செவ்வாய், 21 ஜனவரி, 2020

நிழல் ஒளிர்ந்தது

வார்த்தை இன்றிப் பாடிய குயில்
வாடை இன்றிப் பூத்த மலர்
ஓடை இன்றிப் பாய்ந்த நீர்
உருவம் இன்றிப் பார்த்த நிழல்
உன் முகமாய் ஒளிர்ந்தது

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

காட்டில் திருவிழா

மயில் தோகைவிரித்து நடனம் ஆடியது
மான் காடெங்கும் துள்ளி விளையாடியது
கரடி தேனைச் சேகரித்து வைத்தது
குதிரை அணியாக வலம் வந்தது
குரங்கு தோரணம் கட்டி வைத்தது
முயல் மலர்களைப் பறித்து வந்தது
யானை தண்ணீர் கொண்டு வந்தது
அணில் பழங்கள் சேமித்து வைத்தது
குருவிகள் இனிய குரலில் கச்சேரி செய்தன
பறவைகள் அழைப்பிதழ்களை அனைவருக்கும் கொடுத்தன
இவர்கள் எல்லோரும் இணைந்து
காட்டு ராஜா சிங்கத்தின் பிறந்தநாளைக் கொண்டாடினர்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

என் அன்பு உள்ளமே

கவிதை பாடும் மேகம் காணுவோம்
வானிலே நாம் இங்கே
கண்கள் ஓரம் ஏன் இந்தக் கண்ணீர்
உன்னிலே என்னைக் கண்டும் ஏன் ஏக்கம் உன்னிலே
உன்னை அடைந்தேன் என்னை இழந்தேன்
மீண்டும் பிறந்தேன் உயிரே

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

தோழி நீ எனக்கு

அருகில் இருந்த உன்னை அறிய மறந்துவிட்டேன்
ஆசை இருந்தும் உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன்
கையில் கிடைத்த உன்னை இழந்துவிட்டேன்
தவறவிட்ட உன் நட்பை நீ எனக்கு மீண்டும் தருவாயா?

நிலவே

இருண்ட வானத்தில் மின்னிய முகம்
முகம் பார்க்கப் பெண் போலத் தெரிகிறது
ஆனால் உருவம் இன்றிக் காணப்படுகின்றாள்
இந்த வானத்தில் யார் துணையும் இன்றி நிற்கிறாளே
நிலவே உன் துணை நானே

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

அன்பே

என்னை யாரென்று கேட்டாயே
நான் யாரென்று உனக்குத் தெரியாதா
உண்மை தெரிந்
தால் என்னிடம் திரும்பி வருவாயா
எப்பொழுது உன் அன்பை என்மீது காட்டுவாய்
அதுவரை உன் அன்பிற்காகக் காத்திருப்பேன்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

நட்பு

மழை வந்தால் மண் மணம் பெருகும்
தாய் என்றால் மனதில் பாசம் வரும்
தந்தை என்றால் புது நேசம் வரும்
மழை வந்தால் மயில்கள் தோகை விரியும்
உலகைப் புரிந்துகொள்ளக் காலம் வரும்
என் நட்பைப் புரிந்துகொள்ள அன்பு மட்டுமே வரும்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

உலக வாழ்க்கை

நாட்கள் நகருகின்றன அதன் பாதை காலம்
காலத்தின் கைகளில்தான் நம் வாழ்க்கை
வாழ்க்கையின் முடிவு செல்லும் பாதை கடவுள்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

அன்பு

மரம் வளர வருடம் போதும்
நெல் வளர மாதம் போதும்
செடி வளர வாரம் போதும்
கொடி வளர நாட்கள் போதும்
என் அன்பை நீ புரிந்துகொள்ள
ஒரு நொடி போதும்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

மனம் மாறவில்லை

காலங்கள் மாறினாலும்
கனவுகள் மாறினாலும்
என் கடமைகள் மாறினாலும்
உன்னை நினைத்த
என் மனம் மட்டும் மாறவில்லை

முத்து

சிப்பியின் வயிற்றில் பிறந்த முத்தே
கடல் அலையைத் தழுவி விளையாடி
நிலவின் வடிவம் பெற்ற
மின்னிய ஒலியுடன் கரை சேர்ந்து
நூலுடன் நட்பினால் இணைந்து
பெண்ணின் கழுத்தில் அணிகலனாய்த் திகழ்கின்றாய்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

மலர் முகம்

அல்லியைப்போல் முகம் மலர்ந்தது
சிவப்பு ரோஜாவைப்போல் இதழும்
சங்குப் பூவைப்போல் காதுகளும்
முருங்கைப் பூவைப்போல் மூக்கும்
மொட்டுகளைப்போல் இருவிழிகளும்
முத்து மல்லியைப்போல் பற்களும்
மலர் இதழ்களில் விழும் கோடுகளைப்போல் நெற்றியில் வாக்கும்
வண்ணமலர் எல்லாம் பெண்ணின் முகம் ஆகும்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

மதிமுகம்

வெள்ளைத் தாமரை விரிந்த முகம்போல நிலவு வந்தது
மேகக்கூட்டம் வானில் படர்ந்து நின்றது
உதிர்ந்த முத்துகள் விண்மீனாய்ச் சிதறின
சுற்றிலும் கார் இருள் சூழ்ந்திருக்க
விண்மீன்கள் கோலம் இட்டிருக்க
இரவு வந்தது புவியை உறங்கவைக்க

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்