கடந்த சில மாதங்களாகவே நாம் இந்த வார்த்தையை அதிகம் கேட்கிறோம் இது என்னை மிகவும் காயப்படுத்தியது. என்னதான் வாட்ஸ் அப்பில் நாளை கல்லூரி விடுமுறை என்று ஸ்டேடஸ் வைத்தாலும் மனம் ஒரு விதத்தில் வலிக்கிறது.
முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களாக இருந்தாலும் சரி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் மறைவாக இருந்தாலும்
இன்றைய தலைமுறை "தலைவர்கள் இறந்தால் பள்ளி,கல்லூரிக்கு ஒருநாள் விடுமுறை கிடைக்கும் என்று மகிழ்ச்சி அடைவது மிகவும் மன வேதனையை அளிக்கிறது. எதற்காக பள்ளிக்கு செல்கிறோம் என்று தெரியாமலே பள்ளிக்கு செல்கின்றனர் குழந்தைகள். அவர்கள் வீட்டிலிருந்து விளையாடி உறவுகளை தெரிந்து கொள்ளும் வயதில் பள்ளிக்கு அனுப்பிவிடுகிறோம்.இதனால்,பள்ளிக்குழந்தைகளுக்கு யார் இறந்தால் என்ன எனக்கு 'ஒருநாள் விடுமுறை 'என்ற மனோ நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். பள்ளிக்கூடங்களில் மட்டுமல்ல கல்லூரியில் எனது தோழியர் கூட்டம் கூட "நாமெல்லாம் யாரு ஒரு நாள் விடுமுறைக்காக முக்கிய தலைவர்களையே இறக்க சொன்னவர்கள் " என கெத்து காட்டுகிறார்கள். இத்தனை வருடங்களாக நமது கல்வி இதனையா போதித்தது இல்லையே..
தலைவர்களை இழந்து
தமிழகமே வாடுகிறது
ஆனால்,
இந்த மாணவ சமுதாயம் மகிழ்ச்சி அடைகிறது. காரணம் "பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
இனிமேலாவது,
வேதனையடையுங்கள்
நல்ல தலைவர்களை இழந்ததற்காகவும், இன்று பள்ளி, கல்லூரிகளிலில் கற்க வேண்டியதை தவற விட்டோம் என்று........