திங்கள், 23 அக்டோபர், 2017

விடாமுயற்சி

ஒரு குரு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தார். சீடன் விளையாட்டாக மரத்தில் ஏறிக் கொண்டிருந்தான். அங்கே பட்டாம்பூச்சியின் வலைப்பின்னலைக் கண்டான்.அந்த பூச்சி பின்னலை விட்டு வெளியே வர திணறிக் கொண்டிருந்தது.குழப்பத்துடன் சீடன், “ரொம்ப சிரமப்படுதே! அதற்கு உதவி செய்தாகணும்!” என்ற எண்ணத்துடன் அதை நெருங்கினான்.

கண் விழித்த குரு சீடனைக் கண்டார்.“சும்மாயிரு! அதன் போக்கிலேயே விட்டு விடு!” என்று சொல்லிவிட்டு மீண்டும் உறங்கினார்.சீடனுக்கு மனம் கேட்கவில்லை. குருவுக்கு தெரியாமல், தடுமாறும் அந்த பூச்சியை பின்னல் கூட்டில் இருந்து விடுவித்தான்.ஆனால், அந்த பூச்சி பறக்க முடியாமல் தரையில் விழுந்தது.கண் விழித்த குரு சீடனை நோக்கி,“சொல்லியும் கேட்கவில்லையே! அதன் சிறகை சேதப்படுத்தி விட்டாயே! பட்டாம் பூச்சி பறக்க வேண்டுமானால், அது தானாகவே கூட்டை விட்டு வெளியே வந்திருக்க வேண்டும்” என்று கடிந்து கொண்டார்.

பட்டாம்பூச்சி மட்டுமல்ல! மனிதனுக்கும் இது பொருந்தும். வாழ்வில் குறுக்கிடும் கஷ்ட நஷ்டங்களுக்காக பிறரது உதவியை நாடக்கூடாது. அவனாகவே சமாளிக்கும் ஆற்றலைப் பெற வேண்டும். விடாமுயற்சியுடன் செயலாற்றினால் தான், தடைகளைத் தாண்டி உயர முடியும்.butterfly க்கான பட முடிவு

தூரம்



மாட்டுவண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன்.

குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.
‘‘தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?’’ என்று கேட்டான்.
‘‘வருமே...’’ என்றான் சிறுவன்.
‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’
‘‘மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம். வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும்’’ என்றான்.
சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டுமாட்டு வண்டிக்காரனுக்குக் கோபம். ‘‘என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?’’ என்று கேட்டான்.
‘‘போய்த்தான் பாருங்களேன்’’ என்று சிறுவன் சொன்னதும், அவன் வண்டியை வேகமாக விரட்டி சென்றான்.
சிறிது தூரம் போனதுமே சாலை முழுவதும் கற்கள் கொட்டி இருந்தது. வண்டி தடுமாறிக் கவிழ்ந்தது. தேங்காய்கள் சிதறின. வண்டியை நிமிர்த்தி கீழே சிதறிய தேங்காய்களை பொறுக்கி எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.
வண்டிக்காரனுக்கு சிறுவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.
கற்பிப்பவன் எவனாயினும் கல்வி என்பது பெறுமதியானது தானே?....mattu vandi க்கான பட முடிவு

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

இந்தியாவில் தடை செய்யவேண்டும் என்றால் என்னவெல்லாம் தடைசெய்வீற்கள்?

இந்தியாவில் தடை செய்யவேண்டும் என்றால் என்னவெல்லாம் தடைசெய்வீற்கள்?

1.மதுவை முற்றிமாக தடைசெய்வேன். ஏனெனல் நமது நாடு மிதமான தட்ப வெப்பம் கொண்டது,
2.அழகு சாதனப்பொருட்கள்
3.தேவையற்ற செய்திகளை பரப்பும் ஊடகங்கள்
1.நான் பத்தாம் வகுப்பு படிக்கையில் எனது வேதியல் பேரிசிரியர் மேற்கத்திய நாட்டவரால் அவர்களது நாட்டின் குளிரை தாங்க இயலாததால் அவ்வர்கள் மதுவைக்கண்டறிந்து அருந்துவார்கள் என்று.பிறகு அவை அனைத்து சூழல்களையும் தாங்கும் சக்தி படைத்த நம் நாட்டவருக்கு எதற்க்கு?
2.அழகு என்பது பெண்ணிற்க்கும் சரி ஆணிற்க்கும் சரி என்னை பொறுத்தவரை பிறர் ஒருவருக்கு கொடுகும் மரியாதையே அழகாகும். மரியாதை என்பது வருவர் மனிதத்தன்மையுடன் நடக்கும்போது பிறக்கும். மனிதனாய் பிறந்தவர் மனிதனாக நடந்துகொண்டாலே போதும் அதற்க்கு அவன் நிற அடிப்படையில் சாயம் பூச அவசியம் இல்லை.

3.போலியான செய்திகளை பரப்புவதில் இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது. மக்கள் யார் பின்னே செல்லவேண்டும்? யாரை உண்மையாக கொண்டாட வேண்டும்? என்பது பெரும்பாலும் ஊடகங்கள் கையிலே உள்ளது.

இந்தியர்களை எந்த மாறியான செய்தி சோகப்படுத்தியுள்ளது?

இந்தியர்களை எந்த மாறியான செய்தி சோகப்படுத்தியுள்ளது?
1பிக்பாஸ் என்ற நிகழ்வில் சில பிரபலங்களின் நடவடிக்கை நம் அனைவரையுமே சோகப்படுத்தியது.
2.சில திரைப்படங்களின் வெளீடு தேதி ஒத்தி வைப்பது நமக்கு சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.
ஆனால் இவர்களும் நமது நாட்டில் தான் வாழ்ந்து வருகிறார்கள்.
கரீம் பாய்!!!

மாணவர்களுக்கும்,சமுதாய அடிநிலை வகுப்பு குழந்தைகளுக்கும் இலவசமாக செய்தித்தாள் கொடுக்கிறார்.

பாபர் அலி!!!

மிக இளமையான பள்ளி முதல்வர்.தனது 16 வயதில் பள்ளி நடத்தி BBC என்ற நிறுவனத்தில் அங்கிகாரம் பெற்றுள்ளார்.

அடிடீ ச்சுஹான்!!!

EPLஇல் விளையாடிய முதல் இந்தியப் பெண்.



இன்று எந்த செய்தி உங்களை சிரிக்க வைத்தது?

இன்று எந்த செய்தி உங்களை சிரிக்க வைத்தது?

ஒரு மனிதர் அவரது பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அவரது அத்தை திறன்பேசியை கையாள தொடங்கிய காலம். அப்பொழுது அத்தை ஒரு காணோலியை பகிரவேண்டும் என எண்ணிணார். அதற்க்காக அந்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ஷார் செய்தாராம். (எனக்கு என் முகத்தில் இன்று இந்த பதிவு சிரிப்பை வரவைத்தது உங்களின் இதழ்களின் ஒரத்தில் சிறியதாக சிரிப்பு வந்தாலும் மகிழ்ச்சி)

நன்றி!!!

இன்று தாங்கள் படித்த தகவல்களில் சிறந்த தகவல் எது?

இன்று தாங்கள் படித்த தகவல்களில் சிறந்த தகவல் எது?

உசயின் போல்ட்  மொத்தம் 8தங்க பதக்கங்களை கடந்த 3 ஒலிம்பிக்ஸில் வென்றுள்ளார். இவர் 2நிமிடங்கள் மட்டுமே ஓடும்பாதையில் ஓடியுள்ளார். ஆனால், அது ஒரு வரலாற்றை பதித்துள்ளது.
உசயின் போல்ட் 115 வினாடிக்களுக்கு குறைவாக ஓடி 119 மில்லியன் பணத்தை ஈட்டியுள்ளார். ஒரு வினாடிக்கு ஒரு மில்லியனையும் விட அதி பணத்தை ஈட்டியுள்ளார்.

ஆனால் இந்த 2நிமிட ஓட்டத்திற்காக 20ஆண்டுகள் உழைத்துள்ளார்.

இன்றைய சின்ன செய்தி ;

இன்றைய சின்ன செய்தி ;
ஒரு பெண் ரோட்டில் அடிபட்டுக்கிடந்தவருக்கு உதவிக்கொண்டிருக்கையில் அவர்களிடம் இன்னொறு பெண் வந்து அம்மா சற்று என்னிடம் இதை கொடுத்தால் நான் செய்வேன் ஏனெனில், நான் ஒரு செவிலியர்.


அந்த பெண் விலகி ஒரு புறம் நின்று பார்த்துக்கொண்டே சிரி தங்களுக்கு ஏதாவது உதவி தேவைபட்டாள் என்னை அழையுங்கள் நான் ஒரு மருத்துவர் என்றார்.