சில நேரங்களில் நாம் நம்மை அறியாமல் செய்த சின்னஞ்சிறு செயல்கள் கூட பிறரை மிகவும் காயப் படுத்தும்...
விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளுக்கு இடையில் சண்டை வந்துவிட்டது...
அந்த சண்டையின் உச்சகட்டமாக ஒரு குழந்தை இன்னொரு குழந்தையிடம்.. நான் தான் நம்ம அம்மா அப்பா பெற்ற பிள்ளை நீ தத்துப் பிள்ளை என்கிறது...
இதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த குழந்தை வேதனைப் படவும் இல்லை..
வருத்தப்படவும் இல்லை...
பெருமிதத்தோடு சொல்கிறது..
பெத்த பிள்ளைக்கும் தத்துப் பிள்ளைக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா....
பெற்ற பிள்ளை என்றால் கருப்பையில் வளர்ந்தவர்கள்..
தத்துப் பிள்ளை என்றால் இதயத்தில் வளர்ந்தவர்கள்..
என்று கூறியது...
அந்த குழந்தை இந்த வார்த்தைகளை மனதார சொல்லியிருந்தாலும் கூட அந்த மழலையின் அடிமனதில் அது கடினத் தன்மையையும் ஏக்கத்தையும் அல்லவா ஏற்படுத்தியிருக்கும்...
பிறர் மனதை காயப்படுத்தாமல் பேசுபவர் யாரோ அவரே பிறரால் மதிக்கப் படுவார்கள்.
நேசிக்கப் படுவார்கள்...
நா காக்க...