வியாழன், 27 செப்டம்பர், 2018

அடைப்பட்ட பறவைகள்

சாதிக்க முயலும் பெண்களையும்
சபிக்கும் சமூகம்.......
ஆண்களின் அடிமையாக வாழ
விருப்பமின்றியும் வாழும் கைதிகள்
அடிகளையும் முயற்சி படிகளாய்
மாற்றும் ஓரினம்.... என் இனம்
துயரங்கள் பல இருப்பினும்
இன்முகம் சிரிப்புடன் வாழ்ந்து
வரும் இச்சமூக கைதிகள்.....
விடுதலை இல்லா பறவைகள்
சிறகுகள் இருந்தும் பறக்க
முயலா நிலை....என்றுதான் மாறும்?

தோல்வி

தோற்றபின் துவண்டுவிடாதே...
தோற்றதன் காரனத்தைத் தேடு...
தேடிய காரணத்தின் பின் ஓடு..
பிறகு வெற்றி மாலையை சூடு...

கருத்தரங்கப் பதிவுப் படிவம்

தமிழ் - ஆங்கிலம் - கணிதம் கற்றல் கற்பித்தல் உத்திகள்

நான்காம் ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கம்

12.12.2018

புதன், 26 செப்டம்பர், 2018

எவன் சிறந்தவன்

எவன் சிறந்தவன் பணம் உள்ளவனா.....
இல்லவே  இல்லை...
பெற்றோர் உடன் உள்ளவனே
சிறந்தவன்.....

அன்புள்ள அம்மா

உன் கருவரையை எனக்கு
வசிப்பிடம் ஆய் தந்தவள் நீ
நான் கொடுக்கும் வலியிலும்
இன்பம் கண்டவள் நீ
நான் தவழ்ந்து நடக்கும்
நடையில் நயம் கண்டவள் நீ
என் மழலைப் பேச்சினை
ரசித்தவள் நீ....
என் அறியா பருவம் முதல்
இன்றுவரை எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி என்னை
காதலித்ததும் நீ...... என்னுயிர் தாயே