ஞாயிறு, 12 ஜூன், 2016

ஆர். எல். மூர்.


                                                             Image result for கணிதம் புகைப்படம்

    1898ஆம் ஆண்டு டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த இவர், 1901 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.  கணித மேதைகளுள் ஒருவரான ஜெ.ஜெ.சில்வெஸ்டரின் மாணவரான “ஹால்ஸ்டெட்” என்பவர் ஆர்.எல்.மூரின் ஆசிரியராக விளங்கினார்.
    ஹால்ஸ்டெட்டின் பரிந்துரையின் பேரில் மூா் 1903ஆம் ஆண்டு சிகாகோ பல்பலைக்கழகத்தின் மாணவரானத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
     சிகாகோ பல்கலைகழத்தில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.  அந்தப் பல்கலைக்கழகம் ஆராய்ச்சிக்கு ஏற்ற சூழலுடன் அமைந்திருந்தது.
     மூர் சிகாகோ பல்கலைக்கழத்தில் 1905ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றார்.  அதன் பிறகு டென்னஸி பல்கலைக்கழகத்தில் மேலும் ஓர் ஆண்டு பயிற்சியில் ஈடுபட்டார்.
     அங்கு ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சேர்க்கை நுண்கணிதம் (Integration Calculus), அங்க கணிதம் (Arithmetics) ஆகியவற்றில் மூர் சான்றுகள் தேவைப்படாது வெளிப்படையான பல்வேறு உண்மைகளை எழுதி வெளியிட்டார்.
    அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் பிரின்ஸ்டன் கல்லூரியிலும் நார்த்-வெஸ்டர்ன் கல்லூரியிலும் பாடங்கள் நடத்தினார்.  இறுதியாக பென்சிவேனியா பல்கலைக்கழத்தில் பணிக்குச் சேர்ந்தார்.
    1919ஆம் ஆண்டு முதல் 1932ஆம் ஆண்டு வரை மூர் கணிதத்துறையில் ஆராய்ச்சிகள் செய்து, 38 ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார்.  அக்கட்டுரைகள் ஃபவுண்டேஷன்ஸ் ஆஃப் பாயின்ட் செட் தியரி என்னும் நூலாக 1932ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
    1930ஆம் ஆண்டு முதல் அவர் ஆசிரியப் பணியில் ஆர்வம் காட்டி வந்தார்.  புதுமையான முறையில் பாடங்கள் நடத்தி, மாணவர்களை ஊக்குவித்தார்.  இதனால் அவரது புகழ் மேலும் வளர்ந்தது.
     1930ஆம் ஆண்டு வாஷிங்டன் தேசிய அறிவியல் கல்விக் கூடத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூர், 1938ஆம் ஆண்டு “அமெரிக்கன் மேத்தமேட்டிக்கல் சொஸைட்டியின்” தலைவராகப் பொறுப்பேற்றார்.
    இவ்வாறு கணிதத்துறைக்கு பல்வேறு பங்களிப்புகளைச் செய்த ஆர்.எல். மூர், 1974 ஆம் ஆண்டு மறைந்தார்.  பென்சில்வேனியா பல்கலைக்கழக மாணவர்கள் அவரை மிகச்சிறந்த கணிதப் பேராசிரியர் என்று புகழ்ந்தனர்.

குறிப்பு - படித்ததில் பிடித்தது
நூல்   - உலக கணித மேதைகள்

சோன்யா கோவலெவ்ஸ்காயா


                   Image result for sonya kovalevskaya

     சோன்யா 1850 ஆம் ஆண்டு ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் பிறந்தார்.  அவரது தந்தையின் மைத்துனர் ஒருவருக்கு கணிதத்தல் அதிக ஆர்வம் இருந்தது.  அதன் காரணமாக சோன்யாவுக்கும் கணிதத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது.  அக்காலத்தில் ரஷ்யாவில் பெண்கள் அதிகம் கல்வி கற்கும் வழக்கம் இல்லை.
     நிக்கோலாய் நிகன்ரோவிச் டிர்டர் என்னும் கணித நிபுணர் எழுதிய நூலைப் படித்த சோன்யா, அந்நூலைப் பற்றிய மிகச்சிறந்த விமர்சனம் எழுதி அனுப்பினார்.  அதைப் படித்த நிகன்ரோவிச் வியந்தார்.  அவர் சோன்யாவின் கணித ஆற்றலைப் புரிந்து சோன்யாவைப் பாராட்டினார்.
     மேலும் அவர் சோன்யாவின் தந்தையைச் சந்தித்து, சோன்யாவுக்கு கணிதம் கற்பிக்க வேண்டும் என்று அவரது தந்தையை வற்புறுத்தினார்.  அதற்கு சோன்யாவின் தந்தையும் சம்மதித்தார்.  அவர் சோன்யாவிற்கு 17 வயது ஆகும்போது, தனிப்பட்ட முறையில் நுண்கணிதம் கற்பிக்க ஏற்பாடு செய்தார்.  சோன்யாவும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நுண்கணிதத்தைச் சிறந்த முறையில் கற்றுக்கொண்டார்.  சோன்யா மேற்படிப்பு கற்க விரும்பினார்.
     அக்காலத்தில் ரஷ்யாவில் மேற்படிப்பு வசதிகள் இல்லை.  எனவே அவர் வெளிநாடு செல்ல தீர்மானித்தார்.  அதன் காரணமாக அவர் திருமணம் செய்துகொள்ள முன்வந்தார்.  சோன்யா, “விளாடிமிர் கோவலெவ்ஸ்காயா” என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
     அதற்குக் காரணம், விளாடிர் கோவலெவ்ஸ்காயா ஐரோப்பிய நாடுகளை அறிந்த ஒரு பதிப்பாளராகத் திகழ்ந்தார்.  அதன் பிறகு சோன்யாவின் பெயர் சோன்யா கோவலெவ்ஸ்காயா என்று மாறியது.
     சோன்யாவும் அவரது கணவரும் ஹைடில்பெர்க் நகருக்குப் பயணமானார்கள்.  அங்குள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி பயில இருவருக்கும் அனுமதி கிடைத்தது.  சோன்யா விஞ்ஞானிகளான “ஹெல்ம் போல்ட்ஸ், கிர்சாஃப்” போன்றோருடன் விஞ்ஞானம் பயின்றார்.  ”கோனிக்ஸ்பொர்கர்” என்னும் கணிதமேதையுடன் சேர்ந்து கணிதம் பயின்றார்.
     “வியர்ஸ்ட்ராஸ்” என்பவரின் மேற்பார்வையில் அவர் வேற்றுமைச் சமன்பாட்டில் (Differential Equations) கணித ஆய்வுகள் மேற்கொண்டார்.  வியர்ஸ்ட்ராஸ் சோன்யாவுக்கு “டாக்டர்” பட்டம் பெற தொடர்ந்து உற்சாகம் தந்தார்.  சோன்யா அவ்வேளையில் பெர்லின் நகரில் வசித்து வந்தார்.
     சோனியா “ஏபெலின் இன்டக்ரல்” என்னும் தலைப்பில் தனது கணித ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார்.  1874ஆம் ஆண்டு சோன்யாவின் ஆய்வுக் கட்டுரைகளுக்காக டாக்டர் பட்டம் (Ph.D)  வழங்கப்பட்டது.  அவரது ஆய்சிக் கட்டுரைகள் “க்ரெல்” என்னும் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டன.
     வேற்றுமைச் சமன்பாட்டில் அவர் செய்த ஆய்வுகள் காச்சி – கோவலெவ்ஸ்காயா தேற்றம் என்னும்  (Cauchy – kovaleskaya Theorem) பெயரில் வெளியிடப்பட்டது.  சோன்யாவின் கணவர் விளாடிமிர் கோவலெவ்ஸ் காயாவும் டாக்கர் பட்டம் பெற்றார்.
     1874 ஆம் ஆண்டு சோன்யாவும் அவரது கணவரும் ரஷ்யாவுக்குத் திரும்பினர்.  ஜெர்மன் நாட்டில் டாக்டர் பட்டம் பெற்றிருந்தும், அவர்கள் அருவரும் ரஷ்யாவில் ஆரம்பப் பள்ளிக்கூடங்களிலேயே பாடம் நடத்த அனுமதிக்கப்பட்டனர்.  அவர்கள் சட்டக்கல்வி பயின்றாக வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
     எனவே அவர்கள் சட்டத் தேர்வை எழுத முற்பட்டனர்.  விளாடிமிர் 1875 ஆம் ஆண்டே சட்டத் தேர்வில் வெற்றி பெற்றார்.  அதன் பிறகும் விளாடிமிருக்கு சரியான வேலை அமையவில்லை.
     இவ்வேளையில் சோன்யாவுக்கு “சோஃபியா” என்ற பெண் குழந்தை பிறந்தது.  அவர் 1881 ஆம் ஆண்டு தனது மகளுடன் பெர்லின் நகருக்கே திரும்பிச் சென்றார்.  கணவர் விளாடிமிர் மட்டும் ரஷ்யாவிலேயே தங்கிவிட்டார்.  சோன்யா பெர்லின் நகருக்கு வந்த சில நாட்களில் அவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.  அவரது கணவர் விளாடிமிர் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டதே அதிர்ச்சிக்குக் காரணம் ஆகும்.
     இருப்பினும் சோன்யா மனம் துவண்டுவிடவில்லை.  அவர் ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகருக்குச் சென்றார்.  அங்கே பெண்கள் உயர்கல்வி கற்க அனுமதிக்கப்பட்டனர்.
     அவ்விடத்தில் ”ஆக்டா” என்னும் பத்திரிகையின் ஆசிரியராக பொறுப்பேற்றார்.  அப்பத்திரிகையில் பணிபுரிந்து வந்தபோது அவருக்கு பல கணித நிபுணா்களோடு நட்பு ஏற்பட்டது.  ஸ்டாக்ஹொம் நகரில் சோன்யாவின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவே நடந்தது.  மேலும் “ஹோக்ஸ்கோலா” என்னும் இடத்தில் ஒரு கல்விக்கூடத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் வாய்ப்பும் சோன்யாவுக்கும் கிடைத்தது.  அவ்வாறு புகழ்பெற்று விளங்கிய சோன்யா தனது 41வது வயதிலேயே காலமானார்.
குறிப்பு – படித்ததில் பிடித்தது
நூல்   - உலக கணித மேதைகள்

வியாழன், 9 ஜூன், 2016

வெர்ஜீனியா வுல்ப்

            
       வெர்ஜீனியா வுல்ப்—20நூ(நாவலர்)

வெர்ஜீனியா ஒரு இலக்கிய குடும்பத்தில் பிறந்தவர்.அவர் தந்தை சர் லேஸ்லை ஸ்டீபன்,முக்கியமான விக்டோரியன் விமர்சகர் மற்றும் கல்விமான்.தன் வீட்டில்ஒரு நூலக சுற்றுசூழலை உறுவாக்கியவர். வெர்ஜீனியா எழுத்தாளராக ஆரம்பத்தில் இலக்கிய பத்திரிக்கைகளுக்கு எழுதினார்.பின்பு லியோனார்ட் வுல்ப் என்ற எழுத்தாளரையே இவரும் திருமணம் செய்தார்பின்னர்,`ப்லூம்ஸ்பெரி`கூட்டதில் முக்கியமானவரானார். வுல்ப்,மேலும் ``ஸ்ரீம் ஆப் கான்சியஸ்னஸ்``என்ற நயத்தை படைத்தார். தனி உலகையே தன் நாவல்கள் மூலம் உருவாக்கினார்.இவரை பெருத்தவரை மனித வாழ்வு என்பது கடினமாகவும் உரைப்பு இல்லாமல் இருப்பதாகும். வுல்பின் நாவர்கள்;
            `தி வாயேஜ் அவுட்` என்பது இவரது முதல் நாவல்.இது `வசனங்கள்`கொண்ட ஒரு நீண்ட படைப்பாக இருந்தது.வுல்பின்``ஜகோப்ஸ் ரூம்``என்பதில் தான் முதல் முதிர்பெற்ற இவரது நாவலாகும்.இதே உருதியுடன் ``மிஸ்சஸ் டல்லோவே``என்ற படைப்பை படைத்தவர்.இந்த நாவல்கள் மூலம் அவர் தலைமையான கதாப்பாத்திரங்கள் மட்டுமல்ல லண்டனில் அன்றய நிலவரல்த்தை தந்தள்ளார்.

            `டு தி லைட்ஹஸ்(1927)இல் `ஸ்டீரீம் ஆப் கான்சியஸ்நஸ்` என்ற நயத்தை உறுதியாக கையாண்டுள்ளார். `தி வேவ்ஸ்` என்பது இவரது ஒரு அலகான கவிரையாகும்.`ப்வஷ்`மற்றும் `தி இயற்ஸ்` போன்ற படைப்புகளில் குடும்ப பந்தத்தை பற்றி எழுதியுள்ளார்.`ஓர்டால்டோ, டையோகிராபி` என்பதில் அவரது வளர்சியை பற்றியானது.இது தட்டுமல்லாமல் பல கட்டுமாமல் பல கட்டுரைகளை அவர்களது கலாச்சார கருத்துகள் கொண்டு எழுதியுள்ளார்.இதி `எ ரூம் ஆப் ஒன்`ஸ் ஓன்` , `தி செகன்ட் காமன் சென்ஸ்` என்பதெல்லாம்.இவரது குறிபிடத்தக்க படைப்புகளாகும்.

எனது ஐயங்களுடன் மீரா.செல்வக்குமார் ஐயா..!!

இப்பதிவில் வலைப்பதிவர் மீரா.செல்வக்குமார் ஐயா அவர்களுடன் எனது ஐயங்களுக்கான விடையை காண உள்ளோம்..

புதன், 8 ஜூன், 2016

ஏ.ஜி.கார்டினர் மற்றும் ஜி.கே.சேஸ்டர்டன்

                                                                     
                                                ஏ.ஜி.கார்டினர்—20ஆம் நூ

ஆல்ப்ரட் ஜியார்ஜ் கார்டினர்(1865—1946)ஒரு பிரிடிஸ் பத்திரிக்கையாள மற்றும் எழுத்தாளருமாவார்.இவரது கட்டுரைகள் அனைத்தும் ``ஆல்பா ஆப் தி ப்லோ`` என்ற செல்லப்பெயரில் எழுதுவார்.தினசரி தகவல்களை சேகரித்து பத்திரிக்கைகளுக்கு தருவதில் வல்லவர்.1915ஆம் ஆண்டுகளில் இவரது படைப்புகளை ``தி ஸ்டார்``என்பதில் `சுடோனிம்` என்ற செல்லப்பெயரில் எழுதினார்.இதன் மூலமாக இவர் ஒரு திறமையான கட்டுரையாளர் என்று நிரூபித்தார்.இவரது கட்டுரைகள் நலினமாகவும்,தனித்துவமாகவும் நகைச்சுவை நயத்துடனும் எழுதியுள்ளார்.இவரது தனித்துவம் வாழ்கையின் அடிப்படையான உண்மையை வியக்கத்தக்க வகையில் தன் கட்டுரைகளில் எழுதியுள்ளார், `பில்லர்ஸ் ஆப் சோசைடி`` ``போபில்ஸ அன்ட் தி ஷோர்`` `தி வேனிடி ஆப் ஒல்ட் ஏஜ்` பின்னர் `ப்ராபிட்ஸ்` என்பதும் இவரது குறிப்பிடத்தக்க படைப்பாகும்.

                              ஜி.கே.சேஸ்டர்டன்
கில்பர்ட் கேயித் சேஸ்டர்டன் பிரபலமாக ஜி.கே.சேஸ்டர்டன் என்றழைப்பர். சேஸ்டர்டன் ஒரு பக்தியாளர்,கவிஞர்,தத்துவ,போதகர்,நாடகவியலாலர், நாவலர்,பத்திரிக்கையாளர்,இலக்கிய பேச்சாளர் சமூக விமர்சகர், மற்றும் சுயசரிதையாளருமாவார்.இவரை பொழுதும் ``பிரின்ஸ் ஆப் பாரடோக்ஸ்`` என்பர்.இவர் ஜி.பி.ஷாவிற்கு அன்பான எதிரியாவார்.பேரும் அறிவுத்திறன் படைத்தவரும் கூட.எட்டு புத்தகங்கள்,நூறு கவிதைகள்,இருநூறுக்கும் மேலான சிறுகதைகள்,நாலாயிரம் கட்டுரைகள் மற்றும் நிறைய நாடகங்களும் எழுதியுள்ளார்.``என்சைகிலோபீடியா பிரிடானிகா`` என்பதற்கு தன் படைப்புகளை எழுதுவார்.இவரது சிறந்த கதாப்பாத்திரமான `பாதர் பிரவுனை` குறிப்பிடுவர்.சேஸ்டர்டன் எப்பொ.உதும் தன் நெறுங்கிய நன்பன் கவிஞன் மற்றும் கட்டுரையாளருமான ஹில்லாரி பிலாக்குடன் இணைந்திருப்பார். ஜி.பி.ஷா. இவரை ``சேஸ்டர்பிலாக்`` என்றழைப்பார்.இவர் இருபதாம் நூற்றாண்டின் நவீன இலக்கிய எழுத்தாளராவார்.``தி மேன் ஹூ வாஸ் தோஸ்டே`` என்ற இவரது நாவல் புகழ்பெற்றதாகும்.