திங்கள், 25 டிசம்பர், 2017

விதை

எவரும் வாய்ப்பே தரவில்லை
நான் வளரமாட்டேன் என்று....!!
என்னையும் ஒருவர்
மண்ணில் விதைத்தார்,,,,
ஒருநாள் நானும்
முளைத்து வருவேன் என்று...!!
நானோ பல நாள்கள்
முயற்சி செய்தேன்...!!
இன்று
பூமிக்கு அடியில்
வேர் பிடி‌க்க
ஆரம்பித்து விட்டேன்...!!
விரைவில்
பூமிக்கு மேலேயும்
அவதரிப்பேன்,,
அனைவருக்கும்
பயன்தரும்
பெரிய மரமாக...!!!!

# விதை #

----மு. நித்யா.

2 கருத்துகள்:

 1. நன்று. பாராட்டுகள்.

  இப்படி தனித் தனி கவிதைகளாக வெளியிடாமல் இன்று வெளியிட்டு இருக்கும் அனைத்தையும் ஒரே பதிவாக வெளியிடலாம். படிப்பவர்களுக்கு கொஞ்சம் வசதியாக இருக்கும். இது ஒரு Suggestion மட்டுமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கு நன்றி சகோ. தங்களின் வேண்டுகோலுக்கு இணங்க வெளியிடுகிறோம். நன்றி

   நீக்கு