புதன், 25 செப்டம்பர், 2019

இல்லை

நீ ஒன்றும் அழகில்லை

அழகால் எதுவும் பயனில்லை

உன் அறிவிற்கோர் எல்லையில்லை

ஆனாலும்
அதை நீ வாடவிடுவதில்லை

நீ அன்பிற்கு அணையிட
அது ஒன்றும் ஆற்றோர அலையில்லை

உனக்கு ஆட்கடலினும்
சுமை கொள்ளை

ஆனாலும்
அதை நீ பொருட்படுத்தவில்லை

எனவே
நீ வெற்றியை  விட்டதில்லை
தோல்வியைத் தொட்டதில்லை

பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்

என் ஆசிரியை

என் செவிலித்தாயே

என்னை நீ
ஜொலிக்கச் செய்தாயே

நீ ஓர் பெண் மகளின் தாயே

எம்முள் ஓர் பொன்மகளும் நீயே

உன் ஆற்றல் உன் மேனி

அச்சமின்றிப் பணியாற்றலாம் வா நீ

உந்தன் சிரிப்பே உனக்குச் சிறப்பு

உந்தன் உன்னதமே -இங்கு
தோன்றுது எனக்கு

பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல் 

காலம்

வாழ்ந்த காலம்
கவிதையைப் போன்றது

வாழும் காலம்
கடிதமாய் ஆனது

வாழ்க்கையே ஓர்
கதைபோலத் தோன்றுது

அன்புள்ள ஆசிரியருக்கு

அன்புள்ள ஆசிரியருக்கு

அன்பளிப்பு அளிப்பதற்கு

ஆசான்வில் தொடுப்பதற்கு

அமுதமதில் தெளிப்பதற்கு

அர்த்தங்களை உரைப்பதற்கு

ஆசான்களே கூடி வருக

எமக்கு அறிவுப்பொருள் தந்து அருள்க

பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல் 

வீழ்ந்தேன்

என் கண்கள் என்ன பாவம் செய்தன

உன்னைக் காணாது தவிக்கின்றன

என் நெஞ்சம் கொண்ட தவத்தின் வரவோ
உன் நினைவு கொள்கிறது

ஏன் பஞ்சம்
 உன்னை காணாமலா
நீ சொல் கொஞ்சம்

இதுவே முடிவா
நம் காதல் என்ன சிதறிய கடுகா

விரும்பியே விடத்தினை விழுங்கிவிடவா
வீரத்தை இழந்து வீழ்ந்தேன் தலைவா

பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்