ஞாயிறு, 31 ஜூலை, 2022

முத்தின் உறவு

கவிதையின் கண்களைக் 

கண்ணீரில் கண்ட நாட்கள்!

இன்று விழியின் விழிம்பில் நதி

வற்றிக் கிடப்பது ஏனோ... 

தாயின் உறவு கொப்புக்கோடியில்

தந்தையின் உறவு கைப்பிடியில்

 அன்னனின் உறவு அறவணைப்பில்

உறவுகள் சிற்பிக்குள் உள்ளதைப்

போல் ஒன்றாக இருந்த

நாட்கள் ஏனோ!!

சிதறிய முத்துக்கள் 

நாளடைவில் பிறந்தன 

முத்துகளை தேடியே தொலைந்தேன்!!


 விழியில் வழிந்த கண்ணீர் 

வற்றிப் போய் கலைத்தன

முத்துகளைத் தேடி நான்

தொலைந்தேன்

என் கண்ணிள் கவிதையை

காணவில்லை..

என்னோடு சேர்ந்து .

என் கவிலையும் தொலைந்தது.. !!!

சனி, 30 ஜூலை, 2022

கவியின் விழி

இருளில் இருந்த

என்னை

கவியால் விழி 

திறந்த ஒளியே... !

விரைவில் கவிவழி 

விழி திறக்க வை..!

வியாழன், 28 ஜூலை, 2022

அப்பா

ஆசைப்பட்ட 
அத்தனையும் 
தந்தவரே!!
ஆசையாக
 இருக்கிறது
இறுதிவரை
உன் ஆசைமகளாகவே
இருக்க அப்பா!!!

செவ்வாய், 26 ஜூலை, 2022

தங்க மயில்

தோகை இல்லாமல் 
பறக்கிறேன் !!
நகை இல்லாமல்
ஜொலிக்கிறேன்!!
ஒவ்வொரு முறையும்
நீ குறுஞ்செய்தியில்
தங்க மயில் என்கிறபோது!! 

வாடிய மலரே நீ

வாடிய மலரைக் காண சென்றேன்...!

அழகாய் மலர்ந்த மலர்கள் 

ஏனோ 

வினவியது....

உன் கண்களை கவர்வது போல

பல வண்ணங்களாய் பூத்துள்ளேன் !

என் மணம் உன்னை 

ஈர்க்க  வில்லையா? 

என் வண்ணங்கள்

உன் கண்களை

ஈர்க்க வில்லையா ? 

ஏன் என்னை விலக்கி

வாடிய மலரை வர்ணிக்கின்றாய்?

என் கண்கள் 

உன்னைக் காண நினைப்பது 

ஏனோ 

நான் மறைத்த உண்மை மலரே..! 

ஆனால்..

வாடிய மலர் தனிமையில் 

இன்னும் வாடுகின்றன 

வர்ணிக்க யாருமில்லாமல்

அதனை உணர்ந்த என் மனம் .

உன்னைக் காண நான் வருகின்றேன்..

வர்ணிக்க வருகின்றேன்  

வருந்ததே மலரே.... !

நான் கூறியதைக் கேட்ட

வண்ண மலர்கள் புரிந்து கொண்டு

அழைத்துச் செல் என்னையும் 

காண வருகிறேன் அழகிய

வாடிய மலரை...!

அழகின் ரகசியமே 

வாடிய மலரே நீ.... !!