செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

தன்னம்பிக்கை 4

Image result for தன்னம்பிக்கை


(தன்னம்பிக்கை தொடர்கின்றது…)
   
  ஆயிரம் வார்த்தைகள் சாதிக்க முடியாததை மவுனம் சாதித்துவிடும்.அது ஒரு ஞானக்கலை. அதற்கு நம் மனதை நாம் பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும்.
  
  ஒரு பவுத்த விஹாரத்திற்குள் துறவி ஒருவர் வந்தார்.அமைதியாக அங்கே அமர்ந்தார். புத்தரின் அருள்முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். அப்படியே நெடுநேரமாய் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.
    
   பின்னர் எழுந்து,அமைதியாக விஹாரத்தை விட்டு வெளியேறினார்.அப்படியே தினந்தோறும் நிகழ்ந்தது. விஹாரத்தின் பொறுப்பாளர் இதை அனுதினமும் கவனித்து வந்தார்.
   
  ஒருநாள் வழக்கம்போல் அந்தத் துறவி விஹாரத்திற்குள் வந்தார். தியானத்தில் ஆழ்ந்தார். நீண்ட நேரத்திற்குப்பின் வெளியே வந்தார். மடத்தின் தலைமைக் குரு அவரை அணுகிக் கேட்டார்;

             
                                 (தொடரும்..)

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

தன்னம்பிக்கை 3

Image result for தன்னம்பிக்கை

(தன்னம்பிக்கை தொடர்கிறது…)
  
  விஷத்தைக் கக்குவதுபோல் பேசிப்பேசி உங்களைக் காயப்படுத்துகின்றவர்கள் உங்கள் பக்கத்தில், உங்கள் அலுவலகத்தில், உங்கள் உறவினர்களில் இருக்கத்தானே செய்கிறார்கள்.
   
   அவர்களின் வார்த்தைக்கு வார்த்தை நீங்கள் பதில்பேசிக் கொண்டிருந்தால், அதனால் மேலும் மேலும் புண்படப் போவது என்னவோ உங்கள் மனம்தான்.
   
  வீண்பேச்சை வளர்த்துக் கொண்டிருப்பவர்களின் நோக்கமெல்லாம் உங்களைச் சங்கடப்படுத்துவதுதான். எனவே அவர்கள் நல்லிணக்கத்திற்கோ, நல்லுறவிற்கோ ஒரு போதும் வழிவகுக்க மாட்டார்கள்.
   
  அவர்களுக்கு மத்தில் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வதற்கு, மவுனம்தான் மிகச்சிறந்த வழி. அமைதி என்பது ஓர் அற்புதமான ஆயுதம்.  
                      
                       (தொடரும்..)