் புல்லாளங் கண்ணியார்
       26.பொன் முடியார்
       27.பொன் மணியார்
       28.போந்தப் பசலையார்
       29.மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்
       30.மாற்பித்தியார்
       31.மாறோக்கத்து நப்பசலையார்
       32.முடத்தாமக் கண்ணியார்
       33.முள்ளியூர்ப் பூதியார்
       34.வருமுலையாரித்தி
       35.வெண்ணிக் குயத்தியார்
       36.வெண்பூதியார்
       37.வெண்மணிப் பூதியார்
       38.வெள்ளி வீதியார்
       39.வெள்ளைமாளர்
       40.வெறி பாடிய காமக்கண்ணியார்
விவேகானந்தர் 
       உன்னை நீயே பலவீனம் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.
அப்துல்கலாம்
       சூரியனைப் போல ஒளிர வேண்டுமென்றால், முதலில் சூரியனைப் போல்
       எரிய வேண்டும்.
இன்றைய வெளிச்சம் 
       பணத்தால் பசியைப் போக்க முடியும், துக்கத்தைப் போக்க முடியாது.
       வருத்தமோ, துன்பமோ இன்றி எவராலும் எளிதில் புகழைப் பெற முடியாது.

வெற்றி

வெற்றி என்பது
மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும்
அயராமல் முயற்சியைத்
தொடர்வதால் கிட்டுகிறது.

வியாழன், 30 ஜனவரி, 2020

வில்லிபாரதத்தின் மரபுக் குறிப்பு

மகாபாரதப் பருவங்களில் வில்லிப்புத்தூராரால் எழுதாமல் விடுக்கப்பட்ட பருவங்கள் 8. அவை,
1.ஸ்திரீ பருவம்.
2.சாந்தி பருவம்.
3.அனுசாசன பருவம்.
4.அசுவமேத பருவம்.
5.ஆரம பருவம்.
6.மௌசல பருவம்.
7.மகாப்ரஸ்தான பருவம்.
8.ஸ்வர்க்கா ரோஷண பருவம்.

இன்றைய தினம்

30.01.2020 (வியாழன்)
இன்றைய தினம்
        ராமலிங்க அடிகள் நினைவு தினம்.
        தியாகிகள் தினம்
சங்ககாலப் பெண்பாற் புலவர்கள்
        1.அஞ்சியத்தை மகள் நாகையார்
        2.அஞ்சிலஞ்சியார்
        3.அள்ளூர் நன்முல்லையார்
        4.ஆதிமந்தியார்
        5.ஊன் பித்தையார்
        6.ஒக்கூர் மாசாத்தியார்
        7.ஔவையார்
        8.கச்சிப்பேட்டு நன்னாகையார்
        9.கழார்க்கீரன் எயிற்றியார்
       10.காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்
       11.காமக்கணிப் பசலையார்
       12.காவற்பெண்டு
       13.குமிழி ஞாழலார் நப்பசலையார்
       14.குறமகள் இளவெயினி
       15.குறமகள் குறியெயினி
       16.குன்றியனார்
       17.தாயங்கண்ணியார்
       18.நக்கண்ணையார்
       19.நல்வெள்ளியார்
       20.நெடும் பல்லியத்தை       -   தொடரும்...
அப்துல்கலாம்
      வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், சிந்திப்பதை
      நிறுத்தாதே...அதுதான் மூலதனம்.
அன்னை தெரசா
      பிறருடைய துன்பத்தை நீக்கும் வல்லமை உனக்கு வர வேண்டுமானால்
      அத்துன்பத்தை நீயும் அனுபவித்து உணர வேண்டும்.
இன்றைய வெளிச்சம்
      உயர்ந்த இலட்சியங்களைக் கொண்டே வாழ்க்கையே தலை சிறந்த
      பெருமையுள்ள வாழ்க்கை.
      நல்லொழுக்கம் மட்டுமே புயலுக்கும் அசையாமல், உறுதியாக நிற்கும்.

தனிமரம்

நான் தனி மரம்தான்
பல கிளைகளைப் படைப்பேன்
அதில் பாசத்தைக் கொடுப்பேன்
நேசத்தைச் சோலையாக்குவேன்
நந்தவனச் சொல்லை ஏற்று நாளும்
அதை வளர்ப்பேன்
நல்லதோர் உலகம்
அதை நாளை நான் கொடுக்க உழைப்பேன்.


22.7.19 அன்று தினத்தந்தி  நாளிதழில் வெளியான கவிதை.

குணம்

அறிவு உங்களுக்கு
அதிகாரத்தை வழங்கலாம்
குணம்தான்
மரியாதையைப் பெற்றுத் தரும்

குறுகிய வாழ்க்கை




நாம் ஆசைப்படும் பல விஷயங்கள் கேட்கும்போது கிடைப்பதில்லை
அது நமக்குக் கிடைக்கும்போது தேவையில்லாத ஒன்றாக மாறிவிடுகிறது.
எனவே நாம் வாழும் இந்தக் குறுகிய வாழ்வில் அனைவரிடமும் அன்பாகவும், பிறருக்கு விட்டு கொடுத்து, எதிர்காலைத்தை எண்ணிக் கவலைப்படாமல் இப்போது நம் கையில் உள்ள நிஜமான நிகழ்காலத்தைச் சந்தோசமாக வாழ்வோம்.

புதன், 29 ஜனவரி, 2020

இன்றைய தினம்

29.01.2020 (புதன்)
இன்றைய தினம் 
      இந்திய செய்தித்தாள் தினம்.
நிகண்டுகள் 
      1.திவாகர நிகண்டு
      2.பிங்கலந்தை நிகண்டு
      3.அகராதி நிகண்டு
      4.சூடாமணி நிகண்டு
      5.உரிச்சொல் நிகண்டு
      6.அரும்பொருள் விளக்க நிகண்டு
      7.பொருள் தொகை நிகண்டு
      8.பொதிகை நிகண்டு
      9.உசித சூடாமணி நிகண்டு
      10.நாபதீப நிகண்டு
விவேகானந்தர் 
       உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும்
      அணுகக்கூடாது.
இன்றைய வெளிச்சம் 
       எல்லோரையும் நம்புவது ஆபத்து, ஒருவரையும் நம்பாதிருப்பது பேராபத்து.
       செலவுகள் யாவற்றிலும் காலத்தை வீணாக்குதலே அதிக செலவும்,
       ஊதாரித்தனமுமாகும்.

செவ்வாய், 28 ஜனவரி, 2020

திருமணத்தின் போது மோதிர விரலில் மோதிரம் அணிவது ஏன்?

நமது இரண்டு கைகளிலும் உள்ள நடு விரல்களை உட்புறமாக மடக்கிக்கொள்ள, மற்ற அனைத்து விரல்களையும் தனித்து பிரிக்க முடியும். ஆனால், மோதிர விரலை மட்டும் தனித்துப் பிரிக்க முடியாது. அதுபோல, கணவனும் மனைவியும் தங்களது இன்ப, துன்பங்களில் எப்போதும் ஒருவருக்கொருவர் பங்கேற்று அனுசரணையாக வாழவேண்டும். இக்காரணத்தினாலேயே திருமணத்தின்போது மோதிர விரலில் மோதிரம் அணிவிக்கப்படுகிறது.

அன்புத் தோழி

எனது தாயிடம் இருந்து கிடைக்காத சுகத்தை
உனது கைத்தீண்டலே எனக்கு அளித்தது

ஆனால்

ஆண் : நான் உங்களை விரும்புகிறேன்.
பெண் : உனது தகுதி என்ன?  சொந்தமாக வீடு வைத்து இருக்கிறாயா?
ஆண் : இல்லை. ஆனால்...
பெண் : பி. எம். ட்புல்யு. கார் வைத்திருக்கிறாயா?
ஆண் : இல்லை. ஆனால்...
பெண்: ஆனால் என்று சொல்வதை நிறுத்து..வேலையாவது பார்க்கிறாயா?
ஆண் : இல்லை. ஆனால்...
பெண் : போதும், போதும் நிறுத்து. எந்தத் தகுதியும் இல்லாத உன்னை
               எவ்வாறு ஏற்றுக்கொள்வது...
               (பெண் சென்று விடுகிறாள்)
ஆண் : எனக்குச் சொந்தமாக வீடு இல்லை. ஏனெனில் எனக்குச் சொந்தமாக வில்லா உள்ளது. என்னிடம் லம்பொஉர்க்ஹினி கார் இருக்கும்போது அதை விட விலை குறைவான பி. எம். டபில்யு.-க்கு அவசியம் இல்லாது போயிற்று. சம்பளம் கொடுக்கும் முதலாளியாக இருக்கும் நான் மற்றவர்களிடம் கைகட்டி வேலை பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. என்னை ஏற்றுகொள்ளும் தகுதி அவளுக்குத்தான் இல்லை.