வெள்ளி, 4 ஜனவரி, 2019

ஒருமுறை காட்சிக்கு வாஇத்தனை நாள் நீ என் விழியில்
தோன்றினாய் சிறு பெண்ணாக,
இன்று ஏனோ மின்னுகின்றாய்
 ஐம்பொன்னாக,
கரு விழிகள் உறைந்தது,
பிற சிந்தனை யாவும் மறைந்தது,
உன் செவியில் சிறு கம்மலாக
அசைந்தாடுதடி என் மனதும்,
உன் மணிக் கூந்தலில்
இடம் பெற துடிக்கிறது என் உயிரும்,
பல நாட்கள் உன்னோடு  இருந்தும்
உணரவில்லை இந்த மாற்றத்தை ....
இன்று பத்து நிமிடம் பார்த்ததில்
மறந்துவிட்டேன்  என் தோற்றத்தை...
உன் நினைவில்
உறையும் பனியானேன், ,,
உருகும் மெழுகானேன்,,,,, இருப்பினும்
கேட்கின்றேன் பெண்ணே !!!!!!!
ஒருமுறை காட்சிக்கு வா.....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக