ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

தமிழின் தொன்மையும் சிறப்பும்

 
  "வானம் அளந்ததனைத்தும் அளந்திடும் வன்மொழி" 
என்று பாரதியாரால் போற்றப்பட்ட தமிழ்மொழி மனிதன் முதன் முதலில் பேசிய பழம்பெரும் மொழிகளில் ஒன்றாகும்.
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்    விண்ணோடும் உடுக்க ளோடும்         பொங்குகடல் இவற்றோடும் பிறந்ததமிழ் என்று பாரதிதாசன் 
பாடுகின்றாரென்றால்அதற்குத் தமிழ் மிகத் தொன்மையானது என்ற கருத்துபரவலாக மேலோங்கி இருப்பதே காரணம்.
அகச் சான்றுகள்:
      கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
      முன்தோன்றிய மூத்த குடி.
என்று புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியரும்,
      சேர சோழப் பாண்டியர் போலப் படைப்புக்காலந்தொட்டு
      மேம்பட்டு வரும் குடி
எனப் பரிமேலழகரும் கூறுவன தமிழ்க்குடி மக்களின்               தொன்மையைப் பறைசாற்றும்இவ்வாறு பல சான்றோர்கள் தமிழின் தொன்மையை வலியுறுத்தி வருகின்றனர்.தொன்மைக் காலத்து     வாழ்ந்த தொல்காப்பியரே தமிழைத் ‘தொன் மொழி’ எனக் கூறுவதை நோக்குங்கால் தமிழின் பழமையை நாம் உணர முடிகிறது.

தொன்மைச் சான்றுகள்:
                                  உலகத் தோற்றத்தின் போதுசிவபெருமானின்             உடுக்கையிலிருந்து ஒரு புறம் தமிழும்மறுபுறம்                 வடமொழியும்  தோன்றின என்று தொன்மத்தார் கூறுவார்.             இச்செய்தியினையே,
     ஆதிசிவன் பெற்று விட்டான் – என்னை
என்று தமிழன்னை கூறுவதாக பாரதியார் வழிமொழிகின்றார்.

வடமொழிச்சான்று:
     ஒரு காலத்தில் இந்தியாவின் இலக்கிய மொழிகளாக இருந்தவை தென்தமிழும்வடமொழியாகிய சமஸ்கிருமும் ஆகிய   இரண்டு மட்டுமே.
கி.மு.ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன் ஆக்கப்பட்ட வால்மீகி            இராமாயணத்தில்வானரவீரர்களைப் பார்த்து சுக்ரீவன்,"பொன்னும் முத்துமுடைய பாண்டியனது பொன்மயான கபாடத்தை பார்ப்பீர்கள்என்று கூறுவதும்அனுமன் அசோகவனத்தில் சீதையிடம்             அரக்கர்க்குத் தெரிந்த வட மொழியை விடுத்து மதுரமான தமிழில்      உரையாடினான் எனக் கூறுவதும் இராமாயண செல்வாக்குப்           பெற்ற மொழி தமிழ் என்பதனைத் தெளிவிக்கின்றன.

திராவிட மொழியிற் சான்று:
         திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழி தமிழ் என்றும்
தொல் திராவிட வடிவங்கள் பெரும்பாலும் தமிழோடு ஒத்துள்ளன 
என்றும்மொழியியலாளர் கருதுவர்.
        கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
        உன்னுதரத்து உதித்தெழுந்தே ஒன்றுபல ஆய்டினும்.
என்ற பேராசிரியர் சுந்நரம்பிள்ளையின் கூற்று திராவிட மொழிகளின் தாய் தமிழே என வலியுறுத்தும்.
        ஒரு மொழிக் குடும்பத்தின் தாயாகவும்பரந்துபட்ட இந்தியாவின் அடிப்படை மொழியாகவும் தமிழ் விளங்குதலால்அது தொன்மை 
வாய்ந்த மொழி என்பதில் ஐயமில்லை.

தொல்பொருள் ஆய்வுச்சான்று:
        சிந்து சமவெளியில் புதையுண்ட மொகஞ்சதாராஅரப்பா
 நகரங்களில் தமிழ் முத்திரைகள் காணப்படுகின்றன என 
ஈராசு பாதிரியார் கருதுகிறார்.
இந்தியாவின் முதன்மொழி தமிழ் என்பதும் , அது காலப்போக்கில் 
மேற்கு ஆசிய நாகரிக நாடுகளிடையே பரவி மாற்றமுற்றது என்பதும் தெளிவாகிறன.

புவியியற் சான்று:
        "இலெமூரியாவே பழைய தமிழகம்" என்பார்
மாணிக்கவேலுநாயக்கர்தண்டகாரிணியத்துக்கும் 
கடலுக்குமிடையே ஆதி மாந்தர் தோற்றம் உண்டாயிற்று என்றும்  
பி.டி.சீனிவாச ஐயங்கார் கூறுவதிலிருந்துதமிழினத்தின் தொன்மையையும் தமிழின் தொன்மையும் உணர முடிகிறதுஎனவே தமிழ் நாகரிகம்ஏனைய நாகரிகங்களினும் தொன்மையானது என்பதும்
அத்தொல் பழங்காலத்திலேயே தமிழ் செந்தமிழ்கொடுந்தமிழ் என 
இரு பிரிவாகப் பரந்து விரிந்து இருந்தது என்பதும் புலனாகின்றன.

கல்வெட்டுச் சான்று:
 கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து செதுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் தமிழின் வரிவடிவம் காணப்படுகிறது.இப்பழைமை எழுத்து முறைக்கு தென் பிராமி என்று கூறிவட மொழிக்கு உரியதாக்க முனைந்தனர்இப்போது ஆய்வு வல்லுநர்கள் பிராமி எழுத்துமுறையை தமிழருடையது எனவே கருதுகின்றனர்.இதனால் தமிழ்நாடு
 தொல்பொருள் ஆராய்ச்சித் துறையும் தென் பிராமி என்றதை 
இன்று"தமிழி" என்றே குறிப்பிடுகின்றது. 3000ஆண்டுகட்கு முன்னைய தொல்காப்பியத்தில் வரிவடிவங்கள் 
செய்திகள் விரிவாக இருப்பதும்சிந்து சமவெளியின் முத்திரை 
எழுத்துதமிழ் எழுத்துக்களே என ஈராசு பாதிரியார் தெரிவிப்பதும்
தமிழ்மொழியின் வரிவடிவ எழுத்துத் தொன்மையை 
நிலை நாட்டுவன ஆகும்.

அயல்நாட்டுச் சான்று:
         சீனம் மலேசியா சாவா போன்ற கீழை நாடுகளோடு தமிழர் 
பழங்காலத்தில் கடல்வழித் தொடர்பு கொண்டிருந்தனர்.சுமேரிய 
மொழிக்கு தமிழோடு தொடர்புடையதுஐரோப்பிய மொழிக்கும் 
தமிழுக்கும் பழைய தொடர்பு உண்டு.இவ்வாறு எல்லா மொழிக்கும்அடிப்படையில் தமிழோடு தொடர்பு காணப்படுகின்றது என்பார் 
.சி.கந்தையாபிள்ளை.

சிறப்பு:
        மாந்த நாகரிக வளர்ச்சியின் முதற்படிதமிழ் என்றும்அஃது 
உலகின் முதற்றாய் மொழி என்றும் தமிழின் தொன்மையைப்
 பற்றிக் கூறுவனவெல்லாம்ஒருவகையில் தமிழின் 
தனிச்சிறப்பை பறைசாற்றுவனவேயாகும்.

இனிமை:
        எல்லா இனங்களும் சீர்மை பெற்றுத் திகழுமாறு தமிழ் என்னும் சொல்லே இனிமை எனப் பொருளுடையது எனபர்.
        இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்
என்று பிங்கல நிகண்டு இயம்பும்.

பாராட்டு:
        தன்னேரி லாத தமிழ்
என்றும்,ஒண்டமிழ்வான்றமிழ்தேன்றமிழ்பைந்தமிழ் என்றும் பலவாறு பாராட்டும் தமிழ்ப் புலவர்களேயன்றிப் பிற நாட்டாரும் நற்றமிழின்  ஏற்றத்தைப் போற்றிப் பரவியுள்ளனர்.
        தமிழே மிகவும் பண்பட்ட மொழி
என்றும் கூறுவர்.

வழக்கிறாமை:
                 உலகின் மிகப் பழைய மொழிகளில் இன்றும் பேச்சு வழக்கில் நின்று நிலவிவரும் மொழிதமிழ் ஒன்றே.இலக்கிய வழக்கு பேச்சு வழக்கு என்னும் இருவகை வழக்கிலும் தொடர்ந்து பரவலாக நிலைப்பெற்று வாழ்ந்து வருகிறது.

சொல்வளம்:
        எண்ணற்ற வேர்ச் சொற்களால் புதிய புதிய சொற்களை ஆக்கிக் 
கொள்ளும் திறன் படைத்ததுதமிழ்.
எண்கள்:
        ஒன்றுஇரண்டு எனப் பத்துவரை எண்ணும் பதின்கூற்று
 எண்மானம் தமிழருடையது.
        பதின்கூற்று எண்மானம் உலகுக்குத் தமிழ் ஈந்த தனிக்கொடை.

எழுத்து-வகையும் வரிசையும்
        தமிழின் எழுத்து வகைப்படும் வரிசை முறையும்மொழியியலாரையும் வியக்க வைப்பன.ஆங்கிலம் போன்ற ஆரிய மொழிகளிலும்பிறமொழிகளிலும் இச்சிறப்புகளைக் காண இயலாது.

இலக்கிய இலக்கணங்கள் :
           திருக்குறள் முதலிய நீதி நூல்களும் உலக அறிஞர்களால் 
முதன்மை நூலாகப் போற்றப்படுகிறது.
        கம்பனைப் போல் வள்ளுவன்போல் இளங்கோ வைப்போல்
        பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை.
என்ற பாரதியின் மொழி பொய்யன்றுமெய்ம்மையானது.

எழுத்து வடிவம்:
        வட்டெழுத்துகண்ணெழுத்துகோல் எழுத்து,கிரந்த எழுத்து என்று பல்வேறு வடிவங்களைத் தமிழ் அவ்வப்போது பெற்றுத் திகழ்கிறது.தமிழ் ஏறத்தாழ 5000 ஆண்டுகட்கு முன்பேயே வரிவடிவம் 
பெற்றுவிட்டது.

தனித்தமிழ்:
        தமிழ்பிறமொழிக் கலப்பின்றி இயங்கும் திறனுடையது.தனித்தமிழ்ச் சொற்களையும்தனக்கே உரிய தொடர் அமைப்புகளையும் பெற்றுப் பீடுநடைபோட்டு வரும் தமிழில்வெண்பா ஆசிரியம் போன்ற செய்யுள் வடிவங்களும் தமிழுக்கே உரியனவாய் உள்ளன.
தமிழே உலகின் முதற்றாய் மொழி என்பதற்குக் கலப்பற்ற தனித் 
தமிழே சான்றாகிறது.
        இவ்வாறு தமிழ் மொழி மிகவும் தொன்மையையும்சிறப்புகளையும் பெற்று திகழ்கிறது.
       

100 = 1000


அன்பான தமிழ் உறவுகளே வணக்கம்.

1000 இடுகைகள் எழுதியவுடன் எனக்குள் ஒரு இலக்குவைத்துக்கொண்டேன். சமூகத்தளங்களில் ஆங்கிலத்தில் எழுதும் பலரையும் தமிழில் எழுதவைக்கவேண்டும் என்பதுதான் அது. அதனால் பல கல்லூரிகளுக்கும் சென்று தமிழ்த்தட்டச்சு பற்றியும், தமிழில் வலைப்பதிவு எழுதுதல், விக்கிப்பீடியாவில் எழுதுதல் குறித்தும் உரையாற்றி வருகிறேன். தமிழ் இணையப்பல்கலைகழகத்தின் அறிவுறுத்தலுக்கிணங்கி எங்கள் கல்லூரியில் கணித்தமிழ்ப் பேரவை ஒன்றை ஆரம்பித்துள்ளோம். அதில் எங்கள் மாணவிகளுக்கு,

தமிழ்தட்டச்சுப் பயிற்சி, வலைப்பதிவில் தமிழ் எழுதுதல், விக்கிப்பீடியாவில் எழுதுதல், குறுஞ்செயலி உருவாக்கம், உள்ளிட்ட பயிற்சிகளை அளித்துவருகிறேன். கணித்தமிழ்ப் பேரவையின் உறுப்பினர்களாக விண்ணப்பித்திருந்த 100 மாணவிகளுள் முதல்கட்டமாக 50 மாணவிகளுக்கு மட்டும் இந்தப் பயிற்சி வழங்கிவருகிறேன். இந்த 50 மாணவிகளும் எங்கள் கல்லூரியின் வலைப்பதிவில் எழுதிவருகிறார்கள். இவா்கள் கடந்த 3 மாதங்களில் 100 இடுகைகள் எழுதியிருக்கிறார்கள். நான் எழுதிய 1000 இடுகைகளைவிட மதிப்புடையனவாக இந்த 100 இடுகைகளைக் கருதுகிறேன். ஏனென்றால் இந்த மாணவிகள் வெவ்வேறு துறை சார்ந்தவா்கள், சமூகத்தளங்களில் பெண் படைப்பாளிகள் ஆண்களுடன் ஒப்பிடும் அளவுக்கு இல்லாத இந்த நிலையில் இப்படி பெண் படைப்பாளிகளாக இம்மாணவிகள் தமிழ் எழுதுவது பெரிதென்று கருதுகிறேன். வலைப்பதிவில் நன்கு எழுதும் பயிற்சி பெற்ற இவா்கள் புதிய மாணவிகளுக்குப் பயிற்சி அளிப்பதுடன் தற்போது விக்கிப்பீடியாவில் எழுதும் பயிற்சி பெற்று வருகிறார்கள். கல்லூரியின் வலைப்பதிவில் சிறப்பாக எழுதிய மாணவிகளை கல்லூரி வலைப்பதிவின் ஆசிரியராக்குவதுடன் எனது வலையில் சிறப்பு விருந்தினராக தமது வலையை அறிமுகம் செய்யும் வாய்ப்பையும் வழங்கவுள்ளேன்.

எங்கள் வலையில் எழுதும் மாணவிகளின் படைப்புகளை பலரும் மறுமொழிகளால் ஊக்குவித்து வருகின்றனா். குறிப்பாக எங்கள் கல்லூரியின் ஆண்டுவிழாவுக்கு சிறப்பு சொற்பொழிவாளராக வந்த கவிஞர் முத்துநிலவன் ஐயா அவா்கள் எங்கள் வலைப்பதிவில் தொடர்ந்து எழுதிவரும் செ.வைசாலி என்ற வணிகவியல் முதலாமாண்டு மாணவியைப் பாராட்டி நூல் வழங்கி சிறப்பித்தார். எங்கள் கல்லூரியின் ஆண்டுவிழாவில் கணித்தமிழ்ப் பேரவையின் சிறந்த செயல்பாட்டுக்காகப் பாராட்டி இம்மாணவிக்கு கணித்தமிழ்ப் பேரவையின் சிறந்த மாணவி என்ற விருதும் வழங்கி எங்கள் முதல்வர் ஊக்குவித்தார்.

மேலும் வாசிக்க...

உலக தாய்மொழிகள் தினம்



உயர்தனிச்செம்மொழி தமிழ்

ஞால முதல் மொழி, திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி, பழமையான சிறந்த இலக்கியச் செல்வங்களைக் கொண்ட மொழி, இன்று வரை வழக்கில் உள்ள மொழி எனப் பல்வேறு சிறப்புக்களையும் கொண்ட மொழி தமிழ். இம்மொழிக்குச் “செம்மொழி” என்னும் தகுதி கிடைத்ததில் வியப்பொன்றுமில்லை. எனினும் எந்த அடிப்படையில் அத்தகுதியைத் தமிழுக்கு வழங்கியுள்ளார்கள் என்பதில் தான் சிக்கல் உள்ளது. தமிழ் 1500 ஆண்டு காலம் பழமையானது என்ற அறிவிப்பு தமிழர்களால் ஏற்றுக்கொள்ள இயலாததாகவே உள்ளது. இந்நிலையில் தமிழ் உயர்தனிச் செம்மொழி என்பதை இரு நிலைகளில் இக்கட்டுரை மெய்ப்பிக்கிறது.
1. இதுவரை நாம் வகுத்துள்ள செம்மொழிக்கான தகுதிகளோடு ஒப்பு நோக்கி தமிழின் தன்னிகரற்ற தன்மையைக் கூறி தமிழ் 

“ உயர்தனிச் செம்மொழி “ என்பதை இயம்புதல்.
2. நம் செயல்பாடுகளால் தமிழ் தனிமைப்படுத்தப்பட்ட 
(உயர்-தனி-செம்மொழி) மொழியாக ஆகும் நிலையை இயம்பி நாம் செய்யவேண்டிய பணிகளைக் கூறுதல். 

I செவ்வியல் – செம்மொழி விளக்கம்.
இவ்விரு சொற்களும் மொழியின் பழமை உள்ளிட்ட பல்வேறு கூறுகளைக் குறிப்பதாகத் தமிழறிஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இச்சொற்களில் எது சிறந்தது என நோக்கினால் 

“ செம்மொழி “ என்ற சொல்லே முன்னிற்கிறது. செம்மையானது என்ற பொருளில் செம்மொழி பயின்று வருகிறது.
“ செம்மொழி எனும்போது ஏற்படும் பொருளாழம் செவ்வியல் எனும்போது ஏற்படுவதில்லை. கிளாசிக்கல் என்னும் ஆங்கிலச் சொல்லுக்குப் பொருளாகச் செவ்வியல் காணப்பட்டது என்று குறிப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. இஃது ஆங்கிலத்தை ஒட்டியே சிந்திக்கும் போக்கைக் காட்டுவதாகவுள்ளது. “1 

செவ்வி என்பதற்கு காலம், சமயம், தருணம் போன்ற பொருள்களே உள்ளன. மொழி ஞாயிறு. தேவநேயப் பாவாணர், பரிதிமாற்கலைஞர் உள்ளிட்ட சான்றோர்கள் பலரும் செம்மொழி என்னும் சொல்லையே பயன்படுத்தியுள்ளனர். செம்மொழி என்னும் போது தோன்றும் பொருளாழம் செவ்வியல் எனும்போது தோன்றுவதில்லை. எனவே செம்மொழி என அழைப்பதே சாலச் சிறந்ததாகும். 
செம்மொழியின் தகுதிகள்
இன்றுவரை உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட செம்மொழிகளின் பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை. செம்மொழிக்கான தகுதிகள் பலவாறாக வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் மூன்றுவிதமான வகைப்பாடுகள் குறிப்பிடத்தக்கனவாக விளங்குகின்றன. 


1.வல்லுநர் குழு சொல்லும் தகுதிகள்.
செம்மொழி என்னும் தகுதி வழங்கும் வல்லுநர் குழுவினர், செம்மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கிரேக்கம், இலத்தீன், வடமொழி ஆகிய மொழிகளின் தகுதிகளைத் தமிழ் மொழியோடு ஒப்புநோக்கி சில வரையறைகளைச் செய்துள்ளனர். அதனைக் கீழ்க்கண்டவாறு காணலாம்.

அ.மிகப்பழமையான நூல்களை அதாவது 1500 முதல் 2000 ஆண்டுகள் வரை நூல்கள் பதிவுபெற்ற 
ஆ.அம்மொழியைப் பயன்படுத்தும் பல தலைமுறையினரின் அரிய பண்பாட்டுப் பாரம்பரியம் உடையதாகக் கருதும் இலக்கிய 
இ.அம்மொழிக்கே உரியதாகவும் ,மற்ற மொழிக் குடும்பத்தினரிடமிருந்து கடன்பெறாததுமான இலக்கியப் பாரம்பரியம்.

ஆகியன செம்மொழியின் தகுதிகள் என வல்லுநர் குழுவினர் வரையறை செய்துள்ளனர். இவ்வரையறைகளுக்கும் மேலாக சிறப்புகளைப் பெற்றுத் தன்னிகரற்று விளங்கும் தமிழ்மொழியை இவ்வரையறைகளுக்குள் அடக்குவதால் தமிழின் பழமையை முழுமையாக மதிப்பிட இயலாத நிலை ஏற்படுகிறது.

2.செம்மைப் பண்பு- 11 .

செம்மொழி்க்கு இருக்கவேண்டிய அடிப்படைப் பண்புகளாக 11 பண்புகள் வரையறை செய்யப்படுகின்றன.இப்பண்புகளையே மொழிகளுக்குப் புகுத்திப் பார்த்து மொழியின் செம்மைப் பண்புகளை அறிந்து வருகிறோம்.அவை,

1.தொன்மை
2.தனித்தன்மை 
3.பொதுமைப் பண்பு
4.நடுவுநிலைமை
5.தாய்மைப் பண்பு
6.பண்பாட்டுக் கலையறிவு பட்டறிவு வெளிப்பாடு
7.பிறமொழித் தாக்கமில்லாப் பண்பு
8.இலக்கிய வளம்
9.உயர் சிந்தனை
10.கலை இலக்கியத் தனித்தன்மை
11.மொழிக் கோட்பாடு.
ஆகியன செம்மொழியின் பண்புகளாகும். இப்பண்புகள், இலத்தீன், ஈப்ரூ, கிரேக்கம், சீனம், ஸ்பானியம், அரபி, வடமொழி ஆகிய செம்மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழிகளின் பண்புகளாகும். மேற்காணும் மொழிகளில் பல வழக்கொழிந்து காணப்படுகின்றன.இம்மொழிகளின் தகுதிகளை தமிழோடு பொருத்திப் பார்ப்பது என்பது சரியான மதி்ப்பீடாக இருக்காது. இதனை,

“தொல்காப்பியம் காலத்தில் – மெசபடோமியவில் அரபி பாறை எழுத்துகளாக இருந்தது. சீனமொழியில் அப்பொழுது தான் சிஜிங் கவிதைத் தொகுதி இயற்றப்பட்டது. பிரஞ்சு மொழியான கெல்டிக் மொழி வெறும் பேச்சு மொழியாக இருந்தது. இலத்தீன் மொழியில் ஒடிசி மொழி பெயர்க்கப்படுகிறது. ஸ்பானியம் பேச்சு மொழியாக இருந்தது. ஜெர்மன் மொழி அப்போது இல்லை. இதுவே பன்னாட்டு அளவில் மொழி வழக்கிலிருந்த செயல்பாடுகளாகும்.“2 என்பார் கே.எஸ்.இராதாகிருட்டிணன். இக்கருத்து தமிழின் தன்னிகரற்ற தன்மையை எடுத்துரைப்பதாகவுள்ளது. தொல்காப்பியத்தை நன்கு நோக்கும் போது அதில் நம் தமிழரின் பல்லாண்டு கால அனுபவத்தைக் காணமுடிகிறது. தமிழுக்குப் பின் தோன்றி இன்று வழக்கொழிந்த நிலையிலும் இன்று சில மொழிகள் செம்மொழிகள் பட்டியலில் உள்ளன. அம்மொழிகளோடு தமிழை ஒப்புநோக்கும்போது தமிழின் தனித்தன்மை விளங்குகிறது.இதனை,

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வங்கமொழியில் காவியம் என்ற அங்கமே இல்லை.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலம் அழுக்குத் தீரக் குளிக்கவேயில்லை
பல மொழிகளுக்குச் சில நூற்றாண்டுகள் வரை சொந்தமாக லிபிகள் இல்லை
ஆனால் உலகத்தில் விரல் விட்டுச் சொல்லக்கூடிய மொழிகளில் குரல் விட்டுச் சொல்லக்கூடியது தமிழ்.
 ஊர்ச்சொற்கள் அனைத்திலும் வேர்ச்சொற்கள் வைத்திருப்பது தமிழ்“3 

என உரைக்கிறார் கவிஞர்.வைரமுத்து. இவ்வாறு தனித்தன்மை கொண்ட மொழியாகத் தமிழ் மொழி விளங்குகிறது. 
3.பாவாணர் சுட்டும் 16 செம்மைப் பண்புகள்.

மொழி ஞாயிறு பாவாணர் தம் வாழ்நாளில் பல மொழிகளையும் கற்றறிந்து தமிழ் மொழியின் சிறப்பை வேர்ச்சொல் ஆய்வு வாயிலாக எடுத்தியம்பியவர்.தமிழின் செம்மைப் பண்புகளாக,
“1.தொன்மை.
2.முன்மை.
3.எண்மை(எளிமை).
4.ஒண்மை.(ஒளிமை).
5.இளமை
6.வளமை.
7.தாய்மை.
8.தூய்மை.
9.செம்மை.
10.மும்மை.
11.இனிமை.
12.தனிமை.
13.பெருமை.
14.திருமை.
15.இயன்மை.
16.வியன்மை. “4
ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார்.மேலும் இச்சிறப்புக்களை ஒருங்கே உடையது தமிழே ஆகும் என உரைக்கிறார். 
உயர்தனிச் செம்மைப் பண்பு

ஞாலத்தில் தோன்றிய மாந்தர்கள் முதலில் பேசிய மொழி தமிழ் . இதனை, 

 வைய மீன்ற தொன்மக்கள் உளத்தினைக் 
கையினா லுரை காலம் இரிந்திடப்
பைய நாவை அசைத்த பசுந்தமிழ்
ஐயை தாள் தலைக் கொண்டு பணிகுவாம்
” 
என உரைக்கிறார் தஞ்சைப் பெரும்புலவர்.நீ. கந்தசாமி அவர்கள்.

பிற மொழிகளைக் காட்டிலும் தமிழ் தனிச் சிறப்புடன் உயர்ந்த பண்புகளைக் கொண்டு விளங்குகிறது. இதனைப் பல சான்றுகள் வாயிலாகக் கூறலாம். தொல்காப்பியம், சங்க இலக்கியம் ஆகியன நம் பழமைக்கும் பெருமைக்கும் மிகப் பெரிய சான்றுகளாகத் திகழ்கின்றன.இதனை,

“இந்தியாவின் இரண்டு செம்மொழிகளில் தமிழ் மட்டுமே செம்மொழித் தரம் சேர் பழமையோடு துண்டிக்கப்படாத தொடர்புடையது.“5 என்பர் ஏ.கே.இராமானுசம் அவர்கள்.(Tamil, one of the two classical Languages a of India , is the only Language Of contemporary India which is recongnizable continous whith Classical past ) 

கமில் சுவலபில் தமிழின் தனிச்சிறப்பினை,“முதலாவதாக சங்க இலக்கியம், தமிழர்களாலும் வரலாற்று ஆசிரியர்களாலும் திறனாய்வாளர்களாலும் மற்றும் அறிவு ஜீவிகளான வாசகர்களாலும் செந்தமிழ் தரம் சேர்ந்ததாக நம் தேசிய இலக்கியங்களுக்கு ஒத்த தகுதி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.“6 (first Of all , the so called cangam poetry is regarded by the professional historigraphers and critics , as well as by intellectual readers , as classical in the sense in which we regard some parts of our national literatures as classical)

இக்கருத்துக்கள் யாவும் தமிழ் தனிச்சிறப்பு வாய்ந்த மொழி, “உயர்தனிச் செம்மொழி” என்பதை இயம்புவனவாகவே உள்ளன. 

உயர் – தனி – செம்மொழி

தமிழ் உயர்ந்த மொழி , செம்மையான மொழி ஆயினும் தனிப்பட்ட மொழியாக தமிழகத்தில், தமிழர்களிடம் கூட வழங்கப்படுவது வெட்கக் கேடாகவுள்ளது. நம் மொழியை நாமே தனிமைப்படுத்துவது ஒரு நிலை, பிற மொழி சார்ந்தோர் தனிமைப்படுத்துவது இன்னொரு நிலை. என இரு நிலைகளில் நம் மொழி தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனை, 
“ தமிழை வளரவிடாமல் பார்த்துக்கொள்ள தமிழர்கள் இரண்டு கத்தி வைத்திருக்கிறார்கள். 

தொல்காப்பியத்தோடு தமிழ் முடிந்துவிட்டது, அல்லது திருக்குறளோடு தீர்ந்துவிட்டது என்பவர்களின் கையில் துருப்பிடித்த கத்தி.

தமிழில் என்ன இருக்கிறது ....... விஞ்ஞானம் மனிதனுக்கு இறக்கைகள் தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது தமிழென்னும் தள்ளு வண்டியால் யாது பயன் என்று சலித்துக் கொள்கிறவர்களின் கையில் சாணை பிடித்த கத்தி.

இந்த இரண்டு கத்திகளுமே பயங்கரமானவை. பறிமுதல் செய்யப்படவேண்டியவை.7 என்கிறார் கவிஞர்.வைரமுத்து. 
இயல், இசை, நாடகத்தோடு தமிழ் முடிந்துவிட்டது என்போரும், அறிவியல் தமிழ் மட்டும் தான் காலத்தின் தேவை என்போரும் தமிழைத் தனிமைப்படுத்தி வருகின்றனர்.

காலத்தின் தேவையை உணரவேண்டும். வளர்ந்த மொழிகள் யாவும் அறிவியல்த் துறைகளைத் தம் தாய்மொழியிலேயே பயிலும் நிலை உள்ளது. ஆனால் நாம் இப்போது தான் அதன் தேவையையே உணர்ந்துள்ளோம். தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம கலைச் சொற்களைத் தொகுத்துள்ளது. மருத்துவம், பொறியியல், கணினி உள்ளிட்ட அறிவியல்த் துறைகளைத் தமிழில் படிக்கும் அளவுக்கு நாம் வளர்ந்துள்ளோம்.எனினும் அறிவியல்த் துறைகளைத் தாய்மொழியில் படிப்பதில் இன்னும் சிக்கல் நிலவுகிறது. இந்நிலையில் நம் பழமை மரபுகளைக் கருத்தில் கொண்டு அறிவியல்த் தமிழின் தேவையையும் உணரவேண்டும். இதனை,

“ ஒரு சமுதாயம் இன்றைய பணிகளை, இன்றைய கருவி கொண்டு செய்யவேண்டும்.இன்றைய பணியை நேற்றைய கருவி கொண்டு செய்யும் இனத்தின் நாளைய வாழ்வு நலியும்.இது தவிர்க்கமுடியாதது“.8 என்பர் வ.செ.குழந்தைசாமி. எனவே உலக மொழிகள் யாவற்றைவிடவும் பல்வேறு சிறப்புக்களைக் கொண்ட நம் தமிழ்மொழி தனிமைப்படவோ, தனிமைப்படுத்தப்படவோ நாம் காரணமாக இருக்கக் கூடாது. 

நிறைவுரை 

செம்மொழி என்பதற்கான தகுதிகளே இன்றுவரை முழுமையாக வரையறை செய்யப்படவில்லை. எனினும், இதுவரை செய்யப்பட்ட தகுதிகள் முழுவதும் பொருந்தி, அதற்கு மேலும் தகுதிகளைக் கொண்ட ஒரே மொழி தமிழ் ஆகும்.அதனால் தமிழை “உயர்தனிச் செம்மொழி“ என அழைப்பதே சாலச் சிறந்ததாகும். 
பிற செம்மொழிகளை விட தமிழ்மொழிக்கு உள்ள சிறப்பான தகுதிகளை ஆதாரங்களுடன் பட்டியலிட்டு செம்மைத் தகுதிகளை வரையறை செய்யவேண்டும். 
தமிழின் செம்மைப் பண்பையே செம்மொழித் தகுதிக்கான அளவீடாகக் கொள்ளவேண்டும். பிற செம்மொழிகளின் தகுதிகளைத் தமிழுக்குப் பொருத்திப் பார்ப்பது சரியாக மதிப்பிட இயலாத சூழலை உருவாக்கும். 
தாய்மொழிக் கல்வியின் தேவையை நாம் உணரவேண்டும். தாய்மொழி வழியே எல்லா அறிவியல்த் துறைகளையும் படிக்கும் நிலை வரவேண்டும். 
பல்வேறு மொழித்தாக்கங்களைக் கடந்து செம்மாந்து நிற்பது நம் தமிழ் மொழி.இம்மொழி பிற மொழிகளின் துணையின்றித் தனித்து இயங்கவல்லது என்பதையும் நாம் உணரவேண்டும். 
நம் மொழியை நாமே தள்ளிவைத்தால் கால வெள்ளத்தில் வழக்கொழிந்த மொழிகளின் பட்டியலில் தமிழும் இடம்பெறும் நிலை ஏற்படும்.அப்போது தமிழ் “உயர்- தனி-செம்மொழி“ என அழைக்கப்படும் நிலை ஏற்படும் என்பதை யாவரும் அறியவேண்டும். 

சான்றெண் விளக்கம்.
1.மலையமான்- செவ்வியல் மொழி தமிழ் – ப -4.

2.தினமணி – தலையங்கம் – ( 15.12.2007)

3.வைரமுத்து – இதனால் சகலமானவர்களுக்கும் – ப- 31

4.ஞா.தேவநேயப் பாவாணர்- தமிழ் வரலாறு – முகவுரை

5.ak.Ramanujan – the interior landscape (1967)p-11

6.k.zuvelebil , the smil of murugan – p -49.

7.வைரமுத்து – இதனால் சகலமானவர்களுக்கும் – ப -29

8.வா.செ.குழந்தைசாமி- அறிவியல்தமிழ்- ப- 72
தாய்மொழியைப் போற்றுவோம்..

சனி, 20 பிப்ரவரி, 2016

பேசாதிருப்பதனால்..!!


நான் பேசாதிருப்பதனால் 

ஊமையென்றோ..!!

உணர்ச்சிகளற்றவள் என்றோ

எண்ணிவிட வேண்டாம்.

உங்களைத் திருப்பதியிலாழ்த்தும்

பொய்களைப் பேச

நான் விரும்பவில்லை..!!

நான் அமைதியாக இருப்பதனால்

உங்கள் வாக்குறுதிகளை

நம்பிவிட்டதாக

முடிவுகளுக்கு

தலை சாய்த்து விட்டதாக

கருதிவிட வேண்டாம்..!!

இலாபத்தைப் பார்க்கும் உங்களுக்கு

நியாயத்தைப் பார்க்கும் எனக்கும்

ஒரு போதும் ஒத்துவராது..!!

உங்கள் தீர்மானங்கள் வேறு

என் தேவைகள் வேறு..!!

உள்ளதையெல்லாம்

விலை  பேசுவது

விற்றுச் சம்பாதிப்பது

சந்தை வியாபாரிகளின்

தொழில்..!!

என்னை விட்டு விடுங்கள்

வாழ்வை

உரிமையை

எந்த விலைக்கும்

என்னால் விற்க முடியாது..!!

விசத்தைக் கக்கிய படியே

பார்வைக்கு அழகாய் நெளியும்

பாம்புகள் நீங்கள்..!!

முட்களோடு தான் என்றாலும்

ரோஜாவாக

ஜீவிப்பவள் நான்..!!

Image result for ரோஜா பூ

பண்டைய தமிழர்களின் அறிவியல் கண்டுபிடிப்பு





ஸ்கேன் என்பது வேகமாக சென்று கொண்டிருக்கும் இக்காலத்தில் கண்டுபிடிக்கபட்டது அல்ல.  இது அக்காலத்திலே கண்டுபிடிக்கபட்டது. நட்சத்திரங்கள், பூமி, கிரகங்கள், மரம், செடி, கொடினு அனைத்தையும் அவர்கள் ஸ்கேன் செய்து உள்ளனர். ஆனால் ஸ்கேன் என்று சொன்னாலே இக்காலத்தில்  எல்லோர்க்கும் நினைவு வருவது கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் வளர்ச்சி பற்றி ஆவலுடன் தெரிந்து கொள்வதே. ஆனால் இதனை இன்னும் விரிவாக அக்காலத்தில் எழுதி வைத்துள்ளனர். இந்த தகவல்கள் ’மார்க்கண்டேயே புராணம்’ நூலில் விரிவாகா உள்ளது.

அம்மா வயற்றில்  இருக்கும்  குழந்தைக்கு, இப்பொழுது  வயது 5 நாள் என்று  வைப்போம். இங்கு ஆரம்பித்து, 10-வது மாதத்தில்  குழந்தை பிறக்கும் வரைக்கும் நாள்கள் மற்றும் மாதங்கள் வாரியாக அந்த புராணத்தில் உள்ளது.

ஒரு மாதம் ஆனதும் தலை உண்டாகும். 2-வது  மாதம் ஆனதும் கை, கால்கள் உண்டாகும். 3-வது மாதம் நகம், முடி, எலும்பு, தோல், ஆணா-பெண்ணா என்பதற்கான அடையாளம், காது ஓட்டை, மூக்கு ஓட்டை உண்டாகும். 4-வது மாதம் தோல், ரத்தம், மேதஸ், மஜ்ஜை, சுக்கிலம்  போன்ற ஏழு தாதுக்கள் உண்டாகும். 5-வது மாதம் பசி, தாகம் உண்டாகும். 6-வது மாதம் கர்ப்பப் பையால் சுற்றப்பட்டு, அம்மாவின் வயற்றில் வலப் பக்கமாக ரவுண்டு அடிக்கும்.

7-வது மாதம் அந்த ஜீவனுக்கு ஞானம் கிடைக்கும். அம்மா சாப்பிடும் சாப்பாட்டு பானங்கள் மூலமாக வயற்றில் உள்ள குழந்தை வளர்கிறது. அப்பொழுது வயற்றில் குழந்தையின் தொப்புளில் ‘ஆப்யாயனீ’ என்ற நாடி கட்டப்படுகிறது. அதன் மறுமுனை தாயின் வயற்றில் இருக்கும் குடலின் ஓட்டையில் கட்டப்படுகிறது. இந்த நாடி (தொப்புள் கொடி) மூலமாகவே தாயார் சாப்பிட்டது-குடித்தது என அனைத்தும் கருவில் இருக்கும் குழந்தையின் வயிற்றில் சென்றடையும். அதன் மூலம் குழந்தை வளர்கிறது என்கிறது மார்க்கண்டேயப் புராணம்.


குழந்தையிலிருந்து வெளியேறும் கழிவுகள் அங்கேயே இருப்பதால் மிகவும் மிருதுவாக இருக்கும் அந்த குழந்தை உடம்பை அங்கு இருக்கும் ‘கற புழுக்கள்’ எல்லாம் ஒட்டுமொத்தமாக கடிக்கின்றன. அதை குழந்தையால் தாங்க முடியாமல் சில நேரங்களில் மயக்கமடைகிறது.

அம்மா சாப்பிடுகிற சாப்பாடுட்டில் இருக்கின்ற உப்பு, உறைப்பு, கசப்பு, தித்திப்பு, இவை எல்லாம் அந்த குழந்தையை பாதிக்கிறது. ஒரே வேதனைத்தான். தன்னை சுற்றி கர்ப்பபை. கர்ப்பபையை சுற்றி மாலை மாதிரி குடல், வளைந்த முதுகு-கழுத்து…வயிற்றில் தலையை மடித்து வைத்துகிட்டு குழந்தை அங்கேயே உள்ளது. உடம்பை சிறிதும் அசைக்க முடியவில்லை.  7-வது மாத்தில் அறிவு உண்டாகி அங்கேயும் இங்கேயுமா அலைகின்ற  குழந்தை நடுங்கும். இரண்டு கையையும் கூப்பின மாதிரி இருக்கும். எப்பொழுது வெளியே வருவோம் என்று காத்து கொண்டிருக்கும்.

10-வது மாதம் குழந்தை  வெளிப்பட காரணமாக இருக்கும் காற்று, குழந்தையை தலைகீழாகா வெளியில் தள்ளி விடும். அப்பறம் குழந்தை பிறந்து விட்டது.

இவை எல்லாம் மார்க்கண்டேயே புராணத்தில் கூறியவர், மருத்துவரோ, விஞ்ஞானியோ இல்லை. சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்தவர்.

மார்க்கண்டேயே புராணத்திலும், பாகாவத புராணத்திலும் இதை பற்றி கூறியவர், வியாச பகவான்.

இதன் மூலம் அறிவியல் நமது பண்டைய காலத்திலே இருந்து இருப்பதை காணலாம்.

   

எழில் கொஞ்சும் இயற்கை..!!


Image result for எழில் கொஞ்சும் இயற்கை

காலையில் கண் விழித்தவுடன் புதிதாய் ஒரு பொழிவு!

ஏதோ ஒரு வெளிச்சம் என் கண்களை வருடிச் சென்றது;

கண்துடைத்து வியப்புடன் புதிதாய் மலர்ந்த சூரிய காந்தியோ?

என்று பறிக்க முயன்று ஏமாற்றத்துடன்  திரும்பினால்;

முன்னே உறைக்காற்று சீறிப்பாய பின்னே சிறகடித்து

பறவை கூட்டம் துறத்தி விளையாடி கொண்டிருந்தது;


Image result for இயற்கை பறவைகள்

உடன் நானும் விளையாட மனம் ஏங்கியது!

ஏக்கத்துடன் தலை குனிந்த போது

இளந்தென்றல் காற்று என் மனதிற்கு இனிமை அளித்து

என்னையும் உடன் அழைத்து சென்றது; அங்கே

ஆர்பறித்து வரும் நீர் ஏதோ முணுமுணுத்து

என்னை கடந்து சென்றது; எட்டிப் பார்த்தால்

கண்ணை கவரும் வெண்முத்து!

கையை விட்டு எடுத்தால் தண்ணீர் மட்டுமே வந்தது!



Image result for எழில் கொஞ்சும் இயற்கை

மேலே பார்த்து உண்மையை உணர்ந்தேன்;

கோபத்துடன், என் மனதில் ஒரு கேள்வி!

நீ தான் இயற்கையோ? ஆனால்

எனக்கு செயற்கையை தான் தெரியும் என்றேன்;

அப்போது, பொறுமையாய்,

இயற்கையின்றி செயற்கை உண்டோ?  என்று

நீ சொல்லாமல் சொன்னாய்! நான்

கேட்காமல் உணர்ந்தேன்; திடீரென்று

இனிய குயிலின் குரலோசை என்

செவியை தட்டி எழுப்பியது; அதனால்

நிஜத்தை விட்டு இயற்கையோடு மூழ்கியிருந்த

என் கனவிலிருந்து பிரியா விடைபெற்றேன்!


Image result for இயற்கை பறவைகள்


விவேகானந்தர்-ஒரு சுவாரசியம்



                   விவேகானந்தர்-ஒரு சுவாரசியம்

 
 
 
          ராமகிருஷ்ண பரமஹம்சர், ஒரு முறை விவேகானந்தரை அழைத்து, இது வரை கடும் தியானங்கள் புரிந்து பெற்ற ஆத்ம சக்தியெல்லாம் உனக்கு தந்துவிடலாம் என நினைக்கின்றேன் என்றார்.
   விவேகானந்தர், அப்படியா, இந்த சக்தியெல்லாம் பெற்றால், அவை கடவுளை அறிய எனக்கு துணைபுரியுமா? என்று கேட்டார். பரமஹசரோ புன்னகைத்து.’அவற்றை கொண்டு கடவுளை அறிய இயலாது. ஆனால் நீ ஒரு ஆசானாக மற்றவர்களுக்கு இருக்க அவை துணைபுரியும்என்றார்.

    உடனே விவேகானந்தர், "ஐயா, அப்படியானால் அவை இப்போது எனக்கு தேவைப்படாது, முதலில் கடவுள் யாரேனேக் கண்டறிவதில் கவனம் செலுத்துகிறேன். அவ்வாறு கண்டறிந்தபின், இந்த சக்திகளுக்குத் தேவை இருக்குமா எனத் தெரியும். மேலும்,இப்போது இவைகளை பெற்றுக்கொண்டாலோ, என் தேடலை மறந்துபோய், என் சுயநலத்திற்காக பயன்படுத்திவிடுவேனோ என்னவோ",என்று மறுத்து விட்டார்.