செவ்வாய், 21 ஜனவரி, 2020

அழகுப் பதுமை

சூரியன் ஒளியைத் தழுவி
உன் நிறத்தை வடிவம் அமைத்தார்
பூவின் இதழ்களைக் கோர்த்து
உன் உடல் வடிவம் கொடுத்தார்
மலரைத் தாங்கும் காம்பைப்போல
விரல்கள் படைத்தார்
மிதக்கும் தாமரையைப்போலப்
பாதம் படைத்தார்
சங்கைப்போல மெல்லிய கழுத்தக் கொடுத்தார்
கருவண்டைப்போல இருவிழிகளைக் கொடுத்தார்
நிலவின் வடிவத்தை எடுத்து உன் முகம் அமைத்தார்
உனக்கு இத்தனை இத்தனை கொடுத்த கடவுள்
நான் உன்னைப் பார்ப்பதற்கு
இருவிழியை மட்டும் கொடுத்தானே

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

தேர்தல்

"எங்களுக்குள்
ஓர்  ஒப்பந்தம் !
ஐந்து  வருடத்திற்கு
நீங்கள்  ஏமாற்றுங்கள் !
ஐந்து வருடத்திற்கு
ஒரு முறை  நாங்கள்
ஏமாற்றுகிறோம் !
பார்க்கலாம் !
நீங்களா ? நாங்களா ? என்று !"

அப்பன்

அதிகாலையில்  அதிபதியாய்
அந்திமாலையில் அவையகனாய்
அன்றிரவில் நிலா அவனாய்
உன்னை மடி சேர்த்திடுவான்
அன்பு மனம் காட்டிடுவான்
அறிவு குணம் சூட்டிடுவான்
அமைதி வனம் ஆக்கிடுவான்
அய்யன் குறள் கூறிடுவான்
அன்னை மடி சேர்த்திடுவான்
அழாய் என சொல்லிடுவான்
அன்பில் அன்னையையே தோற்கச் செய்வான்
































x

உயிரே

உருவம் இல்லாத உடலுக்கு உயிர் கொடுத்தாய்
உயிர் இன்றி திரிந்த எனக்கு உணர்வுகளைக் கொடுத்தாய்
அருகில் இருந்தபோது உன்னை அறியவில்லை
உன் அருமையை அறிந்த பிறகு
நீ என் அருகில் இல்லை
உன்னை நினைக்க என்னை மறந்தேன்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

சிரிப்பு

பூமியில் விளைந்த பூ ஒன்று
மக்கள் விதை இல்லாமல் பூத்த பூ
செடி கொடியில் விளையாத பூ
காம்பும் இலையும் தீண்டாத பூ
பார்க்கவும் கேட்கவும் மலர்ந்த பூ
உலகில் யாருமே பறிக்க முடியாத பூ
முகத்தில் மலரும் பூ அதுவே சிரிப்பு