இந்த உலகின் ஒட்டுமொத்த மையப் புள்ளி அமைந்திருக்கும்
இடமாக தமிழகத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த உண்மையைக் கண்டு நவீன விஞ்ஞான உலகம்
ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளது. சிதம்பரம்
நடராஜர் கோயில் இன்றைய அறிவியலுடன் மட்டுமல்ல,
மனிதர்களின் உடற்கூறுகளுடன் பொருந்துவதும் அதிசயமே. ஆகவேத்தான் நன்மை, அங்கு
சென்று வழிபட வைத்து, உலகத்தின் காந்த
சக்திக்கு கட்டுப்பட்டு, நோயின்றி வாழ, நம் முன்னோர் வழிகாட்டி உள்ளனர். இக்கோயிலின் அற்புதங்களும், ரகசியங்களும், ஆச்சரியங்களும் ஏராளம்.
இன்னும், மனித ஆற்றலினால் கண்டுபிடிக்க
இயலாத பேருண்மைகள் இக்கோயிலின் அமைப்பில் புதைந்து உள்ளன.
சர்வதேச ஆன்மீக அமைப்புகள் கடந்த எட்டு ஆண்டுகளாக
சில கோடி டாலர்கள் செலவு செய்து, தீவிர
ஆராய்ச்சி நடத்தி, சிதம்பரம் நடராஜர் கால்
பெருவிரலில் தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக கண்டுபிடித்துள்ளன. இதை, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அறிந்து, இக்கோயிலை, நம் முன்னோர்
கட்டினர். நவீன ஆய்வகங்கள் ஏதும் இல்லாத
அக்காலத்தில் இதை நம் முன்னோர் கண்டுபிடித்துள்ளனர் என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
அணுத்துகள்கள் அசைந்தப்படியே இருக்கும் என்ற உண்மையை, ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும் படி சிலை அமைத்து அதை பூமியின் மையப்புள்ளியில்
அமர்த்தியது பெரிய சாதனைதான்.
இதை 5000 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்த திருமூலரின்
சிந்தனையும், ஆற்றலும், சக்தியும் மகத்தானது. திருமூலரின் திருமந்திரம், உலகற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும். இதை உணர இன்றைய அறிவியலுக்கு மேலும் ஒரு
நூற்றாண்டு தேவைப்படலாம். சிதம்பரம் நடராஜர்
கோயில் ரகசியம் என்று பலரும் பல தகவல்கள் கூறிவரும் வேளையில் கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த விவரங்கள் அளவிட
முடியாதவை. முன்னோர் செய்த அனைத்து செயல்களும், ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது. மன்னர்கள் கட்டிய பிரம்மாண்டமான கற்கோயல்களுக்கு
பின்னால் இருக்கிற பல அற்புதங்கள், அதை
கட்டியவர்களின் நுண்ணறிவை வெளிப்படுத்துகிறது.
மனித
உடலை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டுள்ள,
சிதம்பரம் கோயிலில் ஒன்பது நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் ஒன்பது வாயில்களை குறிக்கின்றன. கோயிலின் விமானத்தின் மேலே உள்ள பொற்கூரை
21,600 தகடுகள் மூலம் வேயப்பட்டுள்ளது. இது ஒரு மனிதன் தினமும் சராசரியாக 21,600 தடவை
சுவாசிக்கிறான் என்பதை குறிக்கும். இந்த எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த
நாடிகளையும் குறிக்கின்றன.
சிதம்பரம் நடராஜரின் ஆனந்த தாண்டவம் என்ற கோலம்
காஸ்மிக் டான்ஸ் என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகிறது. சிதம்பர ரகசியம் என்பது, சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும். கருவறையில் நடராஜரின் வலது பக்கத்தில் உள்ளது
ஒரு சிறு வாயில். இதன் திரை அகற்றப்படும்
போது கற்பூர ஆரத்தி காட்டப்படும். இதனுள்ளே
திருவுருவம் ஏதும் இல்லை தங்கத்தினால் ஆன வில்வதள மாலை தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே, மாலை தொங்கும், இதன் ரகசியம் இங்கு இறைவன் ஆகய உருவில் இருக்கிறார் என்பதே ஆகும். இதுதான் சிதம்பர ரகசியம் என அனைவராலும்
போற்றி வழிபாடு செய்யப்படுகிறது.
( படித்ததில் பிடித்தது
)