வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

இடைநிலை


இடைநிலை;
முதலில் விவரங்களை ஏறுவரிசையில் எழுத வேண்டும்.
விவரங்களின் எண்ணிக்கை ஒற்றைப்படை எண் எனில் இதன் நடு உறுப்பு இடைநிலை அளவாகும்.
உதாரணம் 33 35 39 40 43
இதன் இடைநிலை 39 ஆகும்.
விவரங்களின் எண்ணிக்கை இரட்டைப்படை எண் எனில் இரு மத்திய உறுப்புகளின் சராசரியே அவற்றின் இடைநிலை ஆகும்.
உதாரணம் 33 35 39 40 43 48
இடைநிலை = 39+40/2 = 39.5
எளிமையாக கூற வேண்டுமெனில் 11 மாணவர்களின் எடை கொடுக்கப்பட்டுள்ளது எனக் கொள்வோம். இதில் இடைநிலை என்றால் 6-வது மாணவரின் எடையைக் கூறுவோம். இதே 10 பேர் இருந்தால் 5-வது மற்றும் 6-வது மாணவரின் எடையை கூட்டி இரண்டால் வகுத்தால் கிடைக்கும் விடையே இடைநிலை ஆகும்.
எடுத்துக்காட்டு
17 15 9 13 21 7 32
n=7 (ஒற்றைப்படை எண்)
இடைநிலை = நடுமதிப்பு
              = (n+1/2)
            = (7+1/2)
            = (8/2)
            =4-ம் இடத்தில் உள்ள எண்
              = 15
1.  ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீரர் எடுத்த ஓட்டங்கள் பின்வருமாறு 13 28 61 70 4 11 33 0 71 92 இவற்றின் இடைநிலை காண்க.
2.   கொடுக்கப்பட்ட விவரங்களின் இடைநிலை காண்க.
2 4 6 8 10 12 14

அன்னை தெரசா

                                                     

  அன்பு சுரக்கும் உள்ளமே
  அருளும் கருணை இல்லமே!

   ஆதரவற்றவர்களை தழுவுமே
  அன்னை தெரசா கரங்களே!

  தாயை இழந்த மழலைக்கும்!
  நோயில் புரளும் மனிதர்க்கும்!

  சேவை செய்ய நீளுமே
  அன்னை தெரசா கரங்களே!

  உயிர்களிடத்தில் அன்பினை
  மீட்ட வந்த தேவதை!

  தியாக மெனும் சேவையை
  காக்க வந்த தாய்மையே!
  நீ மீண்டும் வந்து பிறக்கணம்
  ஆதரவற்றோர் அனைவரும்

  உன் அன்பு மழையில் நனையணும்!

வியாழன், 25 பிப்ரவரி, 2016

கூட்டு சராசரி


கூட்டுசராசரி;
கண்டறிந்த மதிப்புகளின் கூட்டுத் தொகைக்கும், மதிப்புகளின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதத்தைக் கூட்டுச் சராசரி என்கிறோம்.
நேரடி முறையில் கூட்டுசாராசரி;
X    5  10 15 20 25 30
F    4  5  7  4  3  2

x        f            fx

 5       4           20
10       5           50
15       7          105     
20       4           80
25       3          75
30       2          60
       N= 25         = 390

கூட்டுசராசரி    = 390\ 25
கூட்டுசராசரி    = 15.6

இதே போல் இந்த மதிப்புக்கு கூட்டுச் சராசரி கண்டுபிடியுங்கள்.
x  15 25 35 45 55 65 75 85
f   12 20 15 14 16 11 7 8

முயற்சி செய்யுங்கள் இதற்கான விடையை நாளை பார்க்கலாம்.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

புள்ளியியல் ஒரு அறிமுகம்


                       
  புள்ளியியல்
வரையறை;

      புள்ளியியல் என்பது புள்ளி விவரங்களைச் சேகரித்தல், அளித்தல், ஆய்வுசெய்தல், எண் விவரங்களிலிருந்து கருத்துக்களை பல வகைகளில் தருவித்தல் என வரையறுக்கப்படுகிறது.

இளங்கலையில் புள்ளியியல்;

     இளங்கலை தமிழ், ஆங்கிலம் போன்றே இளங்கலை புள்ளியியல் என்று தனி பிரிவு உள்ளது. மற்ற பிரிவுகளைப் போல் இதிலும் இளங்கலை முதல் முதுகலை வரை பல பகுதிகள் உள்ளன. நமக்கு தெரிந்தது எல்லாம் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியலில் சில பிரிவுகள். ஆனால் நமக்கு தெரியாமல் வேலை வாய்ப்பு அதிகம் உள்ள பிரிவுகள் பல. அவற்றுள் ஒன்று தான் புள்ளியியல் துறை. நாம் அனைவரும் எந்த பிரிவில் அதிக போர் உள்ளார்களோ அது தான் மதிப்புடையது என்று அந்த பாடத்தையே தேர்வு செய்வோம். ஆனால் அதைவிட மதிப்புடைய வேலைவாய்ப்பு மிகுந்த துறைகள் பல உள்ளன. அவற்றில் ஒன்று தான் புள்ளியியல்.

வேலைவாய்ப்புகள் பல;
  
         எஸ்.எஸ்.சி
         
         டி.என்.பி.சி

         என்.எஸ்.எஸ்.ஓ

         யூ.பி.எஸ்.சி

         ஐ.எஸ்.எஸ்

         ஐ.டி துறை

         விவசாயம்

         கல்லூரி பணி

         மக்கள் தொகை கணக்கெடுப்பு

     இவ்வாறு பல இடங்களில் இதற்கான  பணி இடங்கள் காலியாக உள்ளன. இதை புரிந்து கொள்ளாமல் வேலை இல்லை என புலம்பி கொண்டிருக்கிறோம்.

நட்பின் துளிர்


    
     எனக்கு பிடித்த யாவும் உனக்கு பிடித்திருந்தால்

     நிச்சயம் உன்னை எனக்கு பிடித்திருக்காது!


   எனக்கு பிடிக்காத பலவும் உனக்கு பிடித்ததே

    நான் உன்னை நேசித்ததன் காரணம்!