புதன், 17 பிப்ரவரி, 2016

சுவாசத்தின் மறுபக்கம்..!!!



15.12.2015-ல் தொடங்கப்பட்டது எங்கள் கல்லூரி வலைப்பூ.இதன் நோக்கம் கணினி வழியில் தமிழை உலகளவில் பரப்புவதே.நாங்கள் இதற்காக 50 மாணவிகளுக்கு இலவசமாக தமிழ் தட்டச்சு,வலைப்பதிவில் எவ்வாறு தனது சொந்த கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவது மேலும் விக்கிப்பீடியாவிலும் எப்படி எழுதுவது குறித்தும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தமிழில் கட்டுரைகள்,கவிதைகள்,அவரவர் துறையைச் சார்ந்த சிலவற்றை எளிமையாக பகிர்ந்து வருகின்றனர்.மேலும் கல்லூரியின் நடப்புகள் குறித்தும் எழுதபட்டு வருகின்றனர்.

எத்தனையோ  பதிவுகள் அவற்றிக்கு முகந்தெரியாத நல்ல உள்ளம் படைத்தவர்களின் வருகைகள் மற்றும் கருத்துகள் மற்றும் ஊக்கமும் சேர்ந்தே எங்கள் மாணவிகளின் முன்னேற்றம் மற்றும் அவர்களிடையே உள்ள தாய்மொழி குறித்த பற்று இவையெல்லாம் சேர்ந்தே இன்று நாங்கள் தொட்டுவிட்டோம் நூறாவது பதிவை.

ஆம் மூன்று மாதங்கள் சிறிய தூரம் தான் ஆனால் தொட்டுவிட்டோம் நூறாவது பதிவு என்பது பேரின்பமான தருணம்.மாணவிகள் அனைவருமே சிறந்த முறையிலும் மற்றும் பிறருக்கு பயன்பெறும் வகையிலும்  பதிவை எழுத வேண்டும் என்ற வகையில் தேடி தேடி அழகான முறையில் தமிழில் பகிர்ந்து வருகிறார்கள் என்பது மகிழ்ச்சியான ஒன்று.


இந்த முறையிலும் தமிழை வளர்க இயலும் என்று எங்களுக்கு அறிமுகப்படுத்தி இது குறித்து விழிப்புணர்வு அளித்து எங்கள்
 முயற்சிக்கும் முன்னேற்றத்துக்கும் வழிவகுத்தது  என் தமிழ் ஆசிரியர் முனைவர்.இரா.குணசீலன் ஐயா தான்.இந்த கணம் நாங்கள் அனைவரும் அவருக்கு நன்றிகள் பல சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

முனைவர்.இரா.குணசீலன் ஐயா.

குருவிற்கு நிகரில்லை;குருவின்றி நிறைவில்லை; என் குருநாதரே நன்றிகள் பல ஆயிரம்.எங்கள் ஒவ்வொரு முன்னேறவும் தங்களுடையதே குருவே.மாணவிகள் அனைவருக்கும் நன்றிகள் தொடரட்டும் நம் பதிவுகள்..!!








பிரமிக்க வைக்கும் பிரமிடுகள்..!!


நாம் உலகத்தில் பார்க்க வேண்டிய அதிசயங்களில் மிக மிக்கியமான ஒன்று பிரமிடு. உலகில் இருக்கும் ஒவ்வொரு அதிசயமும் விளங்க முடியாத ரகசியத்தைக் கொண்டுள்ளது. பிரமிடுகள் தனக்குள் கொண்டிருக்கும் ரகசியத்திற்கு இன்னும் விடை கிடைக்கவே இல்லை.
பிரமிடுகளில் மிகப் பெரிய பிரமிடான கிசா பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் 9 டன் வரை எடை கொண்டது. இந்தக் கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்; ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது.
தற்கால எகிப்துத் தலைநகர் கெய்ரோவின் புறப் பகுதியில் அமைந்துள்ள கிசா பிரமிடுகள் உலகப் புகழ் பெற்றவை. உலகத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகப் போற்றப்படும் பிரமிடுகள் மிக விந்தையான, இன்னும் முற்றிலுமாக அறிந்து கொள்ளப்படாத செய்திகளை உள்ளடக்கியது. அய்நூறு அடி உயரம் கொண்ட இந்தப் பிரமிடுகள் இரண்டரை டன் எடையுள்ள தனி சுண்ணாம்புப் பாறைக் கற்களால் எழுப்பப்பட்டது.
இவ்வளவு எடை கொண்ட கற்களை அய்நூறு அடி உயரத்திற்குக் கொண்டு சென்ற விந்தையை வரலாற்று நிபுணர்கள் இன்னும் ஆராய்ந்து கொண்டுள்ளனர். சுண்ணாம்புக் கற்களின் மேலடுக்குகள் நன்றாக பாலிஷ் செய்யப்பட்ட பளிங்கு சுண்ணாம்புக் கற்களால் வெளிப்புறம் பதிக்கப்பட்டுள்ளன.
இருபத்தி மூன்று லட்சம் சுண்ணாம்புக் கற்கள் எவ்வாறு அவ்வளவு உயரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன என்பதும், அத்தகைய பாலைவனப் பரப்பில் எவ்வாறு சாத்தியம் என்பதும் ஆய்வில் உள்ள ஒன்று. புற கற்களில் வித்தியாசமான எழுத்துகள் பதிக்கப்பட்டுள்ளன.
இவற்றை மட்டும் பதித்தால் பத்தாயிரம் பக்கங்கள் வரும் என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து. கிசாவில் உள்ள மூன்று பிரமிடுகளும் பிதாகரஸ் என்கிற கணித விதிகளின்படியும், பிரபஞ்சத்தில் உள்ள மூன்று ஓரின நட்சத்திரங்களைக் குறிக்கின்ற துல்லியக் கோட்பாட்டின்படியும் அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


பிரமிடின் உடல்கள் கெடாமல், மாறாக முற்றிலும் உலர்ந்த நிலையில் உள்ளன. இது ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக்குப் பெருந்தீனியாக உள்ளது! இன்னும் முற்றிலுமாக கண்டறியப்படாத உள் அறைகளின் பயன்பாடுகள், குறுக்கும் நெடுக்குமாகச் செல்கின்ற சதுரத் துளைகளின் பயன்பாடுகள் திருட வருபவர்களைக் குழப்புவதற்காக அமைக்கப்பட்ட தந்திரப் பாதைகள்.
இரண்டாயிரத்தி நான்காம் ஆண்டு இத்தகைய சதுரத் துளைகளின் ரகசியங்களை அறிந்து கொள்ள எந்திர மனிதனை (ரோபோட்)உள்ளே செலுத்தி உலகம் முழுதும் பல்லாயிரம் மக்கள் தொலைக்காட்சிகளில் நேரடியாகக் கண்டபோது. உட்புறம் மேலும் சில வாயில்கள் அடைக்கப்பட்டிருந்ததை உலகம் கண்டு வியந்தது. இவற்றைத் திறக்கவும் அதற்குப் பின்புறம் உள்ள மர்மங்களை அறிந்து கொள்ளவும் தற்பொழுதும் ஆய்வுக் குழுக்கள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.

வியக்கத்தக்க முறையில் கட்டப்பட்டுள்ள பிரமிடின் கூம்பகங்களை பண்டைக் கால ஃபாரோ மன்னர்களின் வெறும் புதைப்புப் பீடமாக மட்டும் நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது! பிரமிடுகள் பூர்வீக எகிப்தியரின் வரலாற்றுக் களஞ்சியத்தின் சுரங்கமாக வடிக்கப்பட்டதுடன், அக்காலத்திய கணித, விஞ்ஞான, வானியல், மருத்துவ அறிவுத் திறமைகளையும், முறைகளையும் பறைசாற்றும் அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்கின்றன.
எகிப்தில் கட்டப்பட்டுள்ள வியக்கத்தக்க கோபுரங்களும், பிரமிட் கூம்பகங்களும் ஒரு புதிரான வரைகணித முறையில் திட்டமிட்டுக் கட்டப்பட்டதாகத் தெரிகின்றன! அந்தக் கணித முறை நுணுக்கங்களைப் புரிந்து பண்டைக் காலத்தில் பயன்படுத்திய எகிப்தியர் மிகச் சிலரே.
அவற்றில் நழுவிச் சென்ற சில கணிதத் துணுக்குகளைத்தான் புராதன, அலெக்ஸாண்டிரிய கிரேக்க அறிஞர் கைப்பற்றி விருத்தி செய்ததாக அறிய முடிகிறது. பிரமிடுகளும் அயர்லாந்தில் இருக்கும் கற்சுமைத் தாங்கிகள்  போல கற்தூண் காலங்காட்டியாக கருதப்படுகின்றன.
இந்தப் பிரமிடுகளில் ஏராளமான மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. மம்மிப்படுத்துதல் பற்றி...

1.    இறந்தவரின் உடலைத் தனியாக ஒரு கூடாரத்திற்கு எடுத்துச்சென்று, மரணக் கட்டிலில் அவரைக் கிடத்தி பேரீச்சை மதுவாலும் நைல் நதி நீராலும் கழுவுவார்கள்.
2.    உடலின் இடது பக்கத்தில் அறுத்து உள்ளே இருக்கும் பகுதிகளை வெளியே எடுப்பார்கள்.
3.    நுரையீரல், கல்லீரல், வயிற்றுப் பகுதிகள், குடல் பகுதிகள் எடுக்கப்பட்டு கல் உப்பில் பதப்படுத்தப்படும்.
4.    இருதயம் அறிவின் இருப்பிடமாக எகிப்தியர்களால் கருதப்பட்டதால் அது உடலுக்குள்ளேயே இருக்கும்.
5.    ஒரு வளைந்த கம்பியை மூக்கின் வழியாக விட்டு உடைத்து, மூளையை எடுத்துவிடுவார்கள். (உண்மையில் அறிவு என்பது மூளை தொடர்புடையது என்ற அறிவு அந்தக் காலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)
6.    உடல், கல் உப்பால் மூடப்படும்.
7.    நாற்பது நாட்கள் கழித்து உடலை மறுபடியும் நைல் நதி நீரால் கழுவி, அதன்மீது வாசனை எண்ணெய்களைத் தடவுவார்கள். உடல் இப்போது தன்னுடைய ஈரப்பதத்தை முழுவதுமாக இழந்திருக்கும். அதன் பிறகு மரணக்கோவில் என்றழைக்கப்படும் லூசார் கோவிலின் பலிபீடத்தில் சில நாட்கள் வைப்பர். இது நேரடியாக சூரிய ஒளி படும் இடமாதலால் பாலைவன வெயிலின் வெப்பம் காரணமாக உடலின் ஈரப்பதம் முழுமையாக ஆவியாகி இப்போது காய்ந்த உடல் மாத்திரம் இருக்கும்.
8.    உடற்பகுதிகள் தனித்தனியாக ஜாடிகளில் (canopic jars) வைக்கப்படும்.
9.    உடலை, பிசின் தடவிய துணியால் இறுக்கமாகச் சுற்றுவார்கள். தலை, கைகள், கால்கள், உடல்பகுதி தனித் தனியாகச் சுற்றப்படும்.
10.    இறுதியில் பிரமிடுகளின் மய்யப்பகுதியில் அரச மரியாதையுடன் எடுத்துச்சென்று அடக்கம் செய்யப்படும், அரசர் பயன்
படுத்திய அனைத்துப் பொருள்களும் பிரமிடில் வைக்கப்படும். இதில் தங்க வைர நகைகள் மற்றும் இதர விலையுயர்ந்த பொருட்களும் அடங்கும்.

மர்மத்தை தெரிந்துக் கொள்வதில் எனக்கு ஆர்வம் மிகுதி.அதுவும்  வரலாறு குறித்து என்றால் விடுவேனா.அதனால் தான் நான் தெரிந்துக் கொண்ட சில மர்மத்தை தங்களோடு பகிர்ந்து உள்ளேன் நண்பர்களே..!!


படித்ததில் பிடித்தது,
செ.வைசாலி.

நாணயங்கள்..!!


 
பிரிட்டிஷ் ஆட்சியின் போது
          
இந்திய விடுதலையான பிறகு
சோழர் காலத்தில்






இவை அனைத்தும் பழங்கால நாணயங்கள் 







இந்த நாணயங்களும் நம் நாட்டில் பயன்படுத்தியவை என்பதில் ஆச்சரியம் தான்.தெரிந்துக் கொள்வோம் நம் வரலாற்று பக்கத்தை கொஞ்சம்.நாணயங்கள் ரூபாய்களாய் மாறின மனிதன் பூதமாக மாறினான்.


காலங்கள் மாறினாலும் நம் பழமைகள் என்றும் அழிவதில்லை..!!!

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

பகைமையை ஒழிப்போம்..!!!


சுட்டு எரிக்கும் சூரியனும் பகை பார்ப்பதில்லையடா..!!
கொட்டுகின்ற மழையும் மதம் பார்ப்பதில்லையடா..!!
வீசிகின்ற காற்றும் இனம் பார்ப்பதில்லையடா..!!
ஓடுகின்ற நதியும் ஜாதி பார்ப்பதில்லையடா..!!


வேறுபட்ட மனிதர்கள் மத்தியில்
வேறுபட்ட மலர்களும் சமமாகத்தான்
மலரின் வாசனையை வீசுகிறது-ஆனால்
நாம் மலருக்கும் ஜாதி பெயர் சூட்டுகிறோம்..!!




நதிகள் பல ,கடல் ஒன்று..!!
நகரங்கள் பல,மாநிலம் ஒன்று..!!
மாநிலங்கள் பல.நாடு ஒன்று..!!
நாடுகள் பல,உலகம் ஒன்று..!!

புரிந்து கொள்ளுடா மானிடா
பகைமையை விரட்டுடா..!!





படித்ததில் பிடித்தது,
ரா.தேவயானி,
முதலாமாண்டு வணிகவியல்.

சிறப்பு விருந்தினர் சொற்பொழிவு..!!





கே.எஸ்.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருந்து Dr,M.Jayanthi  வணிகவியல் துறை (உதவிப் பேராசிரியர்)  கடந்த 13.02.2016 & 15.02.2016   சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த வகுப்பு அமைந்தது.

கணக்கு பதிவியல் குறித்து இரண்டு நாள் வகுப்புகள் நடத்தப்பட்டது.இந்த வகுப்பு சிறப்பாக அமைந்தது..குறிப்பாக கூட்டாண்மை தொழில் குறித்து அதாதவது கூட்டாளி சேர்ப்பு,வெளியேறுதல்,இறப்பு மற்றும் கூட்டாண்மை கலைப்பு பற்றி இந்த வகுப்பு அமைந்தது.

இந்த சிறப்பு வகுப்புகளை  ஏற்படுத்தி தந்த கல்லூரி முதல்வர் முனைவர்.எம்.கார்த்திகேயன் ஐயா,துறைத் தலைவி முனைவர்.வே.ராதிகா மற்றும் வகுப்பு பொறுப்பாளர் செல்வி அவர்களுக்கு நன்றிகள் பல..

திங்கள், 15 பிப்ரவரி, 2016

புத்துணர்ச்சி..!!




இந்த நாட்டில்,
     சாலையை மாற்ற வேண்டும்,
     கல்வி முறையை மாற்ற வேண்டும்,
     மருத்துவ முறையை மாற்ற வேண்டும்,
     உணவு முறையை மாற்ற வேண்டும்,
     அந்நிய கலாசாரத்தை மாற்ற வேண்டும்,
     நாவில் இருந்து உதிரும் மொழியை
     தாய் மொழியாக மாற்ற வேண்டும்,
     இவற்றை எல்லாம் கூட ஒரு நாள் மாற்றி விடலாம்
     உன் சோம்பலை மாற்றினால் .........
     ஒவ்வொரு நாளையும் சோம்பலை மறந்து

     புத்துணர்ச்சியோடு வரவேற்போம்!




ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை... !!



வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை.

இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின்
பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:

* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு.

அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். 




அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக
போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.


* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத வேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள்.

எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண்
பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது.

இது முற்றிலும் தவறு.

மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு
எச்சரிக்கை சின்னம்.

ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர
நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.



* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும்.

அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும்.

அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும்.

ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து
திரும்புகின்றனர்.

இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது

சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது.

அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர்.

காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில்
இருந்து கண்களை பாதுகாக்கும்.

வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின்
வேர்கள் அதிகம் வெளி வராது.

இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை
அதிகம் "அப்சார்ப்' செய்கிறது.

விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.


* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது.

மொபைல் போன் "சிக்னல்' இல்லாத
இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.

மொத்தத்தில்விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து

நம்மை பாதுகாக்கும்.

Thank info

Puthiya Thalaimurai TV

இந்த நல்ல விஷயத்தை பலருடன் பகிரலாமே!!!!