புதன், 4 மார்ச், 2020


                           தமிழும்   தமிழரும்

                               உடலும், உயிருமாய் விளங்கிய தமிழ்மொழியும், தமிழரும் இன்றியமையா  புகழப்படைத்து இவ்வையத்தையே வியப்பில் ஆழ்த்தினர். உடலுக்கு உடையை வைத்தது போல் தமிழுக்கு வைத்தான் சங்க தமிழன்.
             ஆனால், இன்று உயிரான தன் மொழியின் பயன்பாட்டினை குறைப்பதனாலும், தன் தாய்மொழி கல்வியை வெறுப்பதனாலும் உயிரற்ற நடைபிணமாய் வாழ்கிறான் இன்றைய தமிழன்.
              தமிழ்பாடி நாடெல்லாம் திரிந்த அன்றைய தமிழுக்கு அமிர்தமாய் இருந்த நம் தாய்மொழி, இன்று வின்வெளிக்கு செல்லும் அளவிற்கு வளர்ச்சி பெற்று உயர்ந்து நிற்கும் நம் நாட்டு மக்களுக்கு நம் தாய்மொழி விதமாய் தோன்றுகிறது.
              முன்னேற்ற பாதையில் செல்வதை எண்ணி நாம் அனைவருமே நமக்கு சொந்தமான நாட்டை அந்நியனுக்கு கொடுத்துவிட்டு, நிபந்தனைகளை ஏற்று செயல்பட்டு வருகின்றோம்.
              தன்னுடைய தாய்மொழியை மதிக்காத இடத்தில் நின்று பொன், பொருள் தேடி நிற்பது தாயை விட்டு பிறரிடம் யாசிப்பதற்கு சமம்.வளம் மிகுந்த நாட்டின், செல்வங்கள் நிறைந்த நாட்டின் பிள்ளைகளாகிய நாம் மட்டும் யாசிக்கவில்லை.
               அத்துணை வளமும், பலமும் கொண்ட நம் தாய்திருநாட்டின் தரத்தினையும் குறைத்து வருகிறோம்.
                எத்துணை பெரிய துன்பத்திலும், நம் நாட்டை அந்நியரிடம் இருந்து காப்பாற்றி சுதந்திரம் பெற்ற அன்றைய தமிழன் தமிழ் மொழியை தன் உயிராய் ஏற்று, தமிழ்மொழியின் உடலாக செயல்பட்டான்.
                  தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக பாடுபட்டான்
பண்டையத் தமிழன்!
              கல்வி, தொழில், அறிவியல், வணிகம்,அரசியல் என நாட்டின் அத்தனை செயல்பாடுகளும் என்று நம் தாய்மொழியில் நடக்கின்றதோ அன்று தான் நம் நாடு முழுமையான சுதந்தர நாடாக தோன்றும்.
                   பிற மொழியை கற்பது தவறல்ல! தம் தாய்மொழியையும் பிறர் கற்கும் அளவிற்கு பரவச் செய்பவனே உண்மையான தமிழன்!
                    அன்றைய காலகட்டத்தில் தமிழன், தாய்மொழியில் நுணுக்கமாக பெற்ற அறிவும், ஆளுமையும் இன்னும் அத்துணை அண்டை மொழிகளை கற்றாலும் அதற்கு ஈடாகாது.

செம்மொழியாம் தமிழ்மொழி 

                   சொல்வளங்கள் மிஞ்சும் மொழியாம் செம்மொழி சொற்களுக்கே உரிய மொழியாம் நம் தமிழ்மொழி எம்மொழியும் பெறா இலக்கணம் பெற்ற பொன்மொழியம் தமிழ்மொழி.
                                 செல்வதை மிஞ்சும் மொழியாம் தமிழ்மொழி 
            செய்யுளின் ஆயுள் மொழியாம் செம்மொழி தமிழ்மொழி இறக்கும் வரை புதிய புதிய நடைகளும் இலக்கிய, இலக்கண வகைகளும் தோன்றி கொண்டே தான் இருக்கும்.
                              சேரனின்  ஆட்சிமொழியாம் செம்மொழி 
           முச்சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த சிறப்பு மிக்கமொழி தான் நம் தாய்மொழி . மதுரை மண்ணின் மைந்தனாய் தோன்றிய மொழியே நமது தமிழ்மொழி.
               மாறாத மதிப்பின் மொழியாம்  தமிழ்மொழி .இன்னும் எத்துணை ஆண்டுகள் கழிந்தாலும் துடிப்புடன் செயல்பட்டு விளங்கும் அறிய மொழி தான் நமது தாய்மொழி
                     அன்றும்,இன்றும்,என்றும் தனிமொழி நம் தமிழ்மொழி                     எம்மொழியின் உதவியும் இன்றி பேசுவதற்கு இயன்ற மொழிநடையை உடையது தமிழ்மொழி.
                உணர்வினை ஊட்டும் மொழியான நமது தமிழ் மொழி கேட்ட்கும் செவிகளுக்கு விருந்தாக , பேசும் வாய்ற்க்கு அமுதாக இருக்கின்றது
ஊக்கத்தின் உச்ச நிலையாம் தமிழ்மொழி குழந்தைகளுக்கு பாடும் தாலாட்டு முதலே ஊக்கத்தோடு  செயல்பட உதவும் உன்னதமான மொழியானது நம் தாய்மொழி.
                   விதைகளின் விருட்ச மொழியே தமிழ்மொழி
          விதைகளில் இருந்து விருட்சமாய் வளர்ந்த வீரமான மொழி நம் தமிழ்மொழி புல்வெளியில் பனித்துளியே செம்மொழி அழகிய நடைகளை உடைய மொழியே நம் தமிழ்மொழி
                 இருளின் சுடர் ஒளியே செம்மொழி 
             வாழ்க்கையில் திறன் கொண்டு தத்தளித்த பலருக்கு எளிய நடையில் பேச, படிக்கச் உதவி இருளில் இருந்து மீது ஒளி தந்து உதவிய நட்புணர்வுடையது நம் தமிழ்மொழி
             அன்னையின் அன்புமொழியே தமிழ்மொழி அய்யன் குறளில் மிதந்த ஆற்றல் மிக்க மொழியே செம்மொழி ।  வாழ்க்கை நெறியை தொகுத்து காட்டிய தொன்மையான மொழி
               அழியா  புகழில் ஆழ்ந்த மொழியே செம்மொழி 
              உலகின் உன்னத மொழியே தமிழ்மொழி ஊர் போற்றும் கோவில் மணியாய் விளங்கியது நம் தாய்மொழி 
                     கம்பர் கவியின் வாரியாம் செம்மொழி 
              கற்பதிலும்,கற்றவர் போற்றுவதிலும் என்றுமே செம்மொழியாம் நம் தமிழ்மொழி 

சனி, 29 பிப்ரவரி, 2020

பழமொழி

புலி பசித்தாலும் புல்லை திண்ணாது
 நாய்,பூனை, போன்ற ஒரு சில விலங்குகள் தன் குட்டிகளை ஈன்றவுடன் பிரசவ வலி மற்றும் அப்போது ஏற்படும் அகோர பசியின் காரணமாக அவை ஈன்ற சில குட்டிகளை தானே தின்றுவிடும். ஆனால் புலி இப்படி தன் குட்டிகளை தானே உண்பது இல்லை அவைகளை பத்திரமாகவும் தன் பார்வையில் மிகுந்த கவனத்தோடு பராமரிக்கிறது. அதனாலே புலி பசித்தாலும் புல்லை திண்ணாது என்கிறோம். 

மொழி

தாயும்
தன் குழந்தையும்
பேசிக்கொள்ளும்
சின்ன சிரிப்பே
யாரும் அறியாத
மொழி


வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

அறம் செய் ! புறம் பேசாதே !

                        ஒரு குறையும் இன்றி நாம் நம் வாழ்க்கையை வாழ விரும்பினால் ,அதற்கு ஏற்ற செயலை மட்டும் செய்து மறுபிறவி ஒன்று ஏற்பட்டால் அப்போதேனும் அந்த அறிய வரத்தினை பெற வேண்டும்.
                       அங்ஙனம் இன்றி இன்று நினைப்பதனை இன்றே பெற வேண்டும் என்று எண்ணி ,நாளை என்றொன்று இருப்பதனை மரத்தால் . அதாவது வரும் முன் காப்போம் என்பதனை அறியாதிருத்தல் .
                       எல்லாம் அறிந்தும் அறியாமையை தேடுகின்றனர் இன்றைய தமிழர் இந்நிலை மாற வேண்டும் . அறியாமையிலும் ,அறிவீனம் என்று நினைத்துக்கொண்டு தன் நலத்திற்காக பிறரை துன்புறுத்துகின்றனர் .                    உண்மை கண்முன் என்றாலும் பொய்மையின் பின்னால் கண்மூடி தனமாக கண்ணை திறந்தே நடக்கின்றனர் .
                       பிறரை நோக்கியேனும் அறிவோ , ஆக்கமோ கொள்ளாது பொறாமையும், பேராசையையும் கொள்கின்றனர் . தான் வெல்லாவிட்டாலும் , பிறர் வெல்ல கூடாதென்று சூழ்ச்சிகளை செய்யவும் துணிகின்றனர.
                      மனம் என்ற ஒரு இனம் அறத்தின் வளமாய் இருப்பதனை மறந்து சாதி ,மதம் , குலம் என்னும் என்றோ அறுத்தெறியப்பட்டதை . தான் நூலெடுத்து கோர்ப்பதாய் எண்ணி பிறரை ஊசியால் குத்துகின்றனர் .                  வன்முறையை அளிக்காவிட்டால் ,அறநெறியை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பதனை இன்றளவிலும் உணராது செயல்பட்டு வருகின்றனர். .                         இன்றைய தமிழர் । நம் பிறப்பென்பதை யார் தீர்மானித்தாலும் !இறப்பை எமன் தீர்மானித்தாலும் ! நம் வாழ்வை நாம் தீர்மானிக்க வேண்டும் !                        அவற்றை அறிவாய், அளவாய், அழகாய், அமுதாய் அதாவது "ஆற்றில் போட்டாலும் அளந்து போடு " போல  வாழ்க்கையை கழிக்க வேண்டும் ।
                      அழியா வரம் வேண்டாம் , மறையும் வரை வாழ்ந்திடும் (ஆழ்த்திடும் ) வரத்தினை பெறவேண்டும். வாழ்க்கையை அழியா புகழோடும் , அனைவரும் அறியும் மிதலோடும் ,அணுகும் மனதோடும் ,அறியும் குணத்தோடும் வாழ்தல் வேண்டும் .
                       உன் தலையெழுத்து குறையாக இருந்தாலும் உன் கையெழுத்து முறையாக இருக்க வேண்டும் . தம் முன்னால் பிறர் போடாவிட்டாலும் ,பின்னால் பரைய கூடாது .
                                         நன்மை ஒன்றும் செய்யாவிட்டாலும் 
தீமையை என்றும் நீ தீண்டாதே
              கடவுளை காணாவிட்டாலும் உன் உள்ளம் அதை நீ உணர்த்திருக்காதே . காலம்  அது  கரைந்து போகையிலே 
கல்லாய் நீயும் மாறிவிடாதே .
                  கவிதை பேசும் வார்த்தைகள் எல்லாம் கல்லறைகள் கேட்காத என்பது போல,  இன்று உன் முன்னால் பயத்தினாலோ அல்லது எதிர்பார்ப்பினாலோ காலத்தையும் ,சூழ்நிலையையும் ,சுல்லலையும் பார்த்து உன்னை பாடிப் போற்றி பேசினாலும் , பேசாவிட்டாலும் .
                      பின்னால் இகழ்வதனை நீ அனுமதிக்காதே । உன்னை இகழ்வதனை நீ அறியாமல் இருக்காதே அவ்வஞ்ச புகழ்ச்சியினை உன் கல்லறையும் கேட்டவிடாதே
அறத்தினை செய் கூசாதே புரம் நின்று பேசாதே