சனி, 21 மே, 2016

ஜான் டிரைடன்

                                                   
           
                                                     ஜான் டிரைடன்
டிரைடன் ஆல்ட்விங்கில் ஆல் செயின்ட்ஸ் நார்த்தம்டன்ஷயர்ரில் பிறந்து கேம்ரிஜ்  பல்கலைக்கலகத்தில் பயின்றார்.இவரது முதல் பாடல்``தி ஹிரோஇக் ஸ்டான்சாஸ்``ஆன் தி டேத் ஆப் ஆலிவர் க்ரோம்வேல்``என்பதாகும்.1670ஆம் ஆண்டு இவரை அரசவைப் புலவரானார்.பின்னர் ஐந்து நாடகங்கள்,மற்றும்``ஃபேப்லஸ்(fables)``என்ற புத்தகத்தை(volume)1699ஆம் ஆண்டு வெளியிட்டார்.
டிரைடனின் பணிகாலம்;
                             i.     அரசில் கேலிகள்(political satires)
                             ii.     பக்தி பாடல்கள்
                            iii.     கதை படைப்புகள்(prose works)
அரசியல் கோலி நடை(சட்டைரிஸ்);
            டிரைடன் மூன்று கோலிநடை பாடல்களை இயற்றியுள்ளார். முதலில்``எல் ஆப் ஷாப்ட்ஸ்பேரியை``கேலிசெய்து``அப்சலம் ஆன்ட் அகிடோபில்``எழுதியுனார்.பின்னர் அதே``ஷாப்ட்ஸ்பேரியை கேலி செய்து``தி மெடல்``என்ற பாடலை இயற்றினார்.இறுதியாக``மேக்ஃபிலக்நோயி``என்ற படைப்பில்``லாம்பூண்``என்பவரை(சட்டையரைஸ்)கேலி செய்துள்ளார்.
பக்தி பாடல்கள்;
            பல்துறை அறிவு பெற்றவர் டிரைடன்.இவர் தனக்கென தனி அடையாளத்தை நாடகம் மற்றும் பாடல்கள் மூலம் அடைந்தார்.இவர் ``ஹிரோயிக் கப்லெட்``என்று சொல்லப்படும்.இரண்டு அடி இறுதியில் தனியாக வரும் பாடல்களை முதன் முதலாக ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தியவர்.இவரது பக்தி பாடல்களில் குறிப்பிடதக்கது``ரிலிஜியோ லேய்சி``மற்றும்``தி ஹின்ட் அன்ட் தி பான்தர்``என்பதாகும்.


கதை படைப்புகள்;
            இவரது கதைகளில் குறிப்பிடத்தக்கன``தி எஸ்சே ஆப் டிரமாடிக் போய்சி``என்பதாகும்.கதை எழுதுவதில் இவரது ஒரே எதிராலி``ஜான் பன்யான்``.மூன்று வகையான இவரது நாடகங்கள்,
            கிலாசிகள் டிராமாஸ் ஆப் கிரீக்ஸ் அன்ட் ரோமன்ஸ்
            நியோ கிலாசிகள் டிராமாஸ் ஆப் ஃப்ரேஞ்ச்
            தி ரோமான்டிக் டிராமாஸ் ஆப் இங்கிஷ்
     



அப்துல் கலாமிற்கு சலாம்..!!!




பாரத தாயின் தவப்புதல்வன்;

ஏழையாய் பிறந்தவன்;

கலத்தில் சிறந்தவன்;

விண்கலத்தின் நாயகன்;

குடியரசை ஆண்டவன்;

எளிமையாய் வாழ்ந்தவன்;

தமிழுக்கு பெருமை சேர்த்தவன் - தமிழனாய்

தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தவன்;

இளைஞர்களின் முன்னோடியாய்,

இதயத்தில் வாழ்ந்தவன்;

மாற்றம் தந்தவனுக்கு,

ஏனிந்த தாடுமாற்றமோ???

அக்னி சிறகுகளை தந்தவன்,

தன் சிறகுகளை அடக்கிகொண்டானே!

கனவு காண சொன்னவன்,

நிரந்தரமாக உறங்குகிறானே!

சூரியனை மறைக்க முடியுமா?

கடலலைகளை நிறுத்தமுடியுமா?

மண்ணின் மைந்தன் மறைந்தாலும்,

நிரந்தரமாக உறங்கினாலும்,

ஒளி வீசிக்கொண்டே இருப்பான் - எங்கள்

நினைவலையில் தவழ்ந்துகொண்டே இருப்பான்;

அயராது உழைத்தவனுக்கு,

ஓய்வை மறந்தவனுக்கு,

இந்த ஓய்வு தேவைதான்;

உறங்கட்டும் விட்டு விடுங்கள்;

காலம் கலாமை மறைத்தாலும்,

ஞாலம் கலாமை மறவாது!!!

(நீ அமைத்த பாதையில் நாங்கள் பயணிப்போம்;
வல்லரசு இந்தியாவை நோக்கி!!!)

திங்கள், 16 மே, 2016

டிஸ்னியும் மிக்கியும் ..!!!





வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்  இந்த உண்மை நம்மை உணர வைத்த ஒரு கேலிச்சித்திர நாயகன் தான் நமது சார்லி சாப்ளின் இவர் உயிரோடு நம்மை சிரிக்க வைத்தவர்.நம்மை கனவு உலகில் இன்றும் கண் மூடினால் சிரிக்க வைக்கும்  உயிரற்ற ஒரு கேலிச்சித்திரம் தான் மிக்கி மௌஸ் என்ற ஒரு எலி.இது உருவானதை பற்றி பகிரவுள்ளேன்.



சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பும் இன்றும் நம் சிரிப்புக்கெல்லாம் காரணமாக இருந்தவர் என்றால் அது நிச்சயம் சார்லி சாப்ளின் அவர்கள் தான்.பிறகு வால்ட் டிஸ்னி என்பவர் 05-12-1901 அன்று அமெரிக்காவில் பிறந்தார்.இவருக்கு சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவதிலும் ஓவியம் தீட்டுவதிலும் ஆர்வம் மிக்கவர்.தனக்கு 7-வயது இருக்கும் போதே ஓவியங்களை வரைந்து அண்மையில் இருப்பவர்களுக்கு விற்பனை செய்வாராம்.அவருடைய தந்தைக்கு டிஸ்னி ஓவியம் வரைவது பிடிக்காது.ஆனால் அவரின் தாயார் உனக்கு பிடித்ததில் கவனம் செலுத்து என்று ஆதரவு அளித்தாராம்.

இவர் பள்ளியில் சார்லி சாப்ளின் போல நடித்து காட்டுவாராம்.ஆசிரியர்கள் டிஸ்னியை நகைச்சுவை நாடகம் நடித்துக்காட்டுமாறு கேட்பார்களாம் அப்போது டிஸ்னி கரும்பலகையில் வரைந்துக் கொண்டே நடித்துக்காட்டுவாராம்.அவருடைய தந்தைக்கு தெரியாமல் நகைச்சுவை நாடகத்தில் நடித்த அனுபவமும் டிஸ்னிக்கு உண்டு.


1922-ஆம் ஆண்டு தனது சகோதரர் ராய் உடன் தனது  Laugh Oh Grand என்ற நிறுவனத்தை ஆரம்பித்து ஆலிஸ் இன் காட்ரூண்ஸ் என்ற  முதல் கேலிச்சித்திரத்தை துவங்கினார்.அது தோல்வியடைந்தது.பிறகு  1932 ஆண்டு டிஸ்னி இரயிலில் பயணம் செய்யும் போது தனது ஓவியக் கிறுக்கலில் உருவானதே மிக்கி மௌஸ் என்ற கேலிச்சித்திரம். Flower And Tree என்ற முழு நீளப்படமத்தில் மிக்கியின்  சேட்டையும் அடித்த லூட்டியும் அப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை பெற்று தந்தது.அதனை அடுத்த டிஸ்னி உருவாக்கிய மற்றொரு கேலிச்சித்திரம் தான் டொனல் டக் என்ற வாத்து.மிக்கியும் டொனல்டும் சேர்ந்து அடித்த லூட்டியை இன்றும் கண் மூடி நினைத்து சிரிப்பவர்களுமுண்டு.
1955-ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி 17 மில்லியன் டாலர் செலவு செய்து டிஸ்னி லேண்ட் பார்க் என்ற பொழுது போக்கு பூங்காவை அமெரிக்காவில் ஒலொன்டா என்ற நகரில் மக்களின் பூலோகச் சொர்க்கமாக  ஏற்படுத்தினார்.அவருடைய வெற்றியின் தாரக மந்திரம் ஆர்வம்,தன்னம்பிக்கை,தைரியம் மற்றும் நிலைபாடு.இவற்றில் மிக முக்கியமானது தன்னம்பிக்கை எந்த ஒரு செயலையும் பல்வேறு கேள்விகளோடு தொடங்கக் கூடாது எதுவாக இருந்தாலுமே தன்னம்பிக்கையோடு செயலாற்றினால் வெற்றி நிச்சயம் என்று அவர் கூறிவாராம்.இது நம் அனைவருக்குமே பொருந்தும்.


கண்தானம் செய்வோம்!! மறைந்த பின்னும் வாழ்வோம்!!




         கண்தானம் செய்வோம்!! மறைந்த பின்னும் வாழ்வோம்!!

முன்னுரை


தானங்களில் சிறந்தது கண்தானம் என்று கூறுவர். ஏனென்றால் நாம் இவ்வுலகை பார்க்க நமக்கு உதவியாக இருப்பவது கண்தான். எந்த உறுப்பு இன்றியும் நம்மால் வாழ முடியும். ஆனால்கண்ணில்லாமல் வாழ்வது போன்ற கொடுமை வேறு எதுவும் இல்லை. ஆனால் இந்த கொடுமையை உலகில் 4 கோடி மக்கள் அனுபவிக்கின்றனர். கண்தானம் செய்வதன் மூலம் நம்மால் மீண்டும் இவ்வுலகில் வாழ முடியும்.  நாம் இறந்த பின்பு நம் கருவிழியை பிறருக்குப் பொருத்துவதன் மூலம் நம்மால் இந்த அழகிய உலகை நாம் இறந்த பின்னும் காண முடியும். கண் தானத்தின் முக்கியத்துவத்தை பற்றி இனி பார்ப்போம்.
கண்தானம் என்பது

கண்தானம் என்றாலே எல்லோரும் பயப்படுவர். கண்ணை அப்படியே எடுத்து பிறருக்கு பொருத்துவது என்று. அது தவறான புரிதல் ஆகும். கண்தானம் என்றால் நம் கண்ணையே எடுத்து பிறருக்கு பொருத்துவது அல்ல. கருவிழியை மட்டும் தனியாக எடுத்து பார்வையற்றவர்க்கு பொருத்துவது ஆகும். இது எல்லோருக்கும் பொருந்தாது. கருவிழியில் ஏற்படும் பாதிப்புகளை மட்டுமே கண்தானத்தால் சரிசெய்ய முடியும். கருவிழி ஒளி ஊடுருவும் தன்மையை இழக்கும் போது ஒளிக்கதிர்கள் கண்ணுக்குள் செல்ல முடியாமல் கண் இருட்டாகிறது.  இதை கண்தானத்தின் மூலம் சரிசெய்ய முடியும்.
பார்வையற்றவர்கள்

உலகில் 4 கோடி மக்கள் பார்வையற்றவர்களாக உள்ளனர். இந்தியாவில் மட்டும் 1.5 கோடிக்கும் மேலானோர் பார்வையற்றவர்களாக உள்ளனர். இந்தியாவின் மக்கள் தொகை பல கோடியைத் தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. தினமும் எத்தனையோ பேர் பிறக்கின்றனர், எத்தனையோ பேர் இறக்கின்றனர். இறப்பவர்களின் கண்கள் பெறப்பட்டு பார்வையற்றவர்களுக்கு பொருத்தப்பட்டால் இந்தியா பார்வையற்றவர்களே இல்லாத அழகிய இந்தியாவாக மாறும்.
யார் கண்தானம் செய்யலாம்

செப்டம்பர் 8 ஆம் நாள் தேசிய கண்தான தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கண்தானம் செய்ய சில வரம்புகள் உள்ளன. கண்ணில் எந்த குறையும் இல்லாதவர்கள் கண்தானம் செய்யலாம். மேலும் மூக்கு கண்ணாடி அணிந்தவர்களும் கண்புரை அறுவை சிகிச்சை செய்தவர்களும் கண்தானம் செய்யலாம். ஒரு வயது முதல் எல்லா வயதினரும் கண்தானம் செய்யலாம். கண்தானம் செய்வதில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. கண்தானம் செய்ய 20 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும். மதுவால் இறந்தவர்கள், நோய் வாய்ப்பட்டு இறந்தவர்களால் கண்தானம் செய்ய முடியாது.
முடிவுரை
தற்பொழுது கண்தானம் குறித்து விழிப்புணர்வு பரவலாக பரவி வருகிறது. நாமும் கண்தானத்தின் முக்கியத்துவத்தை பிறருக்கு எடுத்து சொல்வோம். அழகிய உலகை பார்வையற்றவர்கள் காண வழிவகை செய்வோம். பார்வையற்றவர்கறளே இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்.

சனி, 14 மே, 2016

யான் நுகருகின்ற தமிழ்மணம்..!!





வலைப்பதிவர் தி.தமிழ் இளங்கோ ஐயா அவர்களின் கருத்திற்கு இணங்க இன்று இப்பதிவில் தமிழ்மணத்தில் நான் பெற்றுவரும் அனுபவங்களை பகிரவுள்ளேன்.

தங்களுடைய சிந்தனைகளையும்,கருத்துக்களையும் எவ்வித தடைகளுமின்றி எவரும் படிக்க இயலும் என்பது எனக்கு தெரியாது.எங்கள் கல்லூரியில் சேர்ந்த பிறகு எனது தமிழ் ஆசிரியர் முனைவர்.இரா.குணசீலன்  ஐயா அவர்களின் வலைத்தளத்தை ஒரு நாள் பார்வையிட்டேன்.உடனே அவரிடம் எனக்கும் இதுப் போன்று தங்களின் நட்பு வட்டத்தில் கலந்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டேன்.அவர் தங்களுக்கு தமிழ் தட்டச்சு தெரியுமா என்று கேட்டார் தெரியாது என்றேன்.எனக்கு அதற்கான இலவச மென்பொருளான என்.எச்.எம்.ரைட்டரில்  பயிற்சி வழங்கினார்.பிறகு வலைப்பதிவு பற்றி ஒரு அறிமுகம் வழங்கினார்.

வலைப்பதிவு குறித்து என்னுடைய கருத்து நாம் எழுதுவது யார் படிக்க போகிறார்கள் என்று தான் நினைத்தேன்.ஆரம்பத்தில் எனக்கு எப்படி எழுதுவது என்று தெரியாமல் இருந்தேன்.பிறகு குணசீலன் ஐயா தமிழ்மணம், வலைப்பதிவுகளின் திரட்டியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.தமிழ்மணம் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.அவற்றில் எனது கருத்துக்களை மறுமொழியாக தந்தேன்.

தமிழ்மணத்தில் முதலில் நான் ஒரு மறுமொழியாளராக அறிமுகமானேன்.பிறகு எங்களுடைய கல்லூரி வலைப்பதிவை தமிழ்மணத்தில் இணைத்தோம் பிறகு ஒரு ஆசிரியராக வலம் வந்துக் கொண்டிருக்கிறேன்.

தமிழ்மணத்தில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிவுகளை எளிமையாகப் பெற்றேன்.தொடர்ந்துப் பெற்று வருகிறேன்.உலகில் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் தமிழர்களால் தமிழில் பதிவுகளை தந்துவருகின்றனர்.தமிழ்மணம் மூலமாக எனக்கு ஒரு மிகப்பெரிய  நட்பு வட்டராமே கிடைத்துள்ளது.மூத்த வலைப்பதிவர்கள் நான் எழுதும் ஒவ்வொரு பதிவுக்கும் மறுமொழி அளித்து என்னுடைய தமிழ் எழுத்துகளுக்கு  ஆதரவு தருகின்றனர்.எங்கள் கல்லூரியில் நடைபெற்று வரும் கணித்தமிழ்ப் பேரவையின் சிறந்த மாணவி என்ற விருதும்,வலைப்பதிவின் சிறந்த உபயோகிப்பாளர் என்ற மற்றொரு விருதும் எங்கள் கல்லூரி முதல்வர் மா.கார்த்திகேயன் ஐயா வழங்கி பெருமைப்படுத்தியும் ஆதரவையும்  வழங்கி வருகிறார்.மேலும் கல்லூரி ஆண்டுவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வலைப்பதிவர்  நா.முத்துநிலவன்  ஐயா எனக்கு ஒரு நூலை பரிசாக அளித்தார்.இந்த தமிழ்மணத்தில் எனக்கென்ற ஒரு அடையாளத்தை பதித்து வருக்கின்றேன்.இவை அனைத்திற்கும்  மூலதாரம் என்னுடைய தமிழ் ஆசிரியரான முனைவர்.இரா.குணசீலன் ஐயா.அவர் எனக்கு ஆசிரியராகவும் ஒரு தந்தையாகவும்  இருந்து வழிக்காட்டி வருகிறார்.அவருடைய மாணவியாக அவரை பெருமிதம் அடையச் செய்வேன்.
                 
                          


தமிழர்களின் ஒரு குரல்,தமிழனின் அடையாளம்,வலைப்பூக்களின் பூந்தோட்டம்,தமிழின் மண் வாசனை அனைத்தும் ஒரே இடத்தில் சேர்ந்து நான் நுகருகின்ற  வாசனை தான் தமிழ்மணம்.பதிவு நீண்டு வருகிறது என்பதால் முடிகிறேன்.பொறுமையாக வாசித்த அனைவருக்குமே என்னைடைய நன்றிகள்.தொடர் ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.