வியாழன், 19 அக்டோபர், 2017

வாலன்டயன்ஸ் டே

                                                                வாலன்டயன்ஸ் டே
ரோம் நகரம் பிலாடியஸ் மன்ரால் ஆட்சி செய்யப்பட்டது.அங்கு அரசுக்கு பணிபுரியும் படைவீரர்கள் திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. சேயின்ட் வாலன்டயன் என்பவர் கடவுளான இயேசுவை மட்டும் மதிப்பவர். இவர் அந்த நாட்டில் அரசிர்க்கு எதிராக போர்வீரர்களுக்கு திருமணம் செய்து வைப்பார்.
இந்த விஷயம் அரசுக்கு தெரிந்து அந்த பாதிரியாரை சிறை பிடித்தார். சிறை சென்றும் அங்கு ஒரு கண் தெரியாத பெண்ணிற்க்கு அன்பு கடவுளின் அன்பைப் பற்றி விலக்கி குறிக்கொண்டிருந்தார்.அந்த பெண்ணிடம் கடவுளிடம் அன்பாய் எதைக்கேட்டாலும் கொடுப்பார் என்று கூறினார்.அந்த பெண்ணும் அவளுக்கு கண் பார்வை வர வேண்டும் என்று வேண்டி பார்வை பெற்றாள். இந்த சம்பவம் அறிந்த அரசு அந்த பெண்ணின் கன் முன் இவரை தூக்கிலிடும்படி ஆணையிட்டார்.இறப்பதற்க்கும் முன் இவர் நிறைய காதல் கவிதைகள்(அன்பினை வெளிப்படுத்தும்) எழுதினார்.தன் வாழ்நாள் முழுவதும் அன்பிக்காக அயராது உழைத்து உயிர்நீத்தார்.ஆகையால், இவரது இறந்த நாளை காதலர் தினமாக கொண்டாடுகின்றனர்.

                                     

சனி, 14 அக்டோபர், 2017

           

                                                பணத்தின் நட்பு
friend க்கான பட முடிவு

    "டேய் பிரபு! எப்படி இருக்க ?பார்த்து  எவ்வளவு நாளாச்சு" என்றபடி தனது பால்ய நண்பனைக் கட் டிக்  கொண்டான் பாலன். 
                 "சின்ன வயதில் பார்த்தது ஆளு அடையாளமே  தெரியாத அளவு க்கு  மாறிட்ட ,பசினஸ்  எல்லாம் எப்படி போவுது"  என நலம் விசாரிக்கத் தொடங்கினான் பிரபு....
                 "கந்தன் தான் உன்னைப் பத்தி அடிக்கடி எங்கிட்ட பேசிட்டே இருப்பான் ...உன்னை பார்த்தால் ரொம்ப சந்தோஷப்படுவான்...ஆனால் பாவம் ரொம்ப க் கஷ்டப்படறான்......"
               "ஏன் என்னாச்சு  அவனுக்கு ?" என கேட்டுக்கொண்டே  தன் சிகரட்டைப் பற்ற வைத்தார்.
             "கந்தனின் அப்பா  இறந்ததும் அவரோட சொத்துகளை பங்காளிங்க பங்கு போட்டுக்கொண்டனர் ... மீதி இருக்க நிலத்தில தான் விவசாயம் செய்து வாழறான்...அப்பப்ப வந்து பார்த்துவிட்டு செல்வான்,நானும் என்னால் முடிஞ்ச உதவி செய்வேன் ".
                                  பிரபு  சிறிது நேரம்  யோசித்துவிட்டு  பின் பாலனிடம்,"டேய் பாலன்  நான் உன்கிட்ட தொடர்பில் இருக்கிறதா அவன் கிட்ட சொல்லாமல் இரு நாளைக்கே  வந்து பணம் கேட்டாலும் கேட்பான் ...ஆனால் உனக்கு பிசினஸில் எதாவது உதவி தேவைன்னா நான் செய்யறேன்"என்று சிரித்துக்கொண்டே சென்று விட்டான் பிரபு
               பாலனுக்கு துக்கிவாரி போட்டது....சிறு வயதில் இணை பிரியாத் தோழானாய் வாழ்ந்த அவனையா இவன் இப்படி பேசுகிறான்....என வருந்தினான் பாலன் .
                      பாலன் பிரபுவை சந்தித்ததை அறிந்த கந்தன்பாலானிடம் கேட்ட முதல் கேள்வி .....
                           "டேய் பாலா! பிரபு நல்லா இருக்கானா...."

வியாழன், 12 அக்டோபர், 2017

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது?

துக்க வீடுகளில் பறை அடிப்பதன் அவசியம் என்ன?

சுமார் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாட்டில் (பொதுவாக உலகில்) மருத்துவர்களும், மருத்துவ வசதிகளும் மிகக் குறைவு தான். பேச்சு மூச்சில்லாமல் ஒருவர் சும்மா கிடந்தால் அவர் இறந்து விட்டார் என்ற முடிவுக்கு வ்ருவது மிகவும் சிரமமான காரியமாய் இருந்தது. இப்பிரச்சனையை போக்க சிலர் கண்டுபிடித்தது தான் பறை.
அப்படினா அதுக்கு மருத்துவ குணங்கள் இருக்கானெல்லாம் நீங்க கேட்கக் கூடாது. மேல படிங்க.
பறையோசை என சொல்லப்படும், பறையிலிருந்து வரும் ஓசைக்கு அசைவு கொடுக்காத மனிதர்களே கிடையாதாம். அதிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்டவுடன் நாடி, நரம்புகள் அனைத்தும் துள்ளி குதித்துக் கொண்டு ஒரு வித வைப்ரேஷனைக் கொடுக்குமாம்.

யார் ஒருவர் பறை சத்தத்திற்க்கும் ஆடாமல் அசையாமல் பிணம் போல் இருக்கிறாரோ, அவர் உயிர் இறந்து விட்டார் என்ற முடிவிற்க்கு வந்தார்களாம் நம் முன்னோர்கள். இரு குச்சிகளைக் கொண்டு அடித்து எழுப்பபடும் ஓசைக்கு அப்பேர்பட்ட சக்தி இருக்கிறதாம்....
படம்
இராவணனைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள் தமிழர்களே!!

1. இராவணன் உத்தரப் பிரதேசத்தில் பிஷ்ரக் எனும் ஊரில் பிறந்தவன்.

2. விஸ்ரவஸ் என்பவனுக்கு மகனாக பிறந்தவன்.

3. இராவணனை வலித்த அரக்கன், இராக்கதன் என்று தமிழ்ச் சங்க இலக்கியமாகிய புறநானூறு(378) கூறுகிறது.[ஆரியர்களோ பார்ப்பனர்களோ அல்ல.]

4. இலங்கைக்கு சென்ற இராவணன் குபேரனிடமிருந்து அதை பறித்துக் கொண்டு ஆட்சி செய்தான். இலங்கை இராவணனின் சொந்த ஊரல்ல.

5. தமிழ்ச் சங்கக் கடவுளாகிய திருமால் இராமனாக அவதரித்து இராவணனைக் கொன்றதாக
தமிழ் நம்மாழ்வார் திருவாய்மொழியில் கூறியுள்ளார்

6. ராமாயணத்தைப் பற்றி தமிழ்ச் சங்க அகநானூறு (70), புறநானூறு பாடியுள்ளது.

ராமாயணத்தை கட்டுக்கதை என்போர் தமிழ்ச் சங்க நூல்களையும் கட்டுக்கதை என்று சொல்ல வேண்டும்.

7. தமிழ் முனிவர் அகத்தியரிடம் சமஸ்கிருத வேத பண்டிதனாகிய இராவணன் போட்டியிட்டுத் தோற்றுள்ளான்.

8. இராவணனுக்கும் தமிழுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அவன் குடும்பப் பெயர்களான விபீஷண, கும்ப கர்ண, இந்த்ரஜித், மேகநாத, மண்டோதரி, பூதனை எனும் எந்தப் பெயரும் தமிழ் கிடையாது.

9. சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை தமிழ்க் கடவுளான திருமாலின் அவதாரம் இராமனின் புகழைக் கேளாத காதுகளை ஏசுகிறது.

10. இராமனுக்கும், இராவணனுக்கும் சம காலத்தில் வாழ்ந்த வால்மீகி பதிவு செய்த இராமாயணம் மட்டுமே அதிகாரபூர்வமானது.
மற்ற பிற இராமாயணங்கள் எல்லாம் பிற்காலத்தில் வேறு பலரின் கற்பனைகள் புகுத்தப்பட்டுள்ளது.
அவை நிஜமல்ல.

11. இராவணன் பல பெண்களை கற்பழித்ததால் பிரம்மன் அவனுக்கு இனி எந்தப் பெண்ணையும் விருப்பமின்றி தொட்டால் தலை வெடித்து சாவாய் என சாபமிட்டிருந்தார்.

அதன் பொருட்டே அவன் பின்னாளில் சீதையை தொட அஞ்சினான். உடன் வர கொலை மிரட்டலும் செய்தான்.

12. இராவணனை கொல்லும் முன்னர் இராமன் தமிழ் முனிவர் அகத்தியரிடம் ஆசி பெற்றதாக தமிழ்சேர மன்னர் குல சேகர ஆழ்வார் பெருமாள் திருமொழியில் உரைத்துள்ளார்.

13. பிறன் மனைவியை நோக்காமையே பெரும் ஆண்மை என திருவள்ளுவர் கூறியுள்ளார். அதன்படி இராவணன் ஆண்மையற்றவன்.

இராவணனை புகழ்பவர்கள் திருவள்ளுவர்க்கு எதிரானவர்கள் என்பதை அறிய வேண்டும்.

14. இராவணன் தமிழ் பேசியதாக வால்மீகி இராமாயணத்திலோ தமிழ்க் கம்பராமாயணத்திலோ எங்குமே குறிப்பிடவில்லை.

15. சூர்ப்பநகை சீதையைகக் கொல்ல முயன்றதால் மட்டுமே இலக்க்ஷ்மணன் அவளது மூக்கைத் துண்டித்தான்

16. தமிழ்க் கம்பராமாயணத்தில் இராவணன் ஆய கலைகள் 64ம் அறிந்தவனாயினும் சிறந்த சிவபக்தனாயினும்,

இராவணன் ஈவு இரக்கமற்ற அரக்கன் என்றே கம்பர் கூறுகிறார்

17. வாலி சுக்ரீவனின் மனைவியை அபகரித்தான். தன் எதிரில் வருபவனின் பலம் எல்லாம் இல்லாமல் போக வேண்டும் என்ற வரம் பெற்றவன். அதனால் தான் இராமன் மறைந்திருந்து தண்டித்துக் கொன்றார்.

இதை வாலியே ஒத்துக் கொண்டு செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு விட்டான்.

18. இராமாயண உத்தரகாண்டத்தில் இடைச்செருகல் நிறைய உண்டு.(சூத்திரன் தலை வெட்டப்பட்டது என்பது உட்பட).....படம்

புதன், 11 அக்டோபர், 2017

அமிலம்

பார்ப்பதற்கு
வேண்டுமானால்
சாதாரண
தண்ணீராக
தெரியும்.....
தொட்டு
பார்த்தவர்களுக்கு
மட்டுமே
அதன்
வீரியம்
என்னவென்று
புரியும்....

# அமிலம் #

----மு. நித்யா.