ஞாயிறு, 28 ஜனவரி, 2018

வழி செல்வோம்

                                     வழி செல்வோம்

நாம் அனைவரும் இந்த உலகிற்க்கு ஒரு காரணமாக தான் வந்திருப்போம். சில நபர்கள் அந்த காரணத்தை கண்டறிந்து நல்ல ஒரு சமுதாயத்தை உறுவாக்குவதற்க்காக உழைத்து உயிர் துரந்திருப்பர் சிலர் அந்த காரணங்களையெல்லாம் அறியாமலேயே செத்து மடிவர். சிலர் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிறுப்பர். மனிதனாக பிறந்தால் நாட்டிற்கும் வீட்டிற்க்கும் ஏதாவது செய்வதே அவனது தலையாய கடமை. இதனை நம்மில் சிலர் தெரிந்திருப்பர், சிலருக்கு இதனை பற்றி அக்கறை இல்லை. நாட்டில் உள்ள இளஞர்களுக்கு நல்ல பல கருத்துக்களை எடுத்து சென்று சேர்க்க வேண்டியது மூத்தோரின் கடமை. ஆனால், இங்கோ, கூத்தாடிகளின் பின் சென்று வாழ்கையையும் நாடகம் போல் போலியாக அற்த்தம்மற்றைவயாக வாழ்ந்து வருகிறோம். யார் உண்மையான வீரர்கள்,, யாரை உண்மையாக மதிக்க வேண்டும், ஏன் நம் நாடு இந்த நிலமையில் உள்ளது?அதை திருத்துவது யாருடைய கடமை?என்று நாம் நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும். கேள்வி கேட்க்க வேண்டும் என்று அன்று சான்றோர் பெறுமக்கள் கூறுவது ஒரு தெளிவான பார்வை கிடைக்கவே!!! சிந்திப்பீர்! செயல்படுவீர்!


                                                

மனிதானாக எந்த ஒரு விஷயத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும்?

மனிதானாக எந்த ஒரு விஷயத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும்?


மனிதனாக அனைத்து உயிரிணங்களுக்கும் சிரசமமான அன்பினைக்காட்ட வேண்டும்.தெருவில் செல்லும் நாயோ, விட்டில் வளற்க்கும் பெர்ஷியா பூனையோ?அனைத்தும் இந்த மண்ணில் சம உரிமை பெற்றுதான் வாழ நம்மை போல வந்திருக்கிறன. ஒருவர் படிப்பில் சரியாக இல்லை என்ற காரணத்திள்காக அவரை ஒதுக்குவது சரியல்ல. நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் மனிதநேயத்துடன் நடந்துகொண்டாலே போதும் இந்த உலதில் அனைத்து பிரச்சணைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.நம்பிக்கையை உடைப்பது மிகவும் கொடுமையான விஷயம்.

மனக்கஷ்டத்தில் இந்த மாய உலகைவிட்டு செல்லவேண்டும் என்ற எண்ணம் வந்தால் என்ன செய்வீர்?

மனக்கஷ்டத்தில் இந்த மாய உலகைவிட்டு செல்லவேண்டும் என்ற எண்ணம் வந்தால் என்ன செய்வீர்?

உடுத்த உடை,
உண்ண உணவு,
உறுதியான உடல்,

உள்ள எவன் ஒருவன் இருக்கிறானோ அவன்தான் இந்த உலகின் ஆகப்பெரிய பண்க்காரண். இந்த உண்மையை புரிந்து கொண்டு இருப்பதை வைத்து வாழ்ந்து நடத்தினாலே மனநிறைவுடன் அற்த்முள்ள வாழ்க்கையை வாழலாம்.

மக்களின் வேற்றுமை

                                                                மக்களின் வேற்றுமை
யூ-டியூப் என்று சொல்லப்படும் கானொலி தளத்தில் சுற்றிக்கொண்டிருக்கையில், ஒரு சமூக சோதனை(SOCIAL EXPERIMENT) என்று சொல்லப்படும் கானொலியை பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த கானொலி வெளிநாட்டவரால் பதிவு செய்ய்ப்பட்டது. அதில் தனி மனிதன் ஒருவன் என் நன்பனிற்க்கு அவசர உதவி தேவைபடுகிறது என்று வீடு வீடாக அழைந்து கேட்கிறான் அது கிருத்துமஸ் விழா நாளும் கூட எனினும் மக்கள் இல்லை, எங்கள் வீட்டில் பிள்ளைகள் உள்ளனர், உங்களை யார் என்று தெரியாது, நாங்கள் அன்னியற்களை அனுமதிக்க மாட்டோம், என்று பர்பல காரணங்கள் கூறி புரகனித்தனர், இருதியில் அந்த வகை உதவியையே பெண் ஒருவரை வைத்து நடத்தினர்.அப்பொழுது சிலர் முன் வந்தனர்.


அதே சமயம் எங்கள் வீட்டில் ஒரு தாயார் கதவை தட்டினார். ``எனது மகள் இங்கே இசை பயிற்ச்சிக்கு வந்திருக்கிறாள், அங்கு பூச்சிகளின் தொல்லை அதிகமாக உள்ளது, நான் இந்த தின்னையில் அமரலாமா?’’ என்றார். நான் உடனடியாக அவரை அனுமதித்தேன்.சில வற்றை நமது முன்னோற்கள் அறிந்து அதனை நமது பழக்கமாக கொண்டுள்ளனர். இந்த தின்னை, உதவும் மனப்பான்மை இவை அனைத்தும் நமது கலாச்சாரத்தில் சொல்லாமல் சொல்லப்பட்ட மிகப்பெரிய வாழ்க்கை பாடங்கள், மற்றும் அவை நமக்கு போதிக்கப்பட்ட ஒழுக்க நெரிகள். ``தீயன செய்தவனுக்கும் நல்லதே செய்” என்று கூறி வளர்த்த என் அன்னை தமிழுக்கு நெஞ்சார்ந்த நன்றி. ஒவ்வொறு நொடியும் நான் ஒரு தமிழச்சியாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன்.

பேனா

                                                                                பேனா

சிலர் எழுதிய பேனா,
இன்னும் கணக்கு பார்க்கிறது
சிலர் எழுதிய பேனா,
பல சரித்திரம் படைக்கிறது!!!

(இதை நீங்கள் கவிதையாக பாவித்துக்கொள்ளலாம்) கரு இதுதான்; சிலர் பயண்படுத்திய பேனாக்கள் இன்னும் அவர்கள் வீட்டுக் கதவிற்க்குள்ளே கிடக்கும், ஆனால், சிலர் பயண்படுத்திய பேனாக்கள் மட்டுமே அனைவராலும் காக்கப்படும். நாம் சாமானியனாக வாழ்வதும் சரித்திரம் படைப்பதும் நம் கையில் உள்ளது.