கே.எஸ்.ஆா் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கல்லூரி மாணவிகளின் படைப்புகள்
பக்கங்கள்
முகப்பு
CONTACT US
ABOUT US
Privacy Policy
Disclaimer
வெள்ளி, 20 டிசம்பர், 2019
இயற்கை
மலைக்குப் போர்வை போர்த்தி விட்டது மேகம்
தாலாட்டுகின்றது மழை
வியாழன், 19 டிசம்பர், 2019
காலம்
ஒரு சில நேரங்களில்
ஒரு சில தருணங்களில்
எதிரி நண்பனாகவும்
நண்பண் எதிரியாகவும்
மாற்றிவிடும்
பெண்
மகளிருக்குத் தாய்மை ஒரு பொன்விலங்கு.
விலை பேசாதே
வரதட்சணை
என்ற பெயரில்
பெண்களை
விலைபேசி
விற்பதை நிறுத்திவிட்ட
அற்புத பூமி வேண்டும்
புதன், 18 டிசம்பர், 2019
படித்ததில் பிடித்தது
"பருத்த தேங்காயைத் திருகிப் பிட்டு செய்து
பகற்படத்தை உருவாக்கி
திருத்தமாகவே தின்றால்
இருவேளை வயிற்று வலி
தீருமென்றே கும்மி அடியுங்கடி "
உள்ளுக்குள் புதையல்
நமக்குள் இருக்கும் சுரங்கங்கள் அற்புதமானவை. அவற்றை அன்பெனும் விளக்கு கொண்டு, கனியெனும் கைச்சுடர் கொண்டு, பணிவென்னும் பார்வை கொண்டு தேடினால் அவை புலப்படும். நம் வாழ்வு திடப்படும்
வெற்றி வாிகள்
இந்த நிமிடத்தில் வாழ்க்கை எவ்வளவு
கடினமாக வேண்டுமானாலும் தொியலாம்
ஆனால் செய்வதற்கும் வெல்வதற்கும்
ஒவ்வொரு நொடியும் ஏதேனும் ஒன்று
இருந்து கொண்டேதான் இருக்கிறது.
-ஸ்டீபன் ஹாக்கிங்.
இணையதளம்
பொருள் தேடி சென்றவரையும்
கரை தாண்டி சென்றவரையும்
கப்பலில் கடப்பவரையும்
விண்வெளியில் மிதப்பவரையும்
வீட்டினிலே இணைக்கும்
இன்பத்தினை சுமக்கும் தளமே
இணையதளம்
செவ்வாய், 17 டிசம்பர், 2019
கலாம் பொன்மொழி
லட்சியத்துடன் வாழவேண்டும்
உயரப் பறந்துகொண்டே இருக்கவேண்டும்
அதனையே இலட்சியமாகக் கொள்ளவேண்டும்
உளியின் வலி
உளியின் வலியாலே
உயிா்த்தெழுந்தன
உயிா் சிற்பங்கள்
அட்டமாசித்திகள்
1.அணிமா
2.மகிமா
3.லகிமா
4.கரிமா
5.பிராத்தி
6.பிரகாமியம்
7.ஈசாத்துவம்
8.வசித்துவம்
குடும்பப் பெண்
சிறு பெண்ணைச் சிறைபிடித்துத்
தாலி என்ற விலங்கிட்டு
சமையலறையில் சிறை வைத்து
வேலையென்ற தண்டனைகள்
விஷ நாக்கு சவுக்கடிகள்
புறமும் - அரிசியும்
ஊன்சோறு
கொழுன்சோறு
நெய்சோறு
புளிசோறு
பால்சோறு
வெண்சோறு
உளுத்தண்சோறு
இவை புறநானுற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன .
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)