புதன், 31 ஜனவரி, 2018
ஞாயிறு, 28 ஜனவரி, 2018
வழி செல்வோம்
வழி செல்வோம்
நாம் அனைவரும்
இந்த உலகிற்க்கு ஒரு காரணமாக தான் வந்திருப்போம். சில நபர்கள் அந்த காரணத்தை கண்டறிந்து
நல்ல ஒரு சமுதாயத்தை உறுவாக்குவதற்க்காக உழைத்து உயிர் துரந்திருப்பர் சிலர் அந்த காரணங்களையெல்லாம்
அறியாமலேயே செத்து மடிவர். சிலர் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிறுப்பர். மனிதனாக
பிறந்தால் நாட்டிற்கும் வீட்டிற்க்கும் ஏதாவது செய்வதே அவனது தலையாய கடமை. இதனை நம்மில்
சிலர் தெரிந்திருப்பர், சிலருக்கு இதனை பற்றி அக்கறை இல்லை. நாட்டில் உள்ள இளஞர்களுக்கு
நல்ல பல கருத்துக்களை எடுத்து சென்று சேர்க்க வேண்டியது மூத்தோரின் கடமை. ஆனால், இங்கோ,
கூத்தாடிகளின் பின் சென்று வாழ்கையையும் நாடகம் போல் போலியாக அற்த்தம்மற்றைவயாக வாழ்ந்து
வருகிறோம். யார் உண்மையான வீரர்கள்,, யாரை உண்மையாக மதிக்க வேண்டும், ஏன் நம் நாடு
இந்த நிலமையில் உள்ளது?அதை திருத்துவது யாருடைய கடமை?என்று நாம் நமக்குள் கேட்டுக்கொள்ள
வேண்டும். கேள்வி கேட்க்க வேண்டும் என்று அன்று சான்றோர் பெறுமக்கள் கூறுவது ஒரு தெளிவான
பார்வை கிடைக்கவே!!! சிந்திப்பீர்! செயல்படுவீர்!
மனிதானாக எந்த ஒரு விஷயத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும்?
மனிதானாக எந்த
ஒரு விஷயத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும்?
மனிதனாக அனைத்து
உயிரிணங்களுக்கும் சிரசமமான அன்பினைக்காட்ட வேண்டும்.தெருவில் செல்லும் நாயோ, விட்டில்
வளற்க்கும் பெர்ஷியா பூனையோ?அனைத்தும் இந்த மண்ணில் சம உரிமை பெற்றுதான் வாழ நம்மை
போல வந்திருக்கிறன. ஒருவர் படிப்பில் சரியாக இல்லை என்ற காரணத்திள்காக அவரை ஒதுக்குவது
சரியல்ல. நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் மனிதநேயத்துடன் நடந்துகொண்டாலே போதும்
இந்த உலதில் அனைத்து பிரச்சணைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.நம்பிக்கையை உடைப்பது மிகவும்
கொடுமையான விஷயம்.
மனக்கஷ்டத்தில் இந்த மாய உலகைவிட்டு செல்லவேண்டும் என்ற எண்ணம் வந்தால் என்ன செய்வீர்?
மனக்கஷ்டத்தில்
இந்த மாய உலகைவிட்டு செல்லவேண்டும் என்ற எண்ணம் வந்தால் என்ன செய்வீர்?
உடுத்த உடை,
உண்ண உணவு,
உறுதியான உடல்,
உள்ள எவன் ஒருவன்
இருக்கிறானோ அவன்தான் இந்த உலகின் ஆகப்பெரிய பண்க்காரண். இந்த உண்மையை புரிந்து கொண்டு
இருப்பதை வைத்து வாழ்ந்து நடத்தினாலே மனநிறைவுடன் அற்த்முள்ள வாழ்க்கையை வாழலாம்.
மக்களின் வேற்றுமை
மக்களின் வேற்றுமை
யூ-டியூப் என்று
சொல்லப்படும் கானொலி தளத்தில் சுற்றிக்கொண்டிருக்கையில், ஒரு சமூக சோதனை(SOCIAL
EXPERIMENT) என்று சொல்லப்படும் கானொலியை பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த கானொலி வெளிநாட்டவரால்
பதிவு செய்ய்ப்பட்டது. அதில் தனி மனிதன் ஒருவன் என் நன்பனிற்க்கு அவசர உதவி தேவைபடுகிறது
என்று வீடு வீடாக அழைந்து கேட்கிறான் அது கிருத்துமஸ் விழா நாளும் கூட எனினும் மக்கள்
இல்லை, எங்கள் வீட்டில் பிள்ளைகள் உள்ளனர், உங்களை யார் என்று தெரியாது, நாங்கள் அன்னியற்களை
அனுமதிக்க மாட்டோம், என்று பர்பல காரணங்கள் கூறி புரகனித்தனர், இருதியில் அந்த வகை
உதவியையே பெண் ஒருவரை வைத்து நடத்தினர்.அப்பொழுது சிலர் முன் வந்தனர்.
அதே சமயம் எங்கள்
வீட்டில் ஒரு தாயார் கதவை தட்டினார். ``எனது மகள் இங்கே இசை பயிற்ச்சிக்கு வந்திருக்கிறாள்,
அங்கு பூச்சிகளின் தொல்லை அதிகமாக உள்ளது, நான் இந்த தின்னையில் அமரலாமா?’’ என்றார்.
நான் உடனடியாக அவரை அனுமதித்தேன்.சில வற்றை நமது முன்னோற்கள் அறிந்து அதனை நமது பழக்கமாக
கொண்டுள்ளனர். இந்த தின்னை, உதவும் மனப்பான்மை இவை அனைத்தும் நமது கலாச்சாரத்தில் சொல்லாமல்
சொல்லப்பட்ட மிகப்பெரிய வாழ்க்கை பாடங்கள், மற்றும் அவை நமக்கு போதிக்கப்பட்ட ஒழுக்க
நெரிகள். ``தீயன செய்தவனுக்கும் நல்லதே செய்” என்று கூறி வளர்த்த என் அன்னை தமிழுக்கு
நெஞ்சார்ந்த நன்றி. ஒவ்வொறு நொடியும் நான் ஒரு தமிழச்சியாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன்.
பேனா
பேனா
சிலர் எழுதிய பேனா,
இன்னும் கணக்கு
பார்க்கிறது
சிலர் எழுதிய பேனா,
பல சரித்திரம்
படைக்கிறது!!!
(இதை நீங்கள் கவிதையாக
பாவித்துக்கொள்ளலாம்) கரு இதுதான்; சிலர் பயண்படுத்திய பேனாக்கள் இன்னும் அவர்கள் வீட்டுக்
கதவிற்க்குள்ளே கிடக்கும், ஆனால், சிலர் பயண்படுத்திய பேனாக்கள் மட்டுமே அனைவராலும்
காக்கப்படும். நாம் சாமானியனாக வாழ்வதும் சரித்திரம் படைப்பதும் நம் கையில் உள்ளது.
நேரம்
நேரம்
வாழ்வில் இதை சரியாக
பயண்படுத்தியவர் எவரும் தோற்றதில்லை. பெளும்பாலான மக்கள் எனக்கு இது போதவில்லை இது
சரிவர வில்லை, என்னிடம் இது இல்லை என்று சாக்குகள் கூறியே காலத்தை களிக்கின்றனர்.
நம்மிடம்
இல்லாததை நினைத்து வருந்துவதை காட்டிலும் இருக்கும் பொன்னான நேரங்களை சரியான முறையில்
பயண்படுத்தினால், வாழ்க்கை அற்த்தமுல்லனவாய் அமையும். வாழ்வில் எந்த சூழலிலும் பிறறை
பார்த்தோ, பின்னே செல்லவும் கூடாது. எல்லாரும் எதோ ஒரு வகையில் தனிதுவம் வாய்ந்தவராக
தான் இருக்கிறோம். அதனை புரிந்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். வெற்றி என்பது வியர்வை
சிந்தி, உழைத்து, அவமானங்களை சந்தித்து, போராடி, கிடைக்கும்போதுதான் அதனை ஒருவனால்
முழுமையாக புரிந்துகொள்ள முடியும். வலிகளில் சிக்கித் தவித்வனுக்கே உழைப்பின் வெற்றியை
முழுமையா ருசிக்க முடியும்.நான் வேண்டாம்!!
நான் வேண்டாம்!!
இந்த உலகில் நாம்
அனைவரும் தோன்றியதற்க்கு நிச்சையமாக ஒரு காரணம் இருக்கும். அதனை நாம் சாவதற்க்கு முன்பு
கண்டறிந்து அந்த துறையில் நாம் நம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இருங்கள், வளர்த்த
பின்பு, அந்த துறையில் தலைசிறந்த மனிதராக மாறிய பிறகு, நம்மை வளர்த்த இந்த சமூகத்திற்க்கு
திரும்ப செய்ய நாம் மறந்து விடுகிறோம். இந்த உலகிற்க்கு வந்துள்ளொம், அதற்க்காக கட்டாயம்
எதாவது செய்துவிட்டுதான் செல்லவேண்டும். நாம், நம் வேலை, நம் குடும்பம், என்று வாழ்பவர்கள்
தேவையில்லை இந்த தமிழ் சமுதாயத்திற்க்கு. நாம், நமது மக்கள், நமக்கு சஞ்சலம் அதனை சரிசெய்யும்
கடம் நாம் அனைவருக்குமே உண்டு என்று நமது ஒற்றுமை மனப்பான்மையுடன் இறங்கி செய்தால்
இந்த சமுதாயத்தில் நிறைய பல இன்னல்களுக்கு என்றோ தீர்வு கிடைத்திருக்கும்.நான் எப்படி எனக்கு பாதுகாப்பு இல்லை என்ற எண்ணத்திலிருந்து வெளிவருவேன்?
நான் எப்படி எனக்கு
பாதுகாப்பு இல்லை என்ற எண்ணத்திலிருந்து வெளிவருவேன்?
இந்த நாட்டில்
நாம் விரும்போது யாரையும் நாம் அழைத்துவரவில்லை, பாதுகாப்பு என்பது ஒரு வேலி அதற்க்குள்
இருக்கும் வரை நாம், நமது குடும்பம், நமது வாழ்க்கை, நமது முன்னேற்றம், என்று பலரால்
சுயநலவாதிகலாக்கப்படுவோம். ஆனால், என்று என்னை பார்த்துக்கொள்ள எனக்கு தெரியும்!!!!
நான் இந்த உலகில் என்னைபோன்று வாழ வந்தவர்களுக்கும், இந்த சமூதாயத்திற்க்கும் கடமைபட்டிருக்கறேன்
என்ற உண்மையை உணர்ந்து செயல்படுவோர் வாழ்வில் எவ்வளவு பெரிய இன்னல்கள் வந்தாலும், துச்சமென
மதித்து செல்வர்.
மாற்றம் வேண்டும்!!!
மாற்றம்
வேண்டும்!!!
நாம் எப்போழுது
அடுக்கு மொழிகளையும், பொய்யான வாக்குருதிகளையும், கண் கவரும் காட்சிகளையும், பொய்யான
பாசங்களையும், பொய்யான மனிர்களையும், தற்காளிக இன்பத்தையும் நம்பாமல் இருக்கிறோமோ அப்பொழுதுதான்
நாம் தெளிவாக செயல்பட இயலும். இன்னும் எத்தனை காலம் விடியல் பிறக்கும் என்று காத்துக்கொண்டே
இருப்போமோ? இன்னும் எத்தனை காலம் இவர் நம்மை மாற்றுவாரா?அவர் நமக்கு உதவுவாரா இவர்
நமக்கு உதவுவாரா?இவர்களின் பார்வை நம் மீது விழாதா? அவர் நமக்கு இரக்கம் காட்ட மாட்டார்?
என்று பிறரை எதிர்ப்பார்த்து, எதிர்த்து ஏமாந்து போவதே அதிகமாயிற்று. தன்னம்பிக்கையுடனும்,
நம்மை நம்மால் மட்டுமே திருத்த இயலும் அந்த ஆற்றல் நமக்குள்ளே புதைந்து கிடக்கிறது
என்று கண்டுகொள்கிறோமோ!!! அன்று நல்ல ஒரு சமுதாயம் பிறக்கும்.
தமிழகத்தை பற்றி சில புள்ளி விவரங்கள்
தமிழகத்தை பற்றி சில புள்ளி விவரங்கள்
1.இந்தியாவில்
மகாராஷ்ராவை இடுத்து பெரிய ஒழுக்கமைவு(economy) கொண்ட மாநிலம்.
2.மனிதவள மேலான்மை
பொருளடக்க அட்டவனையில் 6ஆம் இடம் பிடித்துள்ளது தமிழகம்.
3.81%படித்தவர்களை
கொண்ட மாநிலம்.
4. ஐ.டி.வணிகத்திலும்,
BPO சேவைகளிலும் சென்னை மாநகரம் தான் இந்தியாவிலேயே இரண்டாம் இடம் வகிக்கிறது.
5.கமுதி, என்னும்
தமிழகத்தை சேர்ந்த பஞ்சாயதில் 648மெகாவாட்ஸ் சோலார் சக்தியுடன் 150,000ஆயிரம் வீடுகளுக்கு
வழங்கும் அளவிற்க்கு தயாரிக்கின்றனர்.
சோம்பல் கூடாது!
சோம்பல்
கூடாது!
வாழ்வில் சாதிக்க
வேண்டும் என்கின்ற வெறி அனைவருக்குமே உண்டு, ஆனால் அந்த சாதணையை எப்படி நிகழ்த வேண்டும்
என்று புரியாமலேயே பலர் நாட்களை வீணாக களித்து வருகின்றனர். எவன் ஒருவன் வெற்றி பெற
நினைக்கிறானோ, அவன் நிச்சயம் கடின உழைபாலியாகவும் நல்ல நூல் அறிவு பெற்றவனுமாய் இருக்க
வேட்ண்டும். தன்னையும் தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் பற்றி நல்லறிவு கொண்டவாய்
இருக்க வேண்டும். மனிதனாய் பிறந்தாளா ஏதாவது சாதித்தே ஆகவேண்டும்.
தம்மை சுற்றி நடக்கும்
பிரச்சணைகளைப்ப பற்றி கவலை படுபவனாய் இருக்க வேண்டும், வருமையில் வாடுபவர்களைக் கண்டு
வருந்தி அவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வனாய் இருக்க வேண்டும். அடுத்தவர் பேச்சிர்க்கு
காது கொடுக்காமல், நியாமான காரியங்களில் யார் தடுத்தாலும் ஈடுபட்டு வெற்றி அடைய வேண்டும்.
தோல்விகளை கண்டு துவண்டு போக கூடாது, தன்னை தானே ஊக்குவித்துக்கொண்டு, வாழ்வில் முன்னேற்ற
பாதையை நோக்கி மட்டுமே செல்ல வேண்டும்.
சேஞ் யூவர் ஸ்ராடஜி
சேஞ் யூவர் ஸ்ராடஜி
ஒரு நாள் கண் தெரியாத
மனிதர் ஒருவர் வளாகத்திலே அமர்ந்துகொண்டு யாசம் செய்துகொண்டு இருந்தார். பின்பு, அங்கு
வழியில் கடந்து சென்ற மனிதிரில் ஒருவர் அங்கு வந்து அவர்முன் நின்று அவரது தட்டில்
இருக்கும் சில சில்லரைகளை பார்த்தார். அவர் வந்து நின்றதை இந்த கண் தெரியாத யாசகரும்
கவணித்தார். அவர் வைத்திருந்த அறிவிப்பு பலகையை எடுத்து சிறு மாற்றம் செய்துவிட்டு
சென்றார்.
சில நேரங்களில் அவர் வைத்திருந்த தட்டில் சில்லரைகள்
அதிகரிக்க தொடங்கின. மாலை நேரம் போல் அந்த அறிவிப்பு பலகையை மாற்றி அமைத்த அதே நபர்
வந்தார். அவரது கால்களை தொட்டு யாசகர் அவர்தான் காலை தனது பலகையை மாற்றினார், அதற்க்கு
பின்பே தனது தட்டில் சில்லரை அதிகறித்தது என்பதை தெரிந்து அவர் என்ன எழுதினார் என்று
கேட்டார். அவர் அதற்க்கு``என்று நல்ல இளவெனில் காலை, ஆனால் என்னால் அதை பார்க்க இயலவில்லை”TODAY
IS SPRING AND I CANNOT SEE IT என்றார்.
தரவு(short
stories குருஞ்செயலி)
ஒற்றுமையின் வேற்றுமை உணர்த்தும் வாக்கியங்கள்;
ஒற்றுமையின் வேற்றுமை
உணர்த்தும் வாக்கியங்கள்;
சச்சின் டென்டுள்கள்
படத்தின் வசனம் நம்மை சிந்திக்க வைக்கிறது?
(நீங்கள் அமெரிக்காவிற்க்கு
சென்றால், அமெரிக்கர்களை சந்திக்கலாம், ஜெர்மெனிக்கு சென்றால் ஜெர்மானியர்களை சந்திக்களாம்,
ஃப்ரான்ஸிர்க்கு சென்றால், ஃபிரென்ச்சுகாரர்களை சந்திக்கலாம்,இங்கிலாந்திற்க்கு சென்றால்
இங்கிலிஷ்காரர்களை சந்திக்கலாம். ஆனால், இந்தியாவிற்க்கு வந்தால் மட்டும் தான் நீங்கள்
மராத்தியர்கள், குஜராத்தியர்களையும், பஞ்சாபியர்களையும், மலையாளிகளையும், சந்திக்க
நேரிடும். இந்தியர்களை நீங்கள் பாக்கிஸ்தானிற்க்கும் இந்தியாவிற்க்கும் கிரிகெட் விளையாடும்போது
மட்டுமே பார்க்கலாம்.
ஒரு இலக்கோடு வாழு!
ஒரு இலக்கோடு வாழு!
இலக்கு இல்லாத
வாழ்க்கை புத்தகம் இல்லாத நூலகம் போல், அது நமக்கும் பயணளிக்காது பிறருக்கும் பயணளிக்காது.
ஒரு இலக்கை வைப்பது கூட எளியது, ஆனால் அதனை நோக்கியே சோர்வடையாமல் பயணப்படுவது மிகக்
கடினம். நம் இலக்குகள் நமக்கு மட்டும் பயண் தரும் வகையில் இருக்கக் கூடாது.நாம் அதனை
அடையும்போது நமக்கும் நமது சமூகத்திற்கும் பயணளிக்க வேண்டும. எவன் ஒருவன் தன்னையும்
தன்னை சுற்றி இருப்பவர்களையும் பற்றி சிந்திக்கிறானோ?அவனால் தான் ஒரு உபயோகமான வாழ்க்கையை
வாழ முடியும். அப்பொழுதான் நாம் இம்மண்னை விட்டு நீங்கினாலும் நாம் செய்த செயல்களால்
பிற சந்ததியனரால் பேசப்படும். எல்லோரையும் பற்றி இந்த உலகம் போசும் ஆனால், அவர்களை
எந்த வகையில் நம்மை பற்றி பேச வைக்கிறோம் என்பதிலே அற்த்தம் உள்ளது. ஒருவர் நம்மை இகழ்வதற்கும்,
புகழ்வதற்க்கும் முழூ பொறுப்பு நாம் தான்.
எவை கடினமானவை?
எவை கடினமானவை?
1.பணக்காரர்கள்
ஏழைகளை கீழே குனிந்து பார்ப்பது கடினம்.
2.வாழ்வில் உழைத்து
முன்னேறி, அந்த நிலையில் நிற்ப்பது கடினம்.
3.சக போட்டியாளரின்
வெற்றியை மனநிறைவுடன் பாராட்டுவது கடினம்.
4.நமது இலக்கை
கவனச்சிரல் இல்லாமல் ஒரு வழியில் செலுத்துவது கடினம்.
5.அடுத்தவரின்
குறையை,நிறையை பற்றி பேசாமல் இருப்பது.
6.உண்மையை கண்டறிவது
கடினம்.
7.இரக்க மானப்பான்மையுடன்
வாழ்வது கடின்னம்.
8.பிறரை தடுக்கி
விழும்போது தட்டிக்கொடுத்து மேலே தூக்க முன்வருவது கடினம்.
9.சமூக அவலங்கள்
கண்டும் காணாமல் இருப்பது கடினம்
10.மனிதன் பல நேரங்களில்
மனிதனாய் இருப்பதே கடினம்.
எமது பேராசிரியர் கூறிய கவரும் பொன்மொழிகள்
எமது பேராசிரியர் கூறிய கவரும் பொன்மொழிகள்
1.``ஒரு வேலையை ஒரு
முறை சரியாக செய்தால், தவறுதல் என்று ஒன்று நடக்காது” -முனைவர்.இரா.குணசீலண்.
பின்புரம்; எங்கள்
வகுப்பில் மறு தேர்வு, மறு தேர்வு என்று எழுதிக்கொண்டிருந்த வேலையில் மிக பொறுமையாக,
விவேகத்துடன் இயா கூறிய அழகான சிந்திக்கத்தக்க பொன்மொழி அது.
2.``எதையும் தொடங்குவது
எளிது ஆனால், அதனை தொரட்ந்து செய்வதே கடிறம்” -முனைவர்.இரா.குணசீலண்
“எந்த ஒரு புதிய
திட்டத்தை வகுப்பில் செயல்படுதினால், இந்த பொன்மொழியோடு வாழ்த்துக்கள் கூறுவர்.அது பல சமயங்களில் எங்களுக்கு ஒத்தும் போகும்.
பல முறை தொடங்கிய செயல்களை பல காரணங்களால் அப்படியே நிறுத்தி விடுவோம்.
3.``நமது தேடல் பெரிய
அளவில் இருக்க வேண்டும்”
-முனைவர்.இரா.குணசீலண்
இளஞர்களகிய நமது
தேடல்களை பொறுத்துதான் நம் வாழ்கை அமையும். நமது தேடல்கள் பெறும்பாலான சமயங்களில் முகநூல்,
யூ-டியுப்களில் மிமிஸை நோக்கியே இருப்பதால் தான் பலரது நேரமும் திறமையும் வீணாகிறது.
உங்களை எது கவரவில்லை?
உங்களை எது கவரவில்லை?
திரைப்பட வெளியீட்டின் போது, கட்டப்படும் பெரிய
பெரிய பதாகைகளும், செய்யப்படும் அபிஷேகங்களும், பல கல்லாரி மாணவர்களின் கட்செவி(what’s
up statusநிலை தகவல்களும், என்னை கவரவில்லை. புகழ்பெற்ற நடிகைகள் படங்களுக்கு தடை விழுந்தால்,
நாடே பொங்கி எழுகிறது. அதற்கு கூடும் கூட்டம் ஏன் ஒரு பொது சமுதாய நலன் கருதி கூடுவதில்லை.
மக்களின் இந்த மடிமைத்தனமான எண்ணம் என்னை கவரவில்லை.
``உலகத்திற்க்கே
சோறு போட்ட சோழர்களுக்கு வந்த சோதனை” போன்ற மீமிஸ்களை பார்தால் நமக்கு வரவேண்டியது
சிரிப்பல்ல சிந்நணை.
உங்களை எது ஊக்குவிக்கும்?
உங்களை எது ஊக்குவிக்கும்?
என்னதான் தன்னம்பிக்கை
மேற்கோள்கள் இருந்தாலும், தன்னம்பிக்கை பேச்சாளர்கள் இருந்தாலும், நமது உற்றார் உறவினர்கள்
அனைவரும் நம்மை உற்ச்சாகப்படுத்தினாலும், தனி ஒருவன் மனிதல் எது ஒரு தாக்கைத்தை ஏற்படுத்துகிறதோ,
அது தான் அவனை முன்னேறச்சொல்லும். அது சில சமயம் நல்ல அனுபவமாக கிடைக்கும், சில சமயம்
கசப்பான நினைவுகளாய் அமையும். நம்மை ஒரு வெறியுடன் செயல்பட்டுத்த நம்மை புகழும் மக்களுடன்
இருப்பதைக் காட்டிலும் நம்மை இகழுபவைரை நினைவில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில், புகழ்வோரால்
நமக்கு அக்கணம் மனநிறைவு ஏற்பட்டு விடும், ஆனால், இகழ்வோரால் ஒவ்வொறு கணமும் ``நான்
அத்தனை இழைத்தவள் அல்ல” என்று நிரூபித்து காட்ட தூண்டும்.
இந்த குடியரசு தினத்தில் புதிய காட்ச்சி
இந்த குடியரசு தினத்தில் புதிய காட்ச்சி
இந்த குடியரசு
தினத்தில் 27பெண்கள் கொண்ட எல்லை பாதுகாப்பு பணியாளர்கள், இந்திய வரலாற்றில் முதல்
முறையாக ``சீமா பவாணி” என்ற பெயர் கொண்டு ROYAL ENFIELD என்ற
இரு சக்கர வாகனத்தில் 16 வகையான களரி விளையாட்டுகளை காட்டினார்கள். அதற்க்கு வானொலி
செய்தி பரப்பும்(Broadcasting minister)அமைச்சர் ஸ்மிரிட்டி ஈரானி உள்பட பல அமைச்சர்களும்
எழுந்து நின்று அவர்களுக்கு மரியாதை செய்தனர்.
ரோமனானிய வியக்கத்தக்க புகைப்படம்
ரோமனானிய வியக்கத்தக்க புகைப்படம்
இனையத்தில் செய்தி
படிக்கும்போலும் இந்த ஓவியத்திற்க்கு பின்பு உள்ள பாசமான மகளின் கதை நெகிழ வைத்தது.
அதாவது சைமன் என்ற வயதான மனிதன் ஒருமுறை சிறை அலுவலரால் உணவின்றி சாக உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், அந்த வயதான மனிதரை பார்க்க அவரது மகள் பேரூவிற்க்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
சில நாட்கள் ஆகியும் அவர் முன்பு போலவே இருப்பதை சிறை அலுவலர் கவனித்தார். பின்பு மறைமுகமாக
உண்மையை அறிந்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். பேரு(PERO) தனது தந்தைக்கு தாயாக மாறி
ஆகாரம் அளித்து பிழைக்கவைத்த்தை அனைத்து அரசவை அதிகாரிகளும் அறிந்து சைமனை அவரது மகளின்
பாசத்திற்க்காக விடுவித்தனர்.
புதன், 24 ஜனவரி, 2018
நம்பிக்கை
பசியின்பொழுது உண்டசோறு
தன்தந்தையின் உழைப்பிள்
பாசத்தில்தவித்த பொழுது
தன்தாயின் அரவணைப்பு
கஷ்டம்என்றுவரும்போது
என் நண்பனின் நம்பிக்கை.
சு.சுபத்ரா,
முதலாம் ஆண்டு கணினி அறிவியல் துறை,
தாயும், தந்தையும்
பத்து மாதம் வயிற்றில் சுமப்பவள் தாய்
வாழ்வுமுழுவதும் தன் நெஞ்சில் சுமப்பவர் தந்தை
அன்பை ஊட்டியவள் தாய்
அறிவை ஊட்டியவர் தந்தை
உலகில் எந்த துன்பமும் நேராமல்
என்னை காத்தவர்கள் நீங்களே
ஒரு நொடி என்னை காணவில்லை
என்றாலும் வருந்தியவள் தாய்
கவி லாவண்யா
முதலாம் ஆண்டு வணிகவியல்
தங்கை
தேவையற்ற சேட்டைகள் செய்தாலும்
தேவையான அன்பு கொள்வாள்
என் மேல்… ஒரு தங்கையான
அவளுக்காக திட்டல்கள் ஏற்பேன்!
அவளுக்காக விட்டுக் கொடுப்பேன்!
அவளுக்காக அனைத்தையும் செய்வேன்!ஏன்…
அவளுக்காக தாயாக மாறுவேன்!
அவளுடைய அன்பு அக்காவாக
எக்காலத்திலும் என்றும்!
ர.விஜயா
முதலாம் ஆண்டு வணிகவியல்
அவருக்கான உலகம்..
இங்கு தான் எங்காவது
அவரைப் பார்த்திருப்பீர்கள்...
வாட்டர் பாட்டிலை எடுத்தபடி..
குப்பையைக் கிளறியபடி..
அதில் ஒரு பேப்பரைப்
படித்துச் சிரித்தபடி
இயலாமையில் அதைக் கிழித்தபடி..
வெறிச்சோடி தாடியைக் கோதியபடி
இறுகிப் போன முடியை நீவியபடி..
இங்கு தான் எங்காவது பார்த்திருப்பீர்கள்...
கடந்த மாதமோ
சென்ற வாரமோ
மூன்று நாட்களுக்கு முன்போ
அல்லது இன்று காலையிலோ பார்த்திருப்பீர்கள்...
ஒருவேளை உங்களில்
யாரேனும் பார்க்கவில்லை என்றால்
உடனே போய்ப் பார்த்துவிடுங்கள்
அவர் இன்னும் சாகவில்லை
நிச்சயமாக அவர் இன்னும் சாகவில்லை...
மற்றுமொன்று
போகும் போது
தனியாகச் செல்லுங்கள்
குழந்தைகளை அழைத்துச் செல்லாதீர்கள்..
குழந்தைகளைக் கண்டதும்
அவர் மனிதனாக மாறிவிடுவார்...
தயவுசெய்து
அவரை அப்படியே
விட்டுவிட்டு வாருங்கள்..
அது அவருக்கான உலகம்..
ம.லோகேஸ்வரன்
தமிழ் உதவிப் பேராசிரியர்
மழை
மழை என்பது கடவுளால் உண்டான
நீரினால் ஆன ஐம்பூதங்கள் அடங்கிய ஓர்
சக அற்புதப் படைப்பு மழை!
இவை அனைத்தும் அடங்கிய வருண
தேவரால் பொழியப்பட்ட மழை!
அனைத்து மக்களின் மகிழ்ச்சி மட்டுமல்ல
மக்களின் தாகமும் மழை!
விவசாயிகளின் உயிர் மூச்சும் மழை!
விவசாய மக்களின் பெரும் வீழ்ச்சும் மழை!
மக்களின் துயர்நீங்கா உயிர் பறிப்பதும் மழை!
மக்களின் மகிழ்ச்சியும் மழை! துன்பமும் மழை!
இன்பமும் மழை! சோகமும் மழை!
ரா.ரம்யா
முதலாமாண்டு ஆடை வடிவமைப்புத் துறை
இளைய சமுதாயமே கைகொடுப்பீர்
சிந்தையில் சிந்தித்தால்,
நன் மந்திரம் போதித்தால்,
விந்தையால் விதை விதைத்தால்,
மந்தையில் வளம் நீ படைத்தால்
சந்தையில் சாதிப்பாய், சரித்திரம் நீ படைப்பாய்,
சாகச உடை உடுப்பாய், சாதியை நீ உடைப்பாய்,
சமரசம் அதை தொடுப்பாய,; சங்கமம் நீ தொகுப்பாய்,
சங்க நூல் வழி மதிப்பாய் - நீ
தழிழனாய் தடம் பதிப்பாய்.
பவித்ரா வெங்கடேசன்
முதலாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்
பூமித்தாய்
பூமித்தாயே! நீ மக்கள் அனைவரையும்
உன் குழந்தையாக நினைத்து அவர்களைத் தாங்கினாய்
ஆனால் அவர்களோ உன்னைத் தாய் என்று பாராமல்
உன்னை அவமதித்தனர் இருந்தும் நீ அவர்களை
கீழே விழாமல் தாங்கினாய்
இதுதான் தாயின் அன்போ? என்று வியந்தேன்..
வர்சிதா
முதலாம் ஆண்டு கணிதவியல் ஆ பிரிவு
அன்பு
நம்வாழ்க்கையில் பல மனிதர்களை சந்திக்கிறோம்
அவர்களிடம் இருந்து நாம்அன்பு. , பாசம் போன்ற பல குணங்களைப் பார்க்கிறோம்
இதை விட ஆயிரம்குணங்களைநம்மிடம் காட்டுவது நம் பெற்றோர்கள் தான்
இவர்களை விட உலகில் வேறெதுவுமில்லை..
உலகத்தில் பல்வேறு வார்த்தைகள் உள்ளன.
மிக சிறந்ததாக மதிக்கப்படுவது
அம்மா என்ற வார்த்தை மட்டுமே
அம்மாவுக்கு ஈடு வேறு எதுவுமில்லை.
வ..ரூபிகா
முதலாம் ஆண்டு கணிதம் இ
உறவுகள்
உன்னைத் திட்டினாலும் அடித்தாலும் உன்
நலம் நாடும் தந்தை
நீ அழும் போதெல்லாம் உன்னுடன்
சேர்ந்து அழும் தாய்
என்றும் உனக்காகவே பேசும் தங்கை
நீ விலகி விலகிப் போனாலும்
உன் அன்பைத் தேடும் தம்பி
நீ விழும் போதெல்லாம் தோல்
கொடுக்கும் தோழிகள்
உன்னை நல்வழிப்படுத்தி
உயர வைக்கும் ஆசிரியர்கள்
உன் வெற்றியைக் கண்டு
பெருமிதம் கொள்ளும் உறவுகள்
இத்தனை உறவுகள் இருக்கும் போது
உன்னை அழவைக்கும் காதல் எதற்கு..?
தாமரைச்செல்வி
முதலாம் ஆண்டு கணிதவியல் ஆ பிரிவு
காலங்கள் கடந்த நட்பு
கண் இமைக்கும் நேரத்தில்
சேர்வது நட்பல்ல!
கண் இமை மூடும் வரை
சேர்ந்து இருப்பது தான் நட்பு!
எங்கேயோ பிறந்தோம் அடிக்கடி பேசிக்கொண்டோம்
உறவுகளுக்கு மேல் உயிர் ஆனோம்
காலங்கள் கடந்துப் போனாலும்
கடைசி வரைத் தொடர வேண்டும் நம் நட்பு.
நந்தினி
முதலாம் ஆண்டு கணிதவியல் ஆ பிரிவு
கேள்வியோடு பெண்...
விதையாய் விதைத்து வளர்ந்து
பெண் விடுதலை அல்ல
விதையாய் விதைத்து மரமாய்
வளர்ந்து பெண் வன்கொடுமை
காலத்தோடு வளர்ந்த நாகரிகமுள்ள
சமூகம் ஏன் நாகரிகம்
இழந்து பெண் இனத்தை தீமை
என்ற தீயால் கொடுமைச் செய்கிறது
கேள்விகளோடு அலைந்து விடையின்றி
தவிக்கும் பெண் இனம்.
ச.ஐஸ்வர்யா
முதலாமாண்டு ஆங்கிலத்துறை
சனி, 20 ஜனவரி, 2018
வியாழன், 4 ஜனவரி, 2018
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)