வெள்ளி, 7 செப்டம்பர், 2018

மரணத்தின் கைபிடியில்


மரணம் -அனைவருக்கும்  நிகழ்வது சாதாரணமே ....ஆனால் பல பேருக்கு பல மரணங்கள் சாதரணமாக நடைபெறுவதில்லை அதற்கு காரணம் விதியல்ல  நம்முடைய செயல் தான் என்பது பலபேருக்கு தெரியும் இருந்தும் நாம் அவற்றைப்பற்றி கவலை படவில்லை ....ஏனெனில் இன்றைய அவசர உலகில் கடிகார முள்ளின் பின்னாடியே ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களாகிய நமக்கு ஒரு நிமிடம் நின்று ,நிதானமாக  சிந்திக்க கூட வாய்ப்பு இருப்பதில்லை ...காலையில் எழுந்தவுடன் அவசரமாக புறப்பட்டு வேலைக்கு சென்று இரவு வெகு நேரம் கழித்து களைத்து வீடு திரும்புகிறோம் ....மறுபடியும் அடுத்த நாளும் அதே ஓட்டம் ....மனைவி ,குழந்தைகள்,பெற்றோர்கள், நிம்மதி ,ஆரோக்கியம் என நமக்கு இன்றியமையாத எல்லாவற்றியும் இழந்து விட்டு இறுதியில் நம்முடைய வாழ்கையையும் எதோ ஒரு கட்டத்தில் தொலைய விட்டுவிடுகிறோம் ......பிறர்க்காக ஏதும் செய்யாமல் நமக்காக ,நம்முடைய சுயநலத்திற்காக போராடிகொண்டிருப்போம்...
நம்முடைய  வாழ்கையில் , நம்முடைய வருங்கால சன்னதிகளுக்காக புண்ணியத்தை சேர்க்காமல் ,நிறைய சொத்து  சேர்த்து வைத்து நம்முடைய வாழ்க்கையை தொலைத்து விடுகின்றோம் .... இறுதியில் மரணத்தின் தருவாயில் சிக்கித் தவிக்கும் பொழுது  நாம் நினைப்பது நம்முடைய வாழ்கையில் என்ன சாதித்தோம்  ! யாருக்கு என்ன செய்தோம் !!!    மரணிக்கும் தருவாயில் நல்லதை நினைக்கும் நாம் ஏன் நலமாக இருக்கும் பொழுது நினைப்பதில்லை .....

வாய்ப்பு

                 
                                                                 ஒரு மனிதனை சிறந்தவனாகவும், உயர்ந்தவனாகவும் மாறுவதற்கு காரணம் அவனுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் மட்டும் தான்.                   வரம் கொடுக்கும் தேவதைகள் வசந்தபோது தூங்கினேன்.               வந்தபோது தூக்கிவிட்டு வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன். காரம்மோடுக்கும் வாய்ப்புகளை கைகழுவி  வீசினேன் கைகழுவி வீசிவிட்டு காலமெல்லாம் பேசினேன்.                                  என்றார் மு. மேத்தா எனவே நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் வாழ்வில் உயர்வோம்.

வியாழன், 6 செப்டம்பர், 2018

யார் ஆசிரியர்?

     
                                                                 ஆசிரியர் என்பவர் நம் தவறை சுட்டி காட்டி அதை திருத்துபவர், மேலும் அந்த தவறை செய்ய விடாமல் நம்மை நல்வழிப்படுத்துபவர், நம் திறமைகளை ஆராய்ந்து அதை வெளிக்கொண்டுவருபவர், நமக்கான குறிக்கோளை வகுத்து தருபவர். நமக்கு தெரியாத ஒரு செயலை செய்ய சொல்லி தரும் ஒரு சிறு பிள்ளை கூட நமக்கு ஆசிரியர் தான்.எனவே நான் பிறந்தது முதல் இப்போது வரை என்னை அறவழியில் செல்ல உதவிய என் தாய் தந்தைக்கு, நண்பர்களுக்கும், என் ஆசிரியர் அனைவருக்கும் என் அன்பும் மரியாதையும் கலந்த ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள்.

ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே


பண்டைய காலங்களிலெல்லாம் ஒரு  பெண் குழந்தையைப் பெற்று விட்டால் என்றால் அவளால் தான் அந்த குழந்தை பிறந்தது என்றும் பெண் குழந்தை பிறந்ததற்கும் தந்தைக்கும் சம்மதமே இல்லை என்பது போன்ற ஒரு சூழலும் அறியாமையும் இருந்தது.
தற்போதைய காலகட்டத்தில் நாகரீக மாற்றத்தாலும் அதிகப்படியான மக்கள் கல்வியறிவு பெற்றிருப்பதாலும் இது குறைந்திருக்கிறது.
இருந்தாலும் எனக்குத் தெரிந்ததை பகிர்ந்து கொள்வது எனது கடமை என்ற நோக்கில் எழுதுவதே இந்த பதிவு...


பிறப்பு என்பது ஆணின் விந்துவிலிருந்து ஒரு செல் பெண்ணின் கருமுட்டையிலுள்ள ஒற்றைச் செல்லுக்குள் நுழையும் போது ஏற்படுகிறது.
செல்லில் 46 குரோமோசோம்கள் உள்ளன.இதனை 23 ஜோடிகளாகப் பிரிக்கலாம்.
23 ல் 22 குரோமோசோம்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியான அமைப்பைக் கொண்டிருக்கும்..
23 வது ஜோடி தான் இருவருக்கும் வேறுபடுகிறது.
ஆணிடம் உள்ள செல்லின் கடைசி ஜோடி   XY ஆகவும்.. பெண்ணிடம்  XY ஆகவும் இருக்கிறது.
கர்ப்பமுறும் போது தாய் தந்தை செல்கள் இணைகின்றன.
23 ஆண் குரோமோசோம்களும் 23 பெண் குரோமோசோம்களும் ஜோடி சேரும் போது ஆணின் விந்து செல்லிருந்து X தேர்ந்தெடுக்கப் படுகிறதா அல்லது Y தேர்ந்தெடுக்கப் படுகிறதா என்பதைப் பொறுத்துத்தான் குழந்தையின் பாலினம் அமையும்...
XX சேர்ந்தால் பெண் குழந்தையும்
YY சேர்ந்தாலும் ஆண் குழந்தையும் பிறக்கும்.
குழந்தையின் பாலினம் என்பது ஆணின் குரோமோசோம்களால் தான் நிர்ணயிக்கப் படுகிறது.
குழந்தை பெறுதல் என்பதில் இருவருடைய பங்களிப்புமே இருக்கிறது.
எனவே குழந்தைய பெத்துப் பாத்தா தான உங்களுக்கு என் கஷ்டம் தெரியும் என்று பெண்களும்..
 இந்த குழந்தை பொறந்திருச்சே அந்த குழந்தை பொறந்திருச்சே என வருத்தப் படாமல் ஆண்களும்....
நான் எனும் மடமையிலிருந்து நாம் எனும் வெளிச்சத்திற்கு வரும் போது தான் குடும்பம் வலுப்பெறும்...
குழந்தையும் வளமாய் வாழும்...

குழந்தை இல்லையே என ஏங்குபவரின் நிலையை நினைத்துப் பாருங்கள்  நீங்களெல்லாம் எவ்வளவு பெரிய பாக்கியசாலிகள் என்பது புரியும்...

மசக்கையும் இல்லை..
மாங்காய் தின்னும் ஆசையும் இல்லை..
வளைகாப்பு வளையல் ஒலி எதுவும் இல்லை.
ஆனாலும் குழந்தை பெறுகிறது குப்பைத் தொட்டி..

இந்த வரிகளை வாசிக்கும் போதே நம் மனம் இறுகிப் போகிறதென்றால் நேரில் பார்க்கும் போது எப்படி இருக்கும் நினைத்துப் பாருங்கள்...

கருக்கலைப்பு எவ்வளவு பெரிய கொடுமை...


தாய்மை என்றாலே புனிதம்...
அந்த தாய்மை எல்லா இடங்களிலும் வெல்லட்டும்...
பாலினம் கடந்த காதல் வென்றால் குடும்பமும் குழந்தையும் சேர்த்து இந்த பிரபஞ்சமும் முன்னேறும்...

அன்புள்ள ஆசானுக்கு

ஆசிரியர் தின விழாவிலே எங்கள் கல்லூரி முதல்வருக்காய் நான் எழுதி அவர் முன் அரங்கேற்றம் செய்த என் கவிதை...
கமல்ஹாசனுக்கு அடுத்து பல முறை தசாவதாரம் எடுத்தவர் நீங்கள் தான்‌...
தாய் தந்தைக்கு மகனாய்...
மனைவிக்கு ஏற்ற கணவராய்...
மகனுக்கும் எங்களைப் போன்ற மகள்களுக்கும் தந்தையாய்...
ஆசிரியர்களுக்கெல்லாம் நண்பணாய்...
ஆசிரியைகளுக்கெல்லாம் அண்ணணாய்...
தாளாளருக்கு தனயனாய்...
துணைத் தாளாளருக்கு தளபதியாய்...
புத்தகங்கள் எழுதிட்ட எழுத்தாளராய்...
கவி புனையும் கவிஞராய்..கலைஞராய்...
திரையில் நடிக்க தெரிந்த நடிகராய்...
மலரினும் மெல்லிய இதயம் படைத்திட்ட நல் இதயங்களே எனத் தொடங்கி பேச்சால் கட்டிப் போடும் பேச்சாளராய்...
பல அவதாரம் எடுத்திட்டவரே...
அவதாரங்கள் தொடரட்டும்...
அன்பு பெருகட்டும்...
ஆயுள் நீளட்டும்...
பல்லாண்டுகள் தொடரட்டும் உங்கள் அறியாமை இருளகற்றும் பணி.
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ஐயா....