ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

'கூச்ச சுபாவமே எனது கேடயம்!"





 'கூச்ச சுபாவமே எனது கேடயம்!" என்றார் மகாத்மா காந்தி. அன்று அவருக்குக் கேடயமாக இருந்த விஷயம், இன்று இளைஞர்களுக்குத் தடையாக இருக்கிறது. கை குலுக்குவதில் இருந்து மைக் பிடிப்பது வரை, இன்று பல இளம் பருவத்தினரை கூச்சம்தான் ஆட்டிப் படைக்கிறது. கூச்ச சுபாவத்தினால் இளைஞர்கள் இழக்கும் வாய்ப்புகள், சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? இதில் இருந்து மீண்டு வருவது எப்படி?



 பொதுவாக, கூச்சம் என்பது அறிமுகம் இல்லாதவரிடம் ஆறு முதல் எட்டு நிமிடங்கள் வரையும், அறிமுகமானவர்களிடம் இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் வரையும் நீடிப்பதாகச் சொல்கின்றன மனநல ஆய்வுகள். அந்த நிமிடங்களைத் தைரியமாகத் தாண்டிவிட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை. இந்த நேரத்தைச் சாதகமாக மாற்றத் தெரியாவிட்டால் அதுவே உங்களுக்குப் பாரமாகி விடும். உங்களின் கூச்சத்துக்கு நீங்கள் மட்டும்தான் முழுமுதற் காரணம். ஏனெனில், பிறக்கும்போதே கூச்ச சுபாவத்துடன் யாரும் பிறப்பது இல்லை.



 'கூச்சம் என்பது ஒருவகையில் பலர் தங்களின் சௌகர்யத்துக்காக அவர்களே வளர்த்துக் கொள்ளும் ஒரு குணம்" என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். 'மற்றவர்கள் நம்மைப் பார்த்துப் பரிதாபப்பட வேண்டும், கருணையாகப் பார்க்க வேண்டும்" என்று உள்ளுக்குள் வேண்டி விரும்பியே பலர் கூச்ச சுபாவத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். பின்னாளில் அதுவே அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாகவும் வந்து நிற்கிறது. ஏனெனில், கூச்சம் கொஞ்ச நாளில் பயமாக மாறிவிடும். நீங்கள் பயந்து ஒதுங்கும்போது, உங்கள் மேல் மற்றவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். அப்புறம் எப்படி ஜெயிப்பீர்கள்?



 சின்ன தயக்கம் கூட, நமக்குள் இருக்கும் திறமையை நாம் உணராதபடி செய்துவிடுகிறது. திறமைகள் இருந்தும் சிலர் தோற்றுப் போவதற்குக் கூச்சமே முதல் காரணம். 'சிரமம் இன்றி எதுவும் இல்லை, சிரமம் என்பது எதுவும் இல்லை" என்பதை உணர்ந்து, தங்களுக்குள் ஏற்பட்ட தயக்கத்தைத் தாண்டி தங்களுக்குள் தங்களைக் கண்டுபிடித்தவர்களே சாதனையாளர்களாகின்றனர்.



 பெற்றோரின் அதிகப்படியான பாதுகாப்பும், அக்கறையும் ஒருவனுக்கு கூச்ச உணர்வை ஏற்படுத்திவிடும். பெற்றோர்கள் ஒருவனை எதற்கெடுத்தாலும் 'தப்பு", 'இது குற்றம்" என்று அடக்கி வைக்கும் போது, அவனுக்கு மன தைரியம் இல்லாமல் போய்விடுகிறது. மகனையோ, மகளையோ எந்தக் காரியத்தையும் செய்யவிடாமல் தடுத்து, பெற்றோர்களே செய்து முடிப்பது ஆபத்தான வளர்ப்பு முறையாகும். இதனால், எந்தக் காரியத்தையும் துணிச்சலாகச் செய்யும் தைரியம் அவர்களுக்குள் வளராமலேயே போய்விடும்.



 கூச்சம் 'ஒரு வியாதி" என்பதைக் கண்டுபிடித்து அதை அடியோடு அழித்து விடவேண்டும்.



 உலகத்தில் மொத்த மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் கூச்சம், பயம், தயக்கத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். உங்களுக்கு எவ்வளவு திறமை இருந்தாலும், கூச்சம் உங்களை இரண்டுபடி கீழே இறக்கி விட்டுவிடும். உடல், சூழல் என இரண்டு காரணங்களால் அதீத கூச்ச உணர்வு ஏற்படுகிறது.



 மூளையில் செரட்டோனின் (serotonin) என்ற ரசாயனம் குறையும்போது தானாகவே பயம், பதற்றம், குற்ற உணர்ச்சி, தாழ்வு மனப்பான்மை, தயக்கம் போன்ற உணர்ச்சிகள் உருவாகும். இதை மாற்றுவதற்கான சூழ்நிலை இல்லையென்றால், கூச்சம் நம் குணமாகவே மாறிவிடும். இதைத்தான் கூச்ச சுபாவம், பயந்த சுபாவம் என்று சொல்கிறோம்.



 ஒன்றே ஒன்றுதான்... கூச்சப்படுபவர்களால் தங்களின் அறிவுக்கும், திறமைக்கும் ஏற்ற வாழ்க்கையை அடைய முடியாது. கூச்சம், தயக்கம் எதுவும் இல்லாதவன்தான் வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்குச் செல்ல முடியும்!

திருக்குறள் கதை


                      
                                                 

குறள் :

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.

குறள் விளக்கம் : 

வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

குறளுக்கான கதை :

சுவாமிநாதன் அந்த கிராமத்தில் பண்டிதர். அவர் சிறந்த அறிவு கொண்டிருந்ததோடு, அன்பும் அடக்கமும் மிகுந்தவராக விளங்கினார். ஏழைக் குழந்தைகளுக்காக இலவச பாடசாலை ஒன்றை அமைத்து கல்வி போதித்து வந்தார். மக்கள் பண்டிதரின் மீது நல்ல மரியாதை வைத்திருந்தனர்.

கண்ணப்பன் என்ற செல்வந்தனும், அதே கிராமத்தில் வசித்து வந்தான். முரடனாகிய கண்ணப்பன் மீது கிராம மக்களுக்கு மதிப்போ, மரியாதையோ இல்லை. செல்வந்தனாக இருந்தும் தனக்கு கிடைக்காத மதிப்பும், மரியாதையும் பண்டிதருக்கு கிடைக்கிறதே? என்று கண்ணப்பன் பண்டிதரின் மீது பொறாமை கொண்டான்.

பண்டிதரை எங்கு கண்டாலும், கண்ணப்பன் வம்புக்கு இழுப்பான். அவமானப்படுத்த நினைப்பான்.

ஒருநாள் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்த பின் பண்டிதர் சுவாமிநாதன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது கண்ணப்பன் தன் தோட்டத்திலிருந்து பறித்த பூசணிக்காயோடு வந்து கொண்டிருந்தான். கண்ணப்பனுடன் அவனது இரு தோழர்களும் வந்தனர்.

கண்ணப்பனையும், அவனது தோழர்களையும் கண்ட பண்டிதர் ஒதுங்கி நடந்தார்.

ஆனால் அவர்களோ, என்ன, பண்டிதரே பள்ளிக்கூடத்திலிருந்து வருகிறீர்களா? என்று வழியை மறித்தபடி கேட்டு வம்பிழுத்தனர்.

ஆமாம் கண்ணப்பா. நான் சீக்கிரம் வீட்டுக்குப் போக வேண்டும் வழியை விடு என்றபடி பண்டிதர் விலகி நடக்கத் தொடங்கினார். நீங்கள் பெரிய அறிவாளி என்று எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள். அப்படியானால் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் விட்டுவிடுகிறோம். இந்தக் கேள்விக்கு மட்டும் நீங்கள் சரியாகப் பதில் சொல்லிவிட்டால் உங்கள் வழிக்கே நான் வரமாட்டேன் என்று வீம்பாகப் பேசினான்.

சரி, உன் கேள்வி என்னவென்று கேளு கண்ணப்பா! எனக்கு நேரமாகிறது என்றார் பண்டிதர்.

என் கையிலுள்ள இந்த பூசணிக்காயின் எடை எவ்வளவு? நீங்கள் சொல்லும் எடை சரியாக இருக்கிறதா? என்று நாங்கள் நிறுத்திப் பார்ப்போம். சரியாக சொல்லாவிட்டால் நீங்கள் முட்டாள் என்று ஒத்துக் கொள்ள வேண்டும் என்று திமிராகப் பேசினான் கண்ணப்பன்.

பண்டிதர் ஒரு கணம் யோசித்தார். கண்ணப்பா இந்த பூசணிக்காய் உன் தலையின் எடைதான் இருக்கிறது. வேண்டுமானால் நிறுத்துப் பார்த்துக்கொள் என்று பதில் சொன்னார் பண்டிதர்.

இதை கேட்ட கண்ணப்பனும், அவனது கூட்டாளிகளும் அதிர்ந்து போனார்கள்.

அட பண்டிதர் நம்மை மடக்கிவிட்டாரே? பு+சணிக்காயின் எடையை சரி பார்க்க நம் தலையை கொய்தால் அல்லவா முடியும். தலையை கொய்ய முடியுமா? பூசணியை எடைபோட முடியுமா? என்று திகைத்த கண்ணப்பன், தன் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு ஓடியே போனான். அதன்பின் அவன் பண்டிதரிடம் வம்பு செய்வதே இல்லை! 

தியானம் என்றால் என்ன...?






         நம் நாட்டில் தியானத்திற்கு என்று பல பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன. தியானம் பற்றி ரமண மகரிஷி கூறிய கருத்து மிகவும் எளிமையான ஒன்று.
        அவரைக் காண வந்த ஒரு பெண், ரிஷி அவர்களே!! என் குழந்தைக்கு ”தியானம் பற்றி எளிமையாக கூறுங்கள்” என்று கேட்டார். அந்த குழந்தையை அழைத்த ரிஷி, குழந்தை கையில் ஒரு தோசையைக் கொடுத்து சில விதிமுறைகளைக் கூறினார். அது என்னவென்றால் நான் “ம்ம்” என்று சொல்லும் போது நீ தோசையை சாப்பிட வேண்டும். அடுத்த முறை நான் “ம்ம்” என்று சொல்வதற்குள் நீ தோசையை சாப்பிட்டு முடித்து விட வேண்டும் என்றார். மகரிஷி “ம்ம்” என்று கூறினார், குழந்தை தோசையை சாப்பிட ஆரம்பித்தது. குழந்தை, அவர் எப்போது “ம்ம்” என்று சொல்லுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டே தோசையை வேகமாக சாப்பிட்டது. மகரிஷி சிறிது நேரம் சென்ற பின் “ம்ம்” என்று சொன்னார். அதற்குள் குழந்தை தோசையை. முழுமையாக சாப்பிட்டு முடித்தது. அப்போது மகரிஷி குழந்தையிடம், “இதன் மூலம் நீ என்ன அறிந்தாய்?” என்று கேட்டார். அப்போது அக்குழந்தை சொன்னது, நீங்கள் எப்போது “ம்ம்” என்று சொல்வீர்கள், அதற்குள் தோசையை சாப்பிட்டு விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே இருந்தேன் என்றது. அப்போது மகரிஷி கூறினார், ”கவனத்தை நீ செய்த காரியத்தில் ஒரு முகமாக செலுத்தினாய் அல்லவா அது தான் தியானம்”. நாம் செய்யும் காரியத்தில் முழு கவனத்துடன் இருப்பதே “தியானம்”. 

சனி, 25 பிப்ரவரி, 2017

நாலடியார்


      
                  
முன்னுரை:

          பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் திருக்குறளுக்கு அடுத்ததாக  நாலடியார். இந்நூலுக்கு ‘ வேளாண் வேதம் ‘ என்ற பெயரும் உண்டு. இந்நூலில் உள்ள பாடல்கள் பல்வேறு ஆசிரியர்களால் பாடப்பட்டது. கல்வி பற்றி நாலடியார் கூறும் கருத்துக்களைக் காண்போம்.

கல்வி அழகே சிறந்தது:

               நன்கு சீவப் பட்ட கூந்தல் அழகும், முந்தானைக் கரையழகும், மஞ்சள் பயன்படுத்துவதால் வரும் அழகும் அழகல்ல. மனதில் நல்ல நெறியுடன் நடக்கின்ற நடுவுநிலைமையை உண்டாகும் கல்வி அழகே சிறந்தது.

அறியாமையைப் போக்கும் மருந்து:

                கல்வி இன்பத்தை பயக்கும், பிறருக்கு எடுத்துச் சொல்லும் போது பெருகும், நம் புகழை எடுத்துச் சொல்லும், சாகும் வரை கல்வியால் சிறப்பு உண்டு. மூவுலகத்திலும் அறியாமையைப் போக்க கூடிய ஒரே மருந்து கல்வி மட்டுமே.

கல்வி கற்றோரின் சிறப்பு:

                புன்செய் நிலத்தில் விளைந்த உப்பை நன்செய் நிலத்தில் விளைந்த உப்பினைவிட பெரியதாக கருதுவர். தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் ஆயினும் கல்வி கற்றோரை உயர் குடியில் பிறந்தவராகவே கருதுவர்.


கல்வியின் சிறப்பு:

             கல்வியை யாராலும் களவாட முடியாது. பிறருக்கு வழங்குவதால் நன்மை மட்டுமே உண்டாகும். மன்னர் சினம் கொண்டு போர் புரிந்தாலும் கல்விச் செல்வத்தை மட்டும் கைப்பற்ற இயலாது. எனவே, ஒருவன் தமக்குப் பிறகு தம்முடைய அடுத்த தலைமுறைக்கு எஞ்சிய பொருளாக சேர்த்து வைக்க வேண்டியது கல்விச் செல்வம் மட்டுமே. பிற செல்வங்கள் அல்ல.

கல்வி கற்கும் முறை:

               கல்விக்கு கரை இல்லை, ஆனால் அதைக் கற்போருக்கோ சிறிய ஆயுட்காலம். அந்த குறுகிய காலத்திலும் அவர்களுக்கு பல பிணிகள் உண்டாகின்றன. அன்னப் பறவை பாலில் கலந்திருக்கும் நீரைத் தவிர்த்து எவ்வாறு பாலை மட்டும் அருந்துகிறதோ அது போல கல்வியை ஆராய்து தெளிவாக கற்க வேண்டும்.

கல்வி கற்றோரின் சிறப்பு:

                    தோணி இயக்குபவனை தாழ்ந்த குலத்தார் என்று இகழ்வர். ஆனால் அவனையே துணையாய் கொண்டு ஆற்றைக் கடப்பர். அதுபோல நால் கற்ற துணையால் நல்ல பயன்களை அடையலாம்.

தேவலோகத்தை விட சிறந்தது:

                  தேவலோகமே சிறந்தது என்ற கருத்துடையவர், குற்ற மற்ற நூல்களைக் கற்று நல்ல கேள்வித் தன்மையை உடைய சான்றோருடன் உரையாட வேண்டும். அவ்வாறு உரையாடிய பின்பு அவர் மனதில் கற்றோர் சபையை விட தேவலோகமே சிறந்தது என்ற கருத்து உண்டானால் அவர் தேவலோகம் செல்லலாம்.    

கற்றவரோடு நட்பு கொள்ளுதல்:

                 கல்லாதவரோடு ஒருவன் கொள்ளும் நட்பு கரும்பின் சுவைமிக்க அடிப்பகுதியை விட்டு நுனிப் பகுதியை உண்பதற்கு ஒப்பாகும். கற்றலரோடு ஒருவன் கொள்ளும் நட்பு கரும்பின் சுவை மிக்க அடிப் பகுதியை உண்பதற்கு ஒப்பாகும்.

கற்றாரோடு கொண்ட நட்பின் தன்மை:

               தண்ணீரில் உள்ள பாதிரிப் பூ எவ்வாறு அத்தண்ணீருக்கும் தன் மணத்தைத் தருகிறதோ கற்றவரோடு கல்வி அறிவு இல்லாத ஒருவன் கொள்ளும் நட்பு அவனுக்கு நாளும் நன்மையைத் தேடித் தரும்.

அறிவு சார்ந்த நால்களைக் கற்க வேண்டும்:

            மிகுதியான நூல்களைக் கற்று அறிவு சார்ந்த நால்களைக் கல்லாதவனுக்கு அதனால் பயன் ஒன்றும் இல்லை.

முடிவுரை:

          நாலடியார் மூலம் கல்வியின் சிறப்பையும், கற்றவரோடு கொள்ளும் நட்பின் தன்மையையும் அறியலாம். கல்வியின் பயன் அதன் வழி ஒழுகுவதால் மட்டுமே அடைய முடியும்.

தக்சாசிலா

                                                                  தக்சாசிலா



குறைந்தபட்சம் 2,800 ஆண்டுகளுக்கு முன்புஏறத்தாழ 800BCகாலத்தில்தக்சாசிலா  என்னும் ஒரு மாபெரும் பல்கலைக்கழகம் , இந்தியாவின் வட-மேற்கு பகுதியில் இருந்தது (இப்போது பாக்கிஸ்தானில் இருக்கிறது).

வடிவமைப்பு

 இராமாயணத்தில் உள்ள குறிப்புகள் படிஅரசன் பரதன் தனது மகன்பெயரில் Taksha என்ற நகரத்தை நிறுவினான்.பின் தக்சாசிலா என்னும் பல்கலைக்கழகத்தை நிருவினான். ஆரம்பத்தில் அங்கு சிறிய கட்டிடங்களாக கட்டப்பட்டு இருந்தது. அங்கு பயிலும் மாணவர்கள் அங்கேயே தங்கி படித்தனர்பல ஆண்டுகளாககூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டனஆட்சியாளர்கள் நன்கொடைகளைகளை அழித்ததால் மேலும் அறிஞர்கள் அங்கு இடம்பெயர்ந்தனர்படிப்படியாக ஒரு பெரிய வளாகமாக உருமாறியது.

கல்வி

இந்தியர்கள் மட்டுமல்ல பாபிலோனியாகிரீஸ்சிரியாஅரேபியாபெனிக்கே மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்துமாணவர்கள் படிக்க வந்தார்கள். அங்கு 68 விதமான பாடத்திட்டங்கள் கற்பிக்கப்பட்டன.

வேதங்கள்மொழிஇலக்கணம்தத்துவம்மருத்துவம்அறுவை சிகிச்சைவில்வித்தைஅரசியல்போர்வானவியல் சாஸ்திரம்ஜோதிடம்கணக்குகள்வர்த்தக, Futurology, ஆவணம்அமானுஷ்யம்இசைநடனம்முதலியன அனுபவமானவர்களால் கற்பிக்கப்பட்டது. குறைந்தபட்ச நுழைவு வயது 16 என்றும், அங்கு 10,500 மாணவர்கள் படித்தனர்.

முதுநிலை குழு கெளடில்யா ( "அர்த்தசாஸ்திரம்ஆசிரியர்), பாணினி (ஒரு சமஸ்கிருத codifier), Jivak (மருத்துவம்), விஷ்ணு சர்மா (ஆசிரியர் மற்றும் பஞ்சதந்திர ஒடுக்கி)” போன்ற புகழ்பெற்றவர்கள் அங்கு படித்தவர்கள்.

அழிவு

நான்காம் நூற்றாண்டின் கிமுவில், அலெக்சாண்டர் படைகள் பஞ்சாப் வந்தபோதுதக்சாசிலாவில் உள்ள பலரை தன் நாட்டிற்கு அழைத்துச் சென்றார். இந்தியாவின் வடக்குமேற்கு எல்லைக்கு அருகில் தக்சாசிலா இருப்பதனால்வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து வரும் தாக்குதல்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளின் சுமைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததுபாரசீகர்கள்கிரேக்கர்கள் பார்த்தியன்கள், Shakas மற்றும் குஷானர்களின் இந்த நிறுவனம் மீது தாக்குதல் நடத்தினார்கள்.இறுதி அடியாக,ஹன்ஸ் என்னும் ரோம பேர்ரசன் (A.D 450 அன்று ), தக்சாசிலா நிறுவனத்தை தரைமட்டமாக்கினான்சீன பயணி Huen T'sang என்பவர்(கி.பி 603-64) தக்சாசிலா சென்ற போதுநகரம் அனைத்தும் அதன் முன்னாள் ஆடம்பரம் மற்றும் சர்வதேச தன்மையை இழந்ததிருந்தது.