வியாழன், 31 ஜனவரி, 2019
நம் கடமை
சில நாள்களாக நான் பார்த்து கொண்டு இருக்கும் காட்சி இது. ஆம் ஒரு வயசான தம்பதிகள் தன் விலைநிலத்தில் உள்ள பயிர்களுக்கு குடத்தில் சாலை ஓரத்தில் உள்ள குழாயில் தண்ணீர் பிடித்து ஊற்றும் நிலை.மழையை நம்பி விவசாயம் செய்த நிலை மாறி இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது. இது விவசாயிகளின் சாபமா அல்லது தொழிற்சாலைகளின் லாபமா என்று தெரியவில்லை.
விவசயத்தை போற்றுவோம் என்று கூறும் நாம் தான் விவசாயிகளின் விலை பொருள்களுக்கு பேரம் பேசுகிறோம்.பாலிதீன் தீங்கானது மண்ணுக்கும் மனிதனுக்கும் கெடுதல் தரும் என்பதை தெரிந்த நம்மை போன்ற படித்தவர்களே அதை சாலையில் போடுகின்றனர்.
நாட்டின் வளர்ச்சியை அரசாங்க அமைப்பால் மட்டும் பாதுகாக்க முடியாது. குடிமக்களாகிய நமக்கும் சில கடமை உண்டு அதை நாம் முதலில் செய்ய வேண்டும். இந்திய குடிமக்களாகிய நம் கடமை விவசயத்தை பாதுகாப்பது ஆனால் வெறும் வார்த்தையால் அல்ல நம் செயலால்.
விவசயத்தை பாதுகாத்து மனித இனத்தை அழிவில் இருந்து மீட்போம்.
புதன், 30 ஜனவரி, 2019
சாதனை பெண்👩👩
23 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ராணுவ கார்ப்சுக்கு குடியரசு அணிவகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதை தலைமை ஏற்று நடத்தும் பொறுப்பு இவருக்கு கிடைத்தது.முதல் முறையாக 144 ஆண்களை தலைமை ஏற்று நடத்தும் பெண் என்ற சாதனையை படைத்தார். இப்போது 26 வயதாகும் இவருக்கு தன் ராணுவ கணவரும் தன் குடும்பமும் பக்க பலமாக இருக்கிறது என்று கூறும் பாவனா ஒரு சாதனை பெண் தான்.
திங்கள், 28 ஜனவரி, 2019
குடியரசு தினம்🇮🇳🇮🇳🇮🇳
15 ஆகஸ்ட் 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற நாளாக கருதப்படுகிறது ஆனால் 26 ஜனவரி 1950 குடியரசு தினம் என கொண்டாட காரணம் என்ன என்ற கேள்வியின் பதில் தான் இந்த பதிவு.
பெரும்பாலும் சுதந்திர தினத்தை போலவே கொடியேற்றி இனிப்புகள் பரிமாறி இந்த தினத்தை கொண்டாடுகிறோம். இந்திய உலகளவில் ஒரு போற்றத்தக்க ஒரு குடியரசு நாடாக உள்ளது.சுமார் ஒரு 88 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியும், வறுமையும் மக்களை புரட்சி பாதையில் திசை திருப்பியது. அவர்களை அஹிம்சை நிலைக்கு திருப்ப வேண்டும் என்று எண்ணிய காந்தி அடிகளார் 26 ஜனவரி 1930 அன்று சுதந்திர நாளாக கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் பின்னர் அந்த நாள் கொண்டாடப்பட்டது. அதற்கு பின்பு 17 ஆண்டுகள் கழித்து உண்மையான முழு சுதந்திரம் கிடைத்தது. அதனால் அந்த நாளை குடியரசு தினமாக கொண்டாட நேரு அமைச்சரவை 26 நவம்பர் 1949 அன்று முடிவு செய்து 26 ஜனவரி 1950ஆம் ஆண்டு குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)