வெல்லும் வரை வேகமாக இரு
வென்ற பின் விவேகத்துடன் இரு
ஏன்எனில் வேகமும் விவேகமும்
இல்லா வாழ்க்கை சக்கரம் இல்லா
வண்டி போல நின்றுவிடும்........
வெள்ளி, 21 செப்டம்பர், 2018
விவேகம்
புதன், 19 செப்டம்பர், 2018
தித்திக்கும் தமிழே
தித்திக்கும் தேனைவிட சுவையான தமிழே !!!
உன்னை என்னவென்று போற்றுவேன் !!!
திசையெங்கும் தடையின்றி சுலபமாக பரவியிருக்கிறாய் நீ !!!
தினமும் விடையின்றி பலமாக யோசிக்கிறேன் உன்னை மட்டும் எவ்வாறு மக்கள் போற்றுகிறார்கள் என்று!!!
தேசம் முழுவதும் உன் வாசம் வீசுகிறதே!!!
உன்னோடு நட்புக் கொள்ள ஆசை படுகிறேன் நான்!!
செம்மொழியாம் தமிழ் மொழி
என புகழ்ந்து பிறநாட்டினர் பெருமைபடுகிறனர் !!!
எம்மொழியாம் தமிழ்மொழி என நான் மகிழ்ந்து பிறநாட்டினரிடம்
பெருமைப்பேசிவருகிறேன் !!!
வெறும் பேச்சில் மட்டுமல்ல!!!
என் உயிர் மூச்சிலும் !!!
வாழ்க தமிழ்!வளர்க தமிழ்!!
வெள்ளி, 14 செப்டம்பர், 2018
வியாழன், 13 செப்டம்பர், 2018
புதன், 12 செப்டம்பர், 2018
சுதந்திரத்தை போற்றுவோம்
நம்மில் பலர் போராடி பெற்ற சுதந்திரத்தை பொறுப்பின்மை காரணமாக உதாசீனப்படுத்திகின்றனர் . இந்த சுதந்திரம் பெற எத்துணை பெறோர்கள் தன் பிள்ளைகளையும் , எத்துணை மனைவிகள் தன் கணவன்மார்களையும், எத்துணை குழந்தைகள் தன் பெற்றோர்களை இழந்தனர்.
ஆனால் நம்மில் பலர் சுதந்திரம் என்றால் என்ன என்பது அறியாமல் பல படித்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் வாழ்க்கையை கேளிக்கை விருந்துகளிலும், தவறான செயல்களிலும் ஈடுபட்டு தன் அரிதினும் அரிதான வாழ்க்கையை அளித்து கொண்டு இருக்கின்றனர் . இந்த நிலை மாற வேண்டும் . இதை மற்ற நம்மால் மட்டும் தான் முடியும். தன் சொந்த நலத்தை தாண்டி தான் பிறந்த நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வேண்டும்.
அப்துல் காலம் ஐயா கூறியது 2020 இல் இந்தியா வல்லரசு ஆகா வேண்டும் என்றால் நம்மால் இயன்ற சிறு சிறு தொண்டை நாட்டிற்காக செய்ய வேண்டும். சிறு துளி பெருவெள்ளம் என்பதுக்கேற்ப சிறு சிறு மாற்றமே நம் நாட்டின் முன்நேற்றத்திற்கு காரணமாக இருக்கும். ஆனால் சிலரோ சிறு தவறு தானே என்று செய்யும் ஒவ்வொரு செயலும் பெரிய தவறு செய்ய ஒரு சிறு பொறியாக மாறி விடும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)