ஞாயிறு, 19 மார்ச், 2017

தமிழ்


தமிழ் வளர போராடுவோம்!

 தமிழ் மறைந்துக்கொண்டுவரும் இக்காலத்தில்

இளைஞர்கள் அனைவரும் ஒன்றுகூடி

 தமிழை வளர்க்க வேண்டும்.

எவ்வாறு தமிழர் பண்பாடான ஜல்லிக்கட்டுக்காக ஒன்றுகூடினோமோ

அதே போன்று தமிழுக்காகவும் ஒன்றுக்கூட வேண்டும்.

 உதாரணமாக  சொல்ல வேண்டுமானால்

தமிழ் என்பது பழச்சாறு மாதிரி,

ஆங்கிலம் என்பது பெப்சி   கொக்ககோலா  மாதிரி

எது  ஆரோக்கியமானது என்று நீங்களே  முடிவு  செய்யுங்கள்.

                                  தமிழை அழிக்க   நினைப்பது
                           
                        தமிழர்களின்  உயிரை  எடுப்பது  போன்றது.
 
                              விடமாட்டோம் தமிழர்  உயிர் உள்ளவரை. 

சனி, 18 மார்ச், 2017

கண்ணாடி

            Image result for கண்ணாடி      
நான் ஒரு கண்ணாடி நீ
சிரித்தால் நானும் சிரிப்பேன் நீ
அழுதால் நானும் அழுவேன் நீ
கோபம் பட்டால் நானும் கோவபடுவேன் நீ
அடித்தால் நான்  திருப்பி அடிக்க மாட்டேன்
ஏனென்றால் நான் உடைந்து விடுவேன்...

                                                                                                                

தெரிந்து கொள்ளுங்கள்

 Whatsapp-புலனம்,
 youtube-வலையொளி,  
 kype-காயலை,
 bluetooth-ஊடலை, 
 wifi- அருகலை
,hotspot-பகிரலை,     
 broadband-ஆலலை, 
 online-இயங்கலை,
 offline-முடக்கலை, 
  thumdrive-விரலி,
  hard disk-வன்தட்டு,     
  gps-தடங்காட்டி.                                 

எவ்வளவு தான் ஆங்கில வார்த்தைகள் வந்தாலும் அனைத்திற்கும் தமிழ் மொழியிலும் பொருள் உண்டு என்பது  பெருமைக்குரிய செய்தி ஆகும்.

ஆசிரியர்களிடம் மாணவர்கள் எதிர்பார்ப்பது..............

   




ஒரு ஆசிரியரிடம் அச்சம் இருக்க வேண்டும் 

அதே நேரத்தில் ஒரு துன்பத்தில் தோள் கொடுக்கும் தோழன், 

தோழியாகவும் 

மற்றும்

நமது திறமைகளை வெளிக்கொணர உறுதுணையாக 

இருக்க வேண்டும். 

பாடத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களை தெரியப்படுத்த வேண்டும்.

 மாணவர்களின் முன் உதாரணமாக ஆசிரியர் திகழ வேண்டும். 

இவ்வாறு இருந்தால்ஒவ்வொரு மாணவனும் வெற்றி இலக்கை நிச்சயம் அடைவான். 

வெள்ளி, 17 மார்ச், 2017

கணித்தமிழ் நூலகம் !

கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் சிறப்பாக செயல்பட்டு வரும் கணித்தமிழ்ப் பேரவைக்கான ஆதார நிதியாக ரூ 25000 வழங்கப்பட்டது. கணித்தமிழ் வளர்ச்சியை மாணவிகளிடம் கொண்டுசெல்லும் முயற்சியாக ரூபாய் 8000 மதிப்புள்ள நூல்கள் வாங்கி கணித்தமிழ் நூலகத்தை எம் கல்லூரியில் உருவாக்கியுள்ளோம்.

ஆதார நிதி வழங்கிய தமிழ் இணையக் கல்விக் கழக இயக்குநருக்கும், மாநில கணித்தமிழ்ப்பேரவை ஒருங்கிணைப்பாளர் தமிழ்ப்பரிதி ஐயா அவர்களுக்கும் எமது நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

எம் முயற்சிக்கு என்றும் துணை நிற்கும் முதல்வர் முனைவா் மா.கார்த்திகேயன் அவர்களுக்கும்
எம் கல்லூரி நிர்வாகத்துக்கும் நன்றிகலந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

எம் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவையின் செயல் வீராங்கனைகளான மாணவிகளுக்கு நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

கணித்தமிழ் நூலகத்துக்காக வாங்கிய நூல்களின் விவரம்..

தமிழ்த் தட்டச்சுப்பயிற்சி

செல்பேசி பழுது நீக்குதல்

கீ போர்டு சார்ட் கட் எம் எஸ். ஓ

கீ போர்டு சார்ட் கட் - சி ஜி டி

கணினியின் அடிப்படை

கட்டற்ற மென்பொருள் ஜிம்ப்

போட்டோ சாப், கோரல் டிரா செயல்முறைப் பயிற்சிகள்

கணினிப் பராமரிப்பு

இணையத்தை அறிவோம்

இது உங்களுக்கானதா பாரு்ஙகள்

கணினித் தமிழ் - இல.சுந்தரம்

தமிழ் விக்கிப்பீடியா

நெட்வொர்க் தொழிலநுட்பம்

லினக்சு

நீங்களும் உருவாக்கலாம் வலைப்பூ

கட்டற்ற மென்பொருள்

லினக்சு

சிஎஸ்எஸ்

எச்டி எம் எல்

மை எக்யூல்

ரூபி

மற்றும் தமிழ்க் கம்யூட்டர்,

கம்யூட்டர் உலகம் இதழ்களின் ஒரு ஆண்டு சந்தா.

கட்டற்ற மென்பொருள் குறுவட்டு 8

கணித்தமிழ் மென்பொருள்கள் குறுவட்டு 2

கணித்தமிழ் வளர்ப்போம்! காலத்தை வெல்வோம்!