வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

அறம் செய் ! புறம் பேசாதே !

                        ஒரு குறையும் இன்றி நாம் நம் வாழ்க்கையை வாழ விரும்பினால் ,அதற்கு ஏற்ற செயலை மட்டும் செய்து மறுபிறவி ஒன்று ஏற்பட்டால் அப்போதேனும் அந்த அறிய வரத்தினை பெற வேண்டும்.
                       அங்ஙனம் இன்றி இன்று நினைப்பதனை இன்றே பெற வேண்டும் என்று எண்ணி ,நாளை என்றொன்று இருப்பதனை மரத்தால் . அதாவது வரும் முன் காப்போம் என்பதனை அறியாதிருத்தல் .
                       எல்லாம் அறிந்தும் அறியாமையை தேடுகின்றனர் இன்றைய தமிழர் இந்நிலை மாற வேண்டும் . அறியாமையிலும் ,அறிவீனம் என்று நினைத்துக்கொண்டு தன் நலத்திற்காக பிறரை துன்புறுத்துகின்றனர் .                    உண்மை கண்முன் என்றாலும் பொய்மையின் பின்னால் கண்மூடி தனமாக கண்ணை திறந்தே நடக்கின்றனர் .
                       பிறரை நோக்கியேனும் அறிவோ , ஆக்கமோ கொள்ளாது பொறாமையும், பேராசையையும் கொள்கின்றனர் . தான் வெல்லாவிட்டாலும் , பிறர் வெல்ல கூடாதென்று சூழ்ச்சிகளை செய்யவும் துணிகின்றனர.
                      மனம் என்ற ஒரு இனம் அறத்தின் வளமாய் இருப்பதனை மறந்து சாதி ,மதம் , குலம் என்னும் என்றோ அறுத்தெறியப்பட்டதை . தான் நூலெடுத்து கோர்ப்பதாய் எண்ணி பிறரை ஊசியால் குத்துகின்றனர் .                  வன்முறையை அளிக்காவிட்டால் ,அறநெறியை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பதனை இன்றளவிலும் உணராது செயல்பட்டு வருகின்றனர். .                         இன்றைய தமிழர் । நம் பிறப்பென்பதை யார் தீர்மானித்தாலும் !இறப்பை எமன் தீர்மானித்தாலும் ! நம் வாழ்வை நாம் தீர்மானிக்க வேண்டும் !                        அவற்றை அறிவாய், அளவாய், அழகாய், அமுதாய் அதாவது "ஆற்றில் போட்டாலும் அளந்து போடு " போல  வாழ்க்கையை கழிக்க வேண்டும் ।
                      அழியா வரம் வேண்டாம் , மறையும் வரை வாழ்ந்திடும் (ஆழ்த்திடும் ) வரத்தினை பெறவேண்டும். வாழ்க்கையை அழியா புகழோடும் , அனைவரும் அறியும் மிதலோடும் ,அணுகும் மனதோடும் ,அறியும் குணத்தோடும் வாழ்தல் வேண்டும் .
                       உன் தலையெழுத்து குறையாக இருந்தாலும் உன் கையெழுத்து முறையாக இருக்க வேண்டும் . தம் முன்னால் பிறர் போடாவிட்டாலும் ,பின்னால் பரைய கூடாது .
                                         நன்மை ஒன்றும் செய்யாவிட்டாலும் 
தீமையை என்றும் நீ தீண்டாதே
              கடவுளை காணாவிட்டாலும் உன் உள்ளம் அதை நீ உணர்த்திருக்காதே . காலம்  அது  கரைந்து போகையிலே 
கல்லாய் நீயும் மாறிவிடாதே .
                  கவிதை பேசும் வார்த்தைகள் எல்லாம் கல்லறைகள் கேட்காத என்பது போல,  இன்று உன் முன்னால் பயத்தினாலோ அல்லது எதிர்பார்ப்பினாலோ காலத்தையும் ,சூழ்நிலையையும் ,சுல்லலையும் பார்த்து உன்னை பாடிப் போற்றி பேசினாலும் , பேசாவிட்டாலும் .
                      பின்னால் இகழ்வதனை நீ அனுமதிக்காதே । உன்னை இகழ்வதனை நீ அறியாமல் இருக்காதே அவ்வஞ்ச புகழ்ச்சியினை உன் கல்லறையும் கேட்டவிடாதே
அறத்தினை செய் கூசாதே புரம் நின்று பேசாதே 

நதி உருவாகும் இடம்

சிந்து - பொக்கா - சூ பனியாறு (மானசரோவர் ஏரி)
பிரம்மபுத்திரா - கெமாயுங்டங் பனியாறு (மானசரோவர் ஏரி)
கோதாவாி - திரயம்பதேஷ்வரா் பீடபூமி (நாசிக்)
மகாநதி  - சிஹாவா (ராய்பூர்)

தகுதி

உங்களுக்கு  ஒரு தகுதி  வேண்டும் என்றால் ,
அதை  நீங்கள்  பெற்று விட்டதைப் போல் செயல்படுங்கள்.  
அதுவாகவே நீங்கள்  மாறிவிடுவீர்கள்.
                                                  _ வில்லியம் ஜேம்ஸ்.

இயற்கையை காப்போம்

இயற்கை அளித்த மழைத்துளியை
மனிதன் காப்பதில்லை
கடவுள் படைத்த இயற்கையை
மனிதன் காப்பதில்லை
இயற்கை அளித்த நீரும் மணலும் காற்றுகூட
மனிதனின் பணத்தேவையாக மாறி விட்டது
தற்போது மனிதனிடம் ஒன்றும் இல்லை
ஆனால் அழிப்பதில் முன்நிற்கின்றனர்....
இயற்கையை காப்போம்...

6.1.2020 அன்று தினத்தந்தி நாளிதழில் வெளியான கவிதை.

புதன், 26 பிப்ரவரி, 2020

பொய் மானிடா..... நீ எம் மண்ணிலா..... 

                தமிழ் தோன்றி பல நூறு ஆண்டுகள் ஆகிறது இன்றும் தனிமொழி என்ற சிறப்பினை இழக்காமல் இருக்கிறது.
                ஆனால் , தமிழர்களாகிய நாம் என்ன செய்கிறோம் . நம் தாய்மொழி கல்வியை கற்க விருப்பமில்லாமல் , பிறமொழி கல்வியை கற்றுவருகிறோம்.
                இதில் தான் நம் அடிமைத்தனம் வெளிப்படுகிறது . ஆங்கிலேயர் ஆண்ட காலம் கடந்து சுதந்திர நாடக மாறியது என்று நாம் குறிக்கொண்டிருக்கிறோம் .
                ஆனால் , இன்றும் அந்நிய மொழிக்கு நாம் அடிமைகளாகவே இருக்கிறோம் . அதனையே நம் சந்ததிக்கும் கொடுக்கிறோம் .
                உண்மையிலேயே நமக்கு நம் மண்மீது  பற்று இருந்திருந்தால் , நாம் நம் மொழியை  தான் முதன்மைப்படுத்தி  தாய்மொழி கல்வியை  உயர்த்தியிருக்க வேண்டும். உலகளவு பரவிய மொழியாய் மாற்றியிருக்க வேண்டும். 
                எம்மொழியிலும் இல்லா இலக்கணமும் , சொற்களும் உடையது ,  நம்மொழி .
                எளிதில் கற்க  , உணர வளம் கொண்ட நம் மொழி சிறப்புப்பெற செய்பவனே உண்மையான பற்றுடையோன் செயல் .
               நாம் அனைவருமே இன்றளவில் பொய் மானிடர்களாய் தான் நம் மண்ணில் இருக்கின்றோம் !
               தன் தாய்நாட்டிற்கும் , தாய்மொழிக்கும் வளர்ச்சியை  கொடுக்க செயல்பட்டு உழைப்பவனே என்றும் உண்மையான மானிடன் .
               நாம் எவ்வளவு தான் அறிவியல்  ரீதியாகவும் , பொருளாதாரரீதியாகவும்  உயர்ந்தாலும் நம் நாட்டையும் , மொழியையும் உயர்த்துவதில்லை .
               நீ விண்ணில்  நின்று பேசினாலும் ,விவாதமாய் பேசினாலும் உன் தாய் மொழிக்கு தலைவணங்கு .
       உன் மொழியில் பாடி நில் ! உலகமெங்கும் பரவ  செய் !
               உலகமெங்கும் தமிழர்கள் பல்வேறு இடங்களில் சென்று சாதனை புரிந்தால் அது சரித்திரமில்லை!
தமிழ் மொழியை ஆங்காங்கே பரப்புவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் . அதுவே , உண்மையான சரித்திரம் !
               அவர்களை அடிமையாக்கவிட்டாலும் , நம் மொழியின் அருமையையும் , ஆழமும் அறிய செய்ய வேண்டும் .
               அடிமை தன்மையின் வலி உணர்ந்த  தமிழனுக்கு மற்றவர்களை அடிமையாகும் எண்ணம் என்றும் இருக்காது. இருப்பினும் ,
தன் மொழியின் சிறப்பை இழக்க  தமிழனின் மணம் ஏற்காது !
               இவாறான ,தமிழின் பெருமையை உணராது பிறமொழி மோகம் கொண்டு திரிபவனே பொய் மானிடன் !
பொய் மானிடன் எம் மண்ணில் மாண்டாலும் பயனடையான் !