தேவையற்ற எண்ணங்களை
எவ்வாறு என்னால் குறைக்க முடியும்?
ஒவ்வொறுக்கும்
ஒரு செயல் புரிவதில் மகிழ்ச்சி ஏற்படும். நமக்கு எப்பொழுது தேவையற்ற எண்ணங்கள் உருவாகும்?
நாம் நம்மை எந்த வேலையிலும் ஈடுபடுத்தாது இருக்கும்போது இவ்வாறான எண்ணங்கள் உருவாவது
இயல்பு. ஆனால், அதறக்கு வடிவம் கொடுக்கும்போதுதான் நாம் இன்னும் முட்டாள்களாகிறோம்.
நான் தேவையற்ற எண்ணங்கள் உருவாகும் போது என்னை ஒரு செயலில் ஈடுபடுத்திக்கொள்வேன்.
ஒரு குட்டி நாயின்
புன்னகையையும் அதன் நட்புடன் விளையாடும்போது, அது தனது சிறிய கால்களை அதன் தாயிடம்
சென்று அதனுடன் விளையாட அழைப்பதை பார்க்கும்போது ஏற்படும் மனமகிழ்ச்சிசை எந்த எண்ணங்களாலும்
செயல்படுத்த இயலாது! ஆகையால், நாம் நடக்காத ஒன்றை பற்றி சிந்திக்க தொடங்குவதை நிறுத்தி
என்று தமக்கு வாழ்வில் மகிழ்ச்சி அளிக்கும் மனநிறைவு தரும் செயல்களை செய்ய தொடங்கிறோதோ
அன்று அவ்வாறான எண்ணங்களே நம்மை விட்டு விலகி விடும்.