இவாரிஸ்ட் கலோயிஸ் ஒரு பிரெஞ்சு கணிதமேதை ஆவார்; இவர் 1811 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் நாள் பாரீஸ் நகரத்தின் அருகிலுள்ள கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை ‘நிக்கோலஸ் காப்ரியல் கலோயிஸ்’ ஆரம்பப்பள்ளி ஒன்றின் இயக்குநராகவும், பின்னாளில் பாரீஸ் நகர மேயராகவும் பணியாற்றினார்.
கணிதமேதை கார்ல் ப்ரெட்ரிக் காஸைப் போலவே கலோயிஸ{ம் நினைவாற்றலில் சிறந்து விளங்கினார். கலோயிஸின் 12 ஆவது வயது வரை அவரது தாயாரே அவருக்குக் கல்வி கற்பித்தார். 1823ஆம் ஆண்டு ‘லூயி பால் எமிலி ரிச்சர்டு’ என்ற கணித ஆசிரியரிடம் இவர் கணிதம் கற்றார்.
கணிதத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த இவர் தனது பதினேழாவது வயதில் ‘தொடர் பின்னங்கள்’ பற்றிய கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டார்.
தொடர்ந்து கணித ஆராய்ச்சியில் ஈடுபட்ட கலோயிஸ் “சமன்பாடுகளின் தேற்றம்” பற்றிய கட்டுரை ஒன்றை பாரீஸ் அகாடமியில் சமர்ப்பத்தார். அக்கட்டுரையைக் கண்ட கணிதமேதை ‘அகஸ்டின் காச்சி’, பெரிதும் வியந்தார். பாரீஸ் அகாடமிக்கு கலோயிஸை சிபாரிசு செய்தார்.
1830ஆம் ஆண்டில் கலோயிஸ் கணிதம் பற்றிய தனது ஆராய்ச்சிகளை பல சிறு கட்டுரைகளாக விஞ்ஞான இதழ் ஒன்றில் எழுதி வந்தார். அகஸ்டின் காச்சி, ஜெகோபி, பாயிஸான் போன்ற கணிதமேதைகளின் கட்டுரைகளும் அந்த இதழில் வெளியாகி வந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கலோயிஸ் கண்டறிந்த ‘சமன்பாடுகள் பற்றிய தேற்றம்;’ பின்னாளில் அவரது பெயரிலேயே ‘கலோயிஸ் தியரி’ என்று அழைக்கப்பட்டது.
பின்பு எகோல் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து, நுண்கணிதத்தில் தேர்ச்சி பெற்றார்.
கலோயிஸ{க்கு அரசியலிலும் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இவரது தந்தை நிகோலஸ் பிரெஞ்சுப் புரட்சியில் பங்கேற்றிருந்தார். அக்காலத்தில் அரச பதவிகளில் இருந்தவர்கள் கொடுத்த நெருக்கடியின் காரணமாக நிக்கோலஸ் தற்கொலை செய்து கொண்டார். தந்தையின் மரணம் கலோயிஸின் மனதை வெகுவாகப் பாதித்தது.
பிரெஞ்சு மன்னராட்சிக்கு எதிராக கலோயிஸ{ம் புரட்சியில் ஈடுபட்டார். ஜனநாயகம் கோரி புரட்சி நடத்திக் கொண்டடிருந்த ‘ஆர்ட்டிலரி ஆஃப் தி நேஷனல் கார்டு’ என்னும் ஆயுதம் தாங்கிய அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு, மன்னராட்சிக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டார்.
அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட காரணத்தினால் கலோயிஸ் எகோல் கல்வி நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். எனவே அவரது வாழ்க்கையை வறுமை சூழ்ந்தது.
பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வாழ்க்கையை நடத்த ஆரம்பித்தார் கலோயிஸ். இது தவிர, பாரீஷ் பள்ளி கல்லூரிகளில் கணிததத்தை எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பது பற்றிய நூல் ஒன்றையும் இவர் எழுதினார். அந்நூலில் இவர் எழுதிய பயிற்சி முறைகள் அனைத்தும் அவரது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் அமைந்திருந்தன.
புரட்சியில்’ ஈடுபட்ட கலோயிஸ் சிறையில் அடைக்கப்பட்டார். 1832 ஆம் ஆண்டு அவர் சிறையிலிருந்து விடுதலையானார். சிறையிலிருந்து வெளியான பிறதும் அவர் போராட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்ளவே செய்தார்.
கலோயிஸ் பங்கேற்றிருந்த புரட்சி அமைப்பில் ஒரு சிலர் தனி இயக்கமாகச் செயல்பட்டு வந்தனர். அவ்வேளையில் பல்வேறு வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்தன. அவ்வாறு நிகழ்ந்த ஒரு வன்முறைச் சம்பவத்தில் 1832 ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் தேதி, ஒரு துப்பாக்கிச் சூட்டில் கலோயிஸ் காலமானார். அப்போது அவருக்கு வயது 21 ஆகியிருந்தது.
கலோயிஸ் போராட்டங்களில் கலந்து கொண்ட வேளையிலும் கணித ஈராய்ச்சிகளைப் புரிந்த வண்ணமே இருந்தார். அவர் இறப்பதற்கு முதல் நாள் இரவு ‘குழு எண்களின் தேற்றம்’ (புசழரி வாநழசல) பற்றி கலோயிஸ் எழுதிய கட்டுரை ஒன்று நிறைவு பெறாத நிலையில் இருந்தது. அன்றைய தினமே கலோயிஸ் இருந்தார் என்பது குறிப்படத்தக்கது.
‘க்ரூப் தியரி’ பற்றி உலகிற்கு முதலில் கூறியவர் கலோயிஸ் ஆவார். அவர் தான் இறந்த அன்று இரவில், தனது நண்பரும் கணிதமேதையுமான ‘செவாலியர்’ என்பருக்கு எழுதிய கடிதத்தில் தனது புதிய கணித கண்டுபிடிப்பு பற்றி குறிப்பிட்டிருந்தது பின்னாளில் தெரியவந்தது.
‘குரூப் தியரி’ மட்டுமின்றி ‘அல்ஜீப்ரா சமன்பாடு’ மற்றும் மனித அனுபவத்திற்கு அப்பாற்பட்ட ‘மீதங்களின் செயல்பாடு’ ஆகியவற்றின் தொடர்புகள் பற்றியும் கலோயிஸ் பல உண்மைகளைக் கண்டறிந்து கூறியுள்ளார்.
குறிப்பு: படித்ததில் பிடித்தது
நூல் : உலக கணித மேதைகள்
பக்கஎண்- 44