வெள்ளி, 11 மார்ச், 2016

நெய்வேலி என்எல்சி-யில் அப்ரண்டிஸ் பயிற்சி..!!


இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், தொழிற் பழகுநர் சட்டம் - 1961 இன் விதிகளுக்குட்பட்டு, கீழ் வரும் பிரிவுகளில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Image result for nlc

பிரிவு - காலியிடங்கள் விவரம்:

பிரிவு: Fitter 24

பிரிவு: Turner - 07

பிரிவு: Mechanic (Motor Vehicle) - 40

பிரிவு: Wireman - 23

பயிற்சி காலம்: 1 ஆண்டு

உதவித்தொகை: மாதம் ரூ. 7,213

பிரிவு: Mechanic (Diesel) - 05

பிரிவு: Mechanic (Tractor) - 13

பிரிவு: Plumber - 07

பிரிவு: Carpenter - 04

பயிற்சி காலம்: 2 ஆண்டுகள்

உதவித்தொகை: முதல் ஆண்டு மாதம் ரூ. 6,412, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.7,213

பிரிவு: PASSA - 13

பயிற்சி காலம்: 1 ஆண்டு

உதவித்தொகை: மாதம் ரூ. 5,610

பிரிவு: Medical Lab Technician (Pathology) & (Radiology) - 17

பயிற்சி காலம்: 6 மாதங்கள்

உதவித்தொகை: மாதம் ரூ. 5,610

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.04.2016 தேதியின்படி 14 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன்தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து 25.03.2016க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

துணை பொதுமேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், 
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், 
வட்டம்-20, நெய்வேலி-607803.

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://www.nlcindia.com/careers/Advt.No_LDC_01_2016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

வியாழன், 10 மார்ச், 2016

ராபட் ப்ரவுனிங்

                                             ராபட் ப்ரவுனிங்(19ஆம் நூற்றாண்டு)

ராபட் ப்ரவுனிங் 1812இல் கேம்பர்வெல் என்ற இடத்தில் பிறந்தார்.இவர் பள்ளிப்படிப்பை தனியாக பெற்று பின்னர் கல்லூரியை பல்கலைக்கழகத்தில் பெற்றார்.1833இல் ரசியாவுக்கு சென்று பின்னர் லண்டனில் தங்கினார்.அங்கு எலிசபெத் பாரட் என்ற எழுத்தாளரின் படைப்புகளால்  ஈர்க்கப்பட்டார்.பின்பு இருவரும் யாரும் அறியாமல் திருமணம் செய்து கொண்டனர்.
இவர் படிப்படியாக முன்னேறி மக்களின் கவனத்தை பெற்றார்.பின்பு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இவருக்கு டி.சி.எல்.,பட்டம் அளித்தது.
ப்ரவுனிங்கின் நடை:
ப்ரவுனிங்கின் கருத்தை மூன்றாக பிரிக்கலாம் அவை,
                        தத்துவம்
                        சமயம் மற்றும்
                        காதல்
என்பதாகும்.அவர் கடவுள் மற்றும் அழிவுற்றதை தான் வாழ்க்கையின் தத்துவமாக போதித்தார்.
விளக்குவதில் டெனிசனை விட புரைவுனிங் வேறுப்பட்டிருப்பார்.ஏனெனில், பொதுவாக ஓர் அழகு வடிவத்தை எழுத்துக்கள் மூலம் உருவாக்குவார்.
ப்ரவுனிங்கின் குறிப்பிடத்தக்க படைப்புகள்:
               அவரது முதல்(டிரமாடிக் மொனொலாக்)``பௌளின்’’இதில் ஷெல்லியின் ஆழமான இவருக்கு அவர்மேல் ஏற்பட்ட தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
                  ஸ்ட்ராட்போர்டு
                  சொர்டில்லா என்ற இவரது படைப்புகள்``பெல்ஸ் அன்ட் பொமிகிரானெட்ஸ்’’என்ற தொகுப்பில் வெளியாயின.
பின்னர்,
                 ``கிரிஸ்மஸ் ஈவ்’’,
                 ``யெஸ்டர் இயர்ஸ்’’
                  ``மென் அன்டு வுமென்’’ஒன் வெற்டு மொர்’
                  `ஃரா லிப்போ லிப்பி’’,
                  ரபி பென் இஸ்ரா
 இறுதியாக ``அசொலான்டோ’’என்பதனை எழுதினார்


                  

கணித அறிஞர் ஜார்ஜ் கேன்டர்


    

                             






    

       ஜார்ஜ் கேன்டா் ஒரு ரஷ்ய கணிதமேதை ஆவார்.  இவர் 1845ஆம் ஆண்டு பிறந்தார்.  இவரது தந்தை “வோல்டுமா் கேன்டர், முதலில் கோபென்ஹகன் நகரைப் பூா்விகமாகக் கொண்டவா்.  எனினும் அவா் செயின்ட் பீட்டர்ஸ்பா்க் நகருக்குக் குடிபெயர்ந்து, பங்கு சந்தை தரகராக பணியாற்றினார்.
     ஜார்ஜ் கேன்டர் சிறுவயதிலேயே கணிதம் மற்றும் அறிவியல் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.  கேன்டர் ரஷ்யாவிலிருந்து ஜெர்மனி நாட்டிற்குச் சென்றார்.  அங்குள்ள பெர்லின் பல்கலைக் கழகத்தில் கணிதம் கற்றார்.  1867ஆம் ஆண்டு டாக்டர் பட்டமும் பெற்றார்.
     ஆரம்ப காலத்தில் ஒரு சிறு பள்ளியில் ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய கேன்டர், பின்னாளில் லீப்சிக் அருகிலுள்ள ஹேல் பல்கழைக்கழகத்தில் பேராசிரியராகச் சேர்ந்தார்.
     கணிதத்தில் மிகவும் வேறுபட்டதும், முக்கியமானதாகவும் விளங்கும் தொடா்எண் தேற்றம் (Theory of sets) என்னும் புதிய வகைக் கணிதத்ததைக் கண்டறிந்தது உலகிற்குக் கூறினார்.
     பெர்லின் நகரில் வசித்தபோரு கேன்டர், எண் கணிதத் தேற்றத்தில் அதிக ஆர்வம் காட்டினார். ஹேல் நகரத்திற்குச் சென்றபின், அவரது கவனம் திரிகோணமிதி தொடரில் சென்றது.
    






     இதன் விளைவாக முடிவிலாத் தொடர்களிலுள்ள எண்களின் கூட்டுத்தொகை, விகிதம் போன்றவற்றைப் பற்றிய உண்மைகளைக் கண்டறிந்தார்.  கேன்டரின் காலத்திற்கு முன்பு வரை முழு எண்களைப் (Real number) பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
     தொடா்ந்து கணித ஆராய்ச்சியில் ஈடுபட்ட கேன்டர், தனது ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார்.  அவரது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் ஒன்று கணித உலகில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.  அதுவே தொடா்எண் தேற்றமாகும்.
     1884ஆம் ஆண்டு பாரீஸ் சென்ற கேன்டர் பல கணிதமேதைகளைச் சந்தித்து, தனது புதிய கண்டுபிடிப்பைப் பற்றிக் கூறினார்.  ஆனால் பலரும் கேன்டரின் கண்டுபிடிப்பு ஆதாரமற்றதாகக் கூறி, அவரை விமர்சனம் செய்தனர்.
     ஆனால், அவரது முடிவிலித் தொடர் பற்றிய கண்டுபிடிப்புகள் ஆதாரமானவை என்று பின்னாளில் கணிதமேதைகள் விரைவிலேயே ஏற்றுக்கொண்டனா்.  “டிரான்ஸ்ஃயைனிட் எண்கள்” என்ற எண்களைக் கண்டறிந்து கூறிய கேன்டர், அவ்வெண்களுக்கும் “முடிவிலித் தொடருக்கும் (Infinite sets) உள்ள தொடர்பை விளக்கிக் கூறினார்.
     ஒரு தொடரிலுள்ள நேர்மறை எண்களின் (positive Integers) கூட்டுத்தொகை, அத்தொடரிலுள்ள முழு எண்களின் கூட்டுத்தொகையினினிறும் வேறுபடும் என்பது கேன்டர் கண்டறிந்து கூறிய உண்மைகளாகும்.
    “இரு தொடர்களை எடுத்துக்கொண்டால், அவற்றில் ஒரு தொடரிலுள்ள ஒரு குறிப்பிட்ட எண்ணிற்கும், மற்ற தொடரிலுள்ள ஒரு குறிப்பிட்ட எண்ணிற்கும் தொடர்பு உண்டு” என்பதையும் கேன்டர் கண்டறிந்து கூறினார்.
     கணிதத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஜார்ஜ் கேன்டர், தனது இறுதி நாட்களில் மனநலம் பாதிக்கப்பட்டு, ஹேல் நகரிலுள்ள மனநல மருத்துவனையில் 1918ஆம் ஆண்டு காலமானார்.  கேன்டரின் பல கணித கண்டுபிடிப்புகள், விஞ்ஞானத்திலும் பலவகைகளில் பயன்படுகிறது.
குறிப்பு - படித்ததில் பிடித்தது
நூல் -   உலக கணித மேதைகள் ப.எண் 81

புதன், 9 மார்ச், 2016

டெனிசன்

                                             விக்டோரியக் கவிஞர்:டெனிசன்(19ஆம் நூற்றாண்டு)

ஆல்ஃப்ரெட் லார்ட்டு டெனிசன் ஒரு வணிக வியாபரியின் மகன். வெர்ஸ்வெர்த்தின் இறப்புக்கு பின் இவர்``அவைப் புலவர்’’ஆனார்.அவர் காலத்தில் மிகச் சிறந்த ஒரு கவிஞராய் இவர் திகழ்ந்தார்.இவர் வெஸ்ட் ``மினிஸ்டர் அபே’’என்ற இடத்தில் புதைக்கப்பட்டார்.
டெனிசனின் கவி நடை:
                   டெனிசன் வார்த்தைகளுக்கும்,பழம்பெறும் விரிவாக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பார்.அவரது படைப்புகளில் பற்றாக்குறை என்றால் அவரது சுயமாக ஆற்றலை வெளிப்படுத்தியிருக்க மாட்டார்.
அவரது திறமையையும்,கலை வெளிப்பான்மையும் யாராலும் மறுக்க முடியாது.அவர் எழுதுவதற்கு முன் தனது மனதில் அந்த காட்சியை பதிவு செய்து,தனக்குள் அதனை ரசித்த பின்னர் அவர் எழுதுவதில்,மிகச்சரியான வடிவத்தை காணலாம்.
நடையில் பூரணத்துவம்,மொழியைக் கையாலும் விதம்,பலதரப்பட்ட இசை கலந்த கவிச்சொற்கள் இவை அனைத்தும் குறிப்பிடத்தக்கன.
புதுமை,புனையம்,தரம் இதனையொட்டியே இவரது கவிதைகள் அமைந்திருக்கும்.ஆங்கில மக்களின் நாட்டுப்புற மற்றும் அமைதியான வாழ்க்கையே இவர் கருத்தாக கொண்டு எழுதுவார்.
டெனிசனின் புகழ்பெற்ற நாடகங்கள்:
வரலாற்று நாடகம்:
                 குயின் மேரி,ஹாரோல்ட்டு மற்றும் பெக்கேட்.
டெனிசனின் புகழ்பெற்ற சில கவிதைகள்:
                 இவரது அண்ணனும் இவரும் சேர்ந்து``போயம்ஸ் பை தி டு பிரதர்ஸ்’’, சான்சிலர் விருது பெற்ற``டிம்படூ’’,தி லொட்டஸ் ஈட்டர்ஸ்,``இன் மெமொரியம்’’என்ற இவரது படைப்பில் காலமான இவரது நண்பரான ஆர்த்தூர் ஹென்றி ஹாம்லன்கு பாடியிருப்பார்.மேலும் இவரது`
`மாவ்ட் அன்ட் அதர் போயம்ஸ்’’,`
`இடிலஸ் ஆஃப் தி கிங்’’,
``இனொக் ஆர்டின்’’

என்ற இவரது புகழ்பெற்ற படைப்பு பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

பெண்கள் புரியாத புதிர்..!!

அன்புடையீருக்கு வணக்கம்,

இன்பத்தை பகிரும் போது பல மடங்கு அதிகரிக்கும் என்று கூறுவர்,அது உண்மையே.உலக மகளிர் தினத்தை முன்னிட்டு எங்கள் கல்லூரியில் மகளிர் தினச் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.மகளிர் தினம் என்பது அனைத்து மங்கையரின் உரிமை மற்றும் அன்பு  இது  கிடைக்கப்பட்டு  அங்கீகரிக்கப்பட்ட நாள் தான்  மகளிர் தினம்.மங்கையராக பிறந்திடவே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா என்ற கவிமணி வரிகளின் படி,



இத்தினம்  அனைத்து மகளிரும் பெருமிதம் கொள்ளத்தக்க ஒரு நாளாக விளங்குகிறது.காரணம் ஒரு பெண் பல பரிணாமங்களை அடைகிறாள் அதாவது ஒரு சேயாக,மனைவியாக  மீண்டும் தாயாக போன்ற பல்வேறு பரிணாமங்கள் அடைகிறாள் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது ஒரு பெண்ணே.

பல நூறு பேர்கள் சேர்ந்து பெரிய மாடமாளிகையை கட்டலாம் ஆனால் ஒரு இல்லம் இல்லமாக்க ஒரு பெண்ணால் மட்டுமே முடியும்.ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்ற பழமொழி  கேட்டதுண்டு அனைவருமே.ஆம் ஒரு பெண் நினைத்தால் உலகையே உருவாக்க முடியும் அதே பெண் நினைத்தால் அவள் உருவாக்கியதையே அழிக்கவும் முடியும்.

பொறுமையில் ஒரு  பெண் சீதா பிராட்டியாகவும்,அன்பிலும் கருணையிலும்  அன்னை தெரஸாகவும்,வீரத்தில் ஜான்ஸி ராணியாகவும் இருப்பாள்.இப்படி ஒரு பெண் பலவாக மாற முடியும் என்றால் அவளுக்குள் இருக்கும்  தயக்கம் என்ற ஒரு கொடிய நோய் தீர வேண்டும் அப்போது தான் ஒரு பெண் வெற்றி என்னும் பாதைக்கு செல்ல முடியும்.

                                 

மகளிர் தினத்திற்கு(08.03.2016) சிறப்பு விருந்தினராக வந்திருந்த  திருமதி.அனுராதா கிருஷ்ணமூர்த்தி(கருநாடக பாடகி மற்றும் சின்னத்திரை நடிகை) மற்றும்  திருமதி.கௌசல்யா (மகப்பேறு மருத்துவர்) இதுப்போன்ற பல்வேறு வகையில் அவர்கள் சந்தித்ததை மாணவியர்களிடம் பகிர்ந்து கொண்டனர்கள்.பெண்கள் விழிப்புணர்வு மற்றும் பல்வேறு கேள்விகளை மனதில் பதித்துவிட்டுச் சென்றனர்.அவர்களின் வாழ்க்கையில் அவர்கள் சந்தித்த சில தடைகளும் அனுபவங்களையும் எங்களோடு பகிர்ந்தனர்.


இப்படி பெண்களை கௌரவிக்கும் வகையில் இம்மகளிர் தின நிகழ்ச்சி எங்களுக்கு மறக்க முடியாது நிகழ்வாக இருந்தது.இதை  ஏற்படுத்தி எங்களை இன்ப வெள்ளத்தில் மூழ்க வைத்தது மறக்க முடியாத விழாவாக அமைத்து தந்த எங்கள் கல்லூரி முதல்வர்.திரு.முனைவர்.ம.கார்த்திகேயன் ஐயா அவர்களுக்கு அனைத்து மாணவிகள் சார்பாகவும் மிகப் பெரிய நன்றிகள் ஐயா.

தங்களின் உறுதுணையும்,ஊக்கமும் இருக்கையில் கட்டாயம் நாங்கள் அனைவரும் எங்கள் திறமைகளை வெளிகொணருவோம் ஐயா.நன்றிகள் பல..தொடர்ந்து ஊக்கமளித்து எங்களை  ஒரு வெற்றி பாதையை நோக்கி கொண்டு வழி நடத்தவும்  ஐயா. நன்றி.