நாம் தொலைக்காட்சிகளில் படம் பார்க்கும் போது விளம்பரங்கள் வரும் எனில், அதை டக்கென்று மாற்றி விடுகிறோம். ஏனெனில் அனைத்து விளம்பரங்களுமே வெறுப்பைத் தான் தருகின்றன என்பது நம் பொதுவான எண்ணம்.
சில விளம்பரங்கள் நமது முன்னேற்றத்தை பறைசாற்றுவதாக அமைகிறது. பாத்திரம் கழுவும் ஜெல் விளம்பரம். இதில் கணவர் டீ வைக்கும் போது பாத்திரம் கருகி விடும். அதை அவர் ஒருவிதமான அன்பு கலந்த பயத்தில் வெளிப்படுத்துவார். முன்பெல்லாம் பெண்கள் சமைக்கும் போது மிகவும் கவனத்துடன் சமைப்பார்கள். இல்லையெனில், கணவர் திட்டுவார் என்ற பயமே மேலோங்கி இருக்கும். ஆனால், இன்றைய தலைமுறை எவ்வளவு வளர்ந்திருக்கிறது. சமையல்கட்டு,சமையல் என்பது பெண்களுக்கான ஒன்றே என்று இருந்த சமுதாயம் எவ்வளவு முன்னேறி இருக்கிறது. "வீட்டு வேலைகளை ஆண்,பெண் இருவருமே பகிர்ந்து கொள்ளலாம். என்றளவுக்கு இந்த சமுதாயம் வளர்ந்துள்ளது.
பெண்களுக்கான அதைத்து அங்கீகாரங்களும் இந்த தாய்திருநாட்டில் வழங்கப்படுகிறது. சமீப காலத்தில், சவுதி அரேபியாவில் கூட பெண்களுக்கு மகிழுந்து ஓட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த மாதிரியான விளம்பரங்கள் நமது சமுதாய முன்னேற்றத்தை பறைசாற்றுவதாக அமைகிறது. இன்றைய அவசர காலத்தில் இந்த மாதிரியான விளம்பரங்களை சில நிமிடம் ரசித்துப் பார்த்து நமது முன்னேற்றத்தை கண்டு பெருமையடையுங்கள்.
இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களில் தான் வாழ்க்கை அழகாகும்.