செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

அதிரடியாக ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக்கின் 'அகுய்லா'..!

மிகப்பெரிய சமூக வலைதலமான பேஸ்புக், இன்டர்நெட் மூலம் உலகை இணைக்கும் திட்டமான சூரிய சக்தி மூலம் இயங்கும் தனது ட்ரோன் ஆன 'அகுய்லா'வை (Aquila) தொடங்கியுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று தொடங்கப்பட்ட இந்த ட்ரோன் தான் உலகை முன்னேற்ற உதவும் முதன்மை இணைய அணுகலை (primary internet access) கொண்டு முதல் முழு அளவிலான டிரோன் என்பதும் குறிப்பிடத்தக்கது. அகுய்லா ட்ரான் ஆனது பறக்கவல்ல தற்கால விமானம் வடிவமைப்பின் முன்னோட்டம் என்றும் இதன் மூலம் வளரும் உலகின் அத்தியாவசிய இணைய அணுகல் பெற முடியும் என்றும் பேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சூக்கர்பெர்க் பதிவின் கீழ் 'இரண்டு ஆண்டு பொறியியல் வேலைகளுக்கு அகுய்லா ட்ரோன் வெற்றிகரமாக தனது முதல் விமான விமானத்தை தொடங்கியது என்பதை அறிவிக்க பெருமைப்படுகிறேன். சூரிய சக்தி மூலம் இயங்கும் இந்த விமானம் உலகின் தொலை தூர பகுதிகளுக்கு 'பீம்' () வழிமுறையில் இணைய வசதியை வலபிக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இறுதியாக நீண்ட ஆளில்லா விமானம் சார்ந்த வரலாற்றை நாங்கள் உருவாக்கிவிட்டோம்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
'மாதிரிகள் மற்றும் விமானம் அமைப்பு மற்றும் வளர்ச்சி குறித்து இரண்டு ஆண்டுகளாய் சேகரிக்கப்பட்ட தரவுவுகளின் கீழே இதன் இயக்கம் இருக்கும். இதற்கு முன்பு நிகழ்த்தப்படாத வண்ணம் 60,000 அடி உயரத்தில் இருந்துகொண்டே லேசர்கள் மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் 'அக்குய்லா' ஒரு மாதங்களுக்கும் மேல் வானத்தில் தங்கும்' என்றும் மார்க் சூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
'உலகம் முழுவதையும் இன்டர்நெட் மூலம் இணைப்பது மற்றும் இணைய வசதிக்கான சாத்தியமே இல்லாத 4 பில்லியன் மக்களை ஆன்லைனுக்கு கொண்டு வருவது தான் எங்கள் முக்கிய நோக்கம்' என்றும் மார்க் சூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

11 கருத்துகள்:

 1. நல்லதொரு பயனுள்ள தகவல் சகோ
  தங்களது தளத்தில் இணைந்து கொண்டேன் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையை என்றுமே எதிர்ப்பார்த்துக் கொண்டு இருக்கிறோம் ஐயா.தாமதமான பதிலுறைக்கு மன்னிக்கவும் ஐயா.

   நீக்கு

 2. புதிய டெக்னாலாஜி தகவல்களை எளிமையாக தமிழில் பகிர்ந்தற்கு பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 3. //4 பில்லியன் மக்களை ஆன்லைனுக்கு கொண்டு வருவது தான் எங்கள் முக்கிய நோக்கம்' என்றும் மார்க் சூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.//

  இதன் மூலம் குறைந்தது 40 மில்லியன் வருமானத்தை ஈட்ட வேண்டும் என்பதுதான் அவரது மறைமுக திட்டமாக இருக்கும். காரியம் இல்லாமல் செட்டி ஆற்றோட போகமாட்டான் என்ற பழமொழி இவருக்கும் பொருந்தும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா உண்மையே ஐயா.சிந்திக்க வேண்டிய ஒன்று தான்.தாமதமான பதிலுறைக்கு மன்னிக்கவும் ஐயா.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களின் மறுமொழிக்கு நன்றிகள் ஐயா.தாமதமான பதிலுறைக்கு மன்னிக்கவும் ஐயா.

   நீக்கு
 5. Good information.

  Radha (www.tngovernmentjobs.in)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா.சென்று பார்கிறேன்.தாதமான பதிலுறைக்கு மன்னிக்கவும் ஐயா.

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களின் மறுமொழிக்கு நன்றிகள் ஐயா.தாமதமான பதிலுறைக்கு மன்னிக்கவும் ஐயா.

   நீக்கு