ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

கேள் மனமே கேள்..!!


வைரமுத்து.





தன்னலங்கள் தீர்ந்துவிடும் இதயம் கேட்பேன்

தங்கத்தைச் செங்கல்லாய்க் காண கேட்பேன்

விண்வெளியில்  உள்ளதெல்லாம்  அறியக் கேட்பேன்

விஞ்ஞானம் பொதுவுடைமை ஆகக் கேட்பேன்..!!



மண்ணுலகம் கண்ணீரை ஒழிக்கக் கேட்பேன்

மனித இனம் செவ்வாயில் வசிக்கக் கேட்பேன்

பொன்னுலகம் பூமியிலே தோன்றக் கேட்பேன்

போர்க்களத்தில் பூஞ்செடி பூக்கக் கேட்பேன்..!!




மேடையில் தோற்காத வீரம் கேட்பேன்

மேதைகளைச் சந்திக்கும் மேன்மைக் கேட்பேன்

வாடையிலும் நடுங்காத தேகம் கேட்பேன்

வாவென்றால் ஓடிவரும் கவிதை கேட்பேன்..!!



வானளந்த தமிழ்த்தாயின் பாலை கேட்பேன்

வைகை நதிப் புலவர்களின் மூளை கேட்பேன்

தேனளந்த தமிழ்ச்சங்க ஓலை கேட்பேன்

தென்னாழி  தின்றதமிழ்த் தாளைக் கேட்பேன்..!!



மானமகள் குட்டுவனின் வில்லைக் கேட்பேன்

மாமன்னன் பாண்டியனின் வேலைக் கேட்பேன்

ஞானமகன் வள்ளுவனின் கோலைக் கேட்பேன்

ராஜராஜன் வைத்திருந்த வாளைக் கேட்பேன்..!!


ஆர்.ராஜாலட்சுமி,
வணிகவியல் முதலாமாண்டு,
படித்ததில் பிடித்தது.

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

கிரீன் டீ


    




     கிரீன் டீ சீனாவில் தோற்றுவிக்கப்பட்டது.  ஆனால், தற்பொழுது உலகம் முழுவதும் பிரபலமான பானமாக மாறிவிட்டது.  இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், தோலுக்கும் பயன்படுகிறது.  மேலும், இதில் பல நொதிகள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன.  இது கொழுப்பு அமிலங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டை போக்குகிறது.  இதில் ஸ்டெரொல்ஸ், பாலிஃபினால்கள், கரோட்டினாய்டுகள், போக்கோஃபேரல்கள் உள்ளன.  இது பச்சை இலை என்பதால் கசப்பு சுவையுடன் உள்ளது.  கடந்த இரண்டு ஆண்டுகளில் இதை பருகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
     உண்மையான கிரீன் டீக்கு தேவையான தேயிலை சீன கடைகளில் உள்ளது.  ஆனால், அங்கு விலை அதிகமாகவும் சிறந்த சுவை மற்றும் நறுமணத்தை உடையதாகவும் உள்ளது.
     டிராகன் வெல் அல்லது லங்சிங்க் என்பது விலையுயர்ந்த கிரீன் டீகளில் ஒன்றாகும்.  மேலும் சென்ச்சா மற்றும் மாச்சா என்பதும் இனிப்பு சுவையுடய ஒரு வகையான கிரீன் டீ ஆகும்.




நன்மைகள்
v  காதில் ஏற்படும் பிரச்சனையை குறைக்கிறது.
v  மன அழுத்தம், கவலையை போக்குகிறது.
v  வைரஸ் கிரும்பரவுவதிலிருந்து தடுக்கிறது (HIV)
v  இரத்த அழுத்தத்தை தவிர்க்கிறது.
v  நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
v  தோலை பளபளப்பாக்குகிறது.
v  கொழுப்பையும் குறைக்கிறது.
v  நீரிழிவு பிரச்சனையைக் குறைக்கிறது.

உடலுக்கு நன்மையா?
    



     கிரீன் டீ “ஆன்டிஆச்சிடென்ட்“ ஆக உடலில் செயல்படுகிறது.  இது உடலில் உள்ள ஃப்ரீரெடிகல்ஸ் எனப்படும் நச்சுப் பொருட்கள் செல்களை பாதிக்காமல் தடுக்கிறது.  இந்த ஃப்ரீரெடிகல்ஸ் ஆக்சிடைல் அடைந்து செல்களை பாதித்தார் உடலில் உள்ள கொழுப்பு கரையாமல் தங்கிவிடும்.  அப்பொழுது உடல் பருமன் ஏற்படும்.  எனவே, கிரீன் டீ இதைத் தவிர்க்கிறது.
     மேலும் உடல் பருமனை குறைக்க விரும்புகிறவர்கள் வைட்டமின் சி, வைட்டமின் இ, ஆகிய சத்துக்கள் அதிகமுள்ள ஆரஞ்சு, சாத்துக்குடி, பாதாம் பருப்பு, சூரியகாந்தி எண்ணை ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
     ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜூஸ்க்கு சமம் என்கிறார்கள்.  கிரீன் டீயில் உள்ள ஆண்டி ஆக்சிடென்கள் நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல் ஸ்ரீலையும் புதுபித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றனவாம்.  எனவே தான் சீனாவில் சராசரியாக 90 வயதை தாண்டி மக்கள் வாழ்கின்றனர் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கிரீன் டீ பையின் அற்புதம்
     


     கிரீன் டீயைப் பற்றி பல நன்மை, தீமைகளை பார்த்தோம்.  ஆனால் இந்த பையானது பல அதிசியத்தை நிகழ்த்துகிறது.  கிரீன் டீ தூள் பையை தூக“கஜ வீசாமல் அதனை குளிர்ச்சியான இடத்தில் வைத்து குளிர வைக்க வேண்டும்.  பின்னர் அந்த குளிர்ந்த தேனீர் பையை எடுத்து இருகண்களிலும் வைத்து எடுத்தார் கண்களில் உள்ள வீக்கம் குறையும், தோல் சுருக்கத்தை குறைக்கும் முகம் பொலிவு பெற்றதை அற்புதமாக உணரலாம்.

சருமத்திற்கு ஏற்ற கிரீன் டீ ஃபேஸ் மாஸ்க்
     கிரீன் டீ தூளில் பேக்கிங் சோடா மற்றும் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் பேஸியல் மாஸ்க் போடலாம்.  இதில் உள்ள சுருக்கங்களை இறுக்கமடைய செய்யும்.  மேலும் இறந்த செல் மற்றும் அழுக்கினை நீக்குகிறது.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு
    


     கிரீன் டீயை ஒரு நாளைக்கு 2 அல்லது 3 கப் மட்டுமே பருக வேண்டும்.  கிரீன் டீயில் கஃபைன் என்னும் வேதிப்பொருள் உள்ளது.  இதன் அளவு உடலில் அதிகரித்தால் உணர்வூக்கியாக செயல்பட்டு தூக்கம் உணர்வைக் கொடுக்கும்.  கர்ப்ப காலத்திலும், பால் கொடுக்கும் காலத்திலும் இதனை தவிர்ப்பது நல்லது.  கர்ப்ப காலத்தில் அதிக அளவு அருந்தினால் கர்பம் கலைய கூட நேரிடும்.
எச்சரிக்கை!!!
     இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு எல்லாம் சரியான விகிதத்தில் உள்ளவர்கள் இதைப் பருகினால் சிறிது நேரத்திலேயே இதன் விகிதம் குறைந்து மயக்கம் அடைய நேரிடும்.  எனவே, அனைவரும் கிரீன் டீ குடிப்பதற்கு முன்பு உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை தெரிந்து கொண்டு பயன்படுத்தினால் நன்மை பயக்கும்!!!.



வானில் ஒரு அதிசியம்



                           வானில் ஒரு அதிசியம்

 

வானில் அவ்வப்போது ஏதாவது சுவரஸ்மான மாற்றங்கள் நிகழ்ந்து

கொண்டே இருக்கின்றன. அப்படியொரு மாற்றம் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. அது விண்வெளியில் நட்சத்திரங்களையும், கோள்களையும் பார்த்து ரசிப்பவர்களுக்கு அரிய விருந்தை படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த\ அதிசியம் வருகிற பிப்ரவரி 20-ந்தேதி வரை நீடிக்கும். இது ஒரு அபூர்வ செய்தியாகும். ஆம், ஐந்து கோள்கள் அதிகாலை வானில் வரிசையாக ஒரே நேரத்தில், சாதாரணமாக, தொலைநோக்கி இல்லாமல் பார்ப்பவர்களுக்கு தெரியும். இவை புதன், வெள்ளி, சனி, செவ்வாய், வியாழன், ஆகிய கோள்கள் 10 ஆண்டுகளுக்கு மேலான காலத்தில், இது போன்று வரிசையாக அணிவகுத்து ஒரே நேரத்தில் காணும் விதமாக வரும். இந்த கிரகங்களின் அணிவகுப்பு இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

 

 

 

 

 இந்தக் காட்சி சனவரி 27-ல் தொடங்கிவிட்டது. பிப்ரவரி 20 வரை இது தெரியும். புதன் கிரகம் இந்தக் காலகட்டத்தின் இறுதியில் சற்று மங்கலாகத் தெரியும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். பொழுது புலர்வதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு இந்த அதிசியத்தை பார்த்து ரசிக்கலாம். இந்த ஐந்து கோள்களும், அவற்றின் சுற்று வட்டப் பாதையில் இருந்து, சூரியனின் தோற்றப்பாதை என்று அறியப்படும் திசையில் அணிவகுப்பதால் இந்த செயல் நடைமுறையில் சாத்தியமாகிறது. இது பூமியின் சுற்றுப்பாதைக்கு அருகே ஒரே வரிசையில் அணிவகுப்பதைத்தான் குறிக்கிறது. இதே போன்றதொரு அணிவகுப்பு வருகிற ஆகஸ்டு 13-ந்தேதியிலிருந்து 19-ந்தேதி வரை மீண்டும் நடக்கும். அந்த சமயத்தில் இந்த அணிவகுப்பு அந்தி சாயும் நேரத்தில் நடைபெறும். அப்போது பூமியின் தென்பகுதியில் வசிக்கும் மக்கள் மட்டும் இதை நன்றாக பார்க்க முடியும். கடந்த முறை இதே போன்றதொரு அணிவகுப்பு டிசம்பர் 2004-ல் இருந்து சனவரி 2005 வரை நடந்தது. இப்போது மீண்டும் வானில் தோன்றியிருக்கும் இந்த அதிசயத்தை நாமும் கண்டுகளிப்போம்.



புதன், 3 பிப்ரவரி, 2016

தன் வாயால் கெடுதல்



                
பழமொழி

                         முன்றுறையரையனார்

பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைகள்

சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் – நல்லாய்!

மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்

நுணலுந்தன் வாயால் கெடும்.


நுணலும் தன் வாயால் கெடும் என்பது பழமொழி. நுணல் – தவளை.
மண்ணுக்குள் முழுகி ஒளிந்து கொள்ளும் தவளை தன் குரலைக் காட்டிக் கத்தி பாம்பிடம் அகப்படும். அதுபோல, பொல்லாங்கான பேச்சுக்களைப் பேசிவிட்டு மறைந்து திரியும் பேதையும், தன்னுடைய சொல்லினாலேயே துயரினுள் அகப்படுவான். அவனுடைய உண்மையான தன்மையைப் பிறர் அறிந்து, அவனை வெறுப்பார்கள்.  

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

கருமியின் செல்வம்



               
பழமொழி

                     முன்றுறையரையனார்

வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற

முழங்கும் முரசுடைச் செல்வம்தழங்கருவி

வேய்முற்றி முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ

நாய்பெற்ற தெங்கம் பழம்.


நாய்பெற்ற தெங்கம் பழம் என்பது பழமொழி. தெங்கம்பழம் – முற்றிய தேங்காய். நாய்க்கு கிடைத்த முழுத் தேங்காயை அதனாலும்  தின்ன முடியாது; பிறர் எடுத்துச் சென்று அநுபவிக்கவும் அது விடாது. அதனைப் போன்றே தான் பெற்ற செல்வத்தை வறுமையாளர்களுக்கு வழங்கித் தருமம் செய்யாமலும், தானும்  அநுபவிக்காமல் காக்கும் கருமியின் செல்வமானது அவனுக்கும் பிறர்க்கும் பயன்படாமல் அழியும்.