ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

வறுமை



             
     

 கொடிது கொடிது வறுமை கொடிது என்பது போல் வறுமையிலும் ஏழ்மை கொடிது இந்த ஏழ்மையினால் வாடும் மக்கள் உணவு இல்லாமல் தவிர்ப்பது மிகவும் கொடிது .நமக்கு கிடைக்கும் உணவை நாம் குப்பை போல் கொட்டி வீணாக்கிறோம் .இந்த அன்னம் கூட இல்லாமல் தான் ஒரு நாளில் நிமிடத்திற்கு ஒரு முறை ஏதோ ஒரு இடத்தில் ஒரு மனிதன் இறந்துக்கொண்டே தான் இருக்கிறன் . இதை கவனிப்பதற்கு யாருக்குமே நேரம் இல்லை என்பது தான் மிகவும் கொடுமையானது. இந்த உலகம் எவ்வளவு மாறியினாலும் காலமும் நேரமும் ஓடிக்கொண்டே இருந்தாலும் “வறுமை” என்ற சொல் மாறாமல் இன்னும் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது. பசியினால் ஏழை குழந்தை கதறி அழுவது இன்னும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது. இனியவது உணவை வீணாக்காமால் இருங்கள். இல்லை என்று வருபவருக்கு கொடுத்து உதவியினால் கூட அந்த ஒரு மனிதன் ஆவது இறக்காமல் இருப்பனோ என்று  தான். இந்த பசியின் முக்கிய காரணம் வறுமை தான் இந்த வறுமையே ஓழித்தால் மட்டுமே பசி என்ற கொடிய நோய் நீங்கும்.

அடுத்த நூற்றாண்டியில் ஆவது வேறுபாடு இல்லாத மக்களை கொண்டு ஒரே இனம் தமிழினம் எனப்போற்றி வறுமையில்லாத நாட்டை உருவாக்க வேண்டும்.       
       

கால வித்தியாசம்








கால வித்தியாசம்

நீதிகள்  விற்கப்படுகின்றன
விதிகளை  மீறப்படுகின்றன
அரசியியலில் செய்யும் ஊழலுக்கு
அரசு கைதாளம் போடுகிறது
மக்களுக்கு இலவசம் கொடுத்து கொடுத்து
அடிமைப்படுத்தி  வருகிறார்கள்

இக்காலம்

வானத்தில் பட்டம் விட்டது ஒரு காலம்
வானத்திற்கே சென்று ஆராய்ச்சி செய்வது இக்காலம்
பழைய மரபுகளோடு வாழ்ந்தது அக்காலம்
பழைய மரபுகள் இன்றி போனது இக்காலம்
காலங்கள் மாறியினாலும் இலக்கியங்கள் மாறாது
இக்காலத்தில் பணத்திற்குக் கொடுக்கும் மதிப்பு
மனிதனுக்கு  கிடைக்கவில்லை ……………………….
நம் தாய் மொழிக்கு கொடுக்க வேண்டிய மதிப்பை
பிறமொழிக்கு  கொடுக்கிறார் ……………………………
உலகில் எது மாறியினாலும் மாற்றம் ஒன்றே மாறாது .

.

ஆஸ்கார் சான்றிதழ் பெற்ற தமிழர்..!!


The 85th Academy Awards® will air live on Oscar® Sunday, February 24, 2013.


ஆஸ்கார் தமிழன் ஏ.ஆர்.ரஹ்மானிற்கு பிறகு, ஆறு வருடங்கள் கழித்து திரைத்துறை பிரிவில் உயரிய விருதான, ஆஸ்கார் விருதின் சான்றிதழை பெற்றுள்ள தமிழர் ஒருவர். கொட்டலங்கோ லியோன் என்ற வெளிநாட்டு வாழ் தமிழருக்குதான் கிடைத்திருக்கிறது ஆஸ்கார் சான்றிதழ்.


யார் இந்த கொட்டலங்கோ லியோன்:
திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட கோட்டாலங்கோ லியோனியின் தந்தைக்கு சங்கரன் கோவில் சொந்த ஊர். கோயம்புத்தூரில் வளர்ந்த லியோனி, தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகிறார்.
அடிப்படையில் டெக்னிக்கல் இன்ஜினியரான லியோனி. சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் டெக்னிக்கல் டிசைன் பிரிவில் உள்ளார். அத்துறை சார்ந்த பிரிவிலேயே லியோனிவிற்கு ஆஸ்கார் விருது, கடந்த பிப்ரவரி மாதம் வழங்கப்பட்டது.

சனி, 24 செப்டம்பர், 2016

மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க நாம் செய்ய வேண்டியவை !!!

Photo




மொபைல் போனை அளவோடு பயன்படுத்தவும்.

வானம் தொட்டுவிடும் தூரம்தான்


எங்கள் கல்லூரியின் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் வா.சுரேசு அவர்களால் எழுதப்பட்ட கவிதையினை இங்கு பகிரவுள்ளேன்.