இவளின் வசிப்பே
கடலின் உள்ளத்தை
நேசித்ததேனோ...!!!!
உன் ஓசையை ரசித்த
என்னை
நனைய வைத்தாய் ...!!!
என்று உன் ஆழமனதில்
இடம் பிடிப்பேனோ....!!!
ஓசையின்றி என்
மனதை உன்னுடன்
இசைக்கும்
காதலி இவள்
உன்னிடத்தில் ஆழ்கடலே... !!!
ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022
ஆழ்கடல் 🌊🌊
சனி, 13 ஆகஸ்ட், 2022
சுதந்திர தினம்..🇮🇳🇮🇳🇮🇳
இந்திய வானில் விரிந்த சுதந்திரச் சிறகுகள் பல்லாயிரம் தியாக வீரர்களால் சாத்தியமாயிற்று! வேற்றுமை மலர்களால் ஆக்கப்பட்ட, ஒற்றுமை மாலையை சூட்டி மகிழ்ந்தோம்! பாரத அன்னைக்கு வண்ணம் மாறாமல் வாசம், பிறழாமல் வணங்கி காப்போம்! அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள் !
அ.ஹேமா 3ஆம் ஆண்டு வணிகவியல் ksrcasw
நட்பு 👭👫👭.......
அவளுக்கான கடமைக்காக அழைத்துசெல்ல
பதினாரில் பயணம் துடங்கியது
பயணத்தின் சுவாரசியதிற்கு அவளை
அவளின் உள்வெளி அழகை மெருகேற்றினான்
பெற்ற தந்தை வேடிக்கை பார்க்க
தந்தையாய் மாறிய தோழன்
சேர வேண்டிய கைகளில்
சேர்ப்பான்......
Varsha.P 2nd BA Economics ksrcasw
வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022
கவி
ஒளியில் ஒளியின்றி
தவித்த
இவளின் வழிக்கு
ஒளியாய்
வந்த கவியின்
இருளே...!!
உன் விழி வழி கவியாய்
ஒளிந்தாய்... !!!
வியாழன், 11 ஆகஸ்ட், 2022
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)