சனி, 21 அக்டோபர், 2017

பாதுகாப்பு:

மெதுவாக பேசு!
அது உன் ரகசியத்தை பாதுகாக்கும்.

தர்மம் செய் !
அது உன் செல்வத்தை பாதுகாக்கும்.

நல்லெண்ணத்தை கொண்டிரு !
அது உன் நடத்தையை பாதுகாக்கும் .

உண்மை சொல் !
அது உன் வார்த்தைகளை பாதுகாக்கும் .

கலந்தாலோசனை செய் !
அது உன் சிந்தனைகளை பாதுகாக்கும் .safe க்கான பட முடிவு

"தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும்”

"தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும்”

என்ற பழமொழி கூட
'தாய்' என்பது வாழையையும் 'பிள்ளை' என்பது தென்னையையும் குறித்து எழுந்ததாகும். வாழை மரத்துக்கு எட்டடி இடைவெளியும், தென்னை மரத்துக்கு பதினாறடி இடைவெளியும் வேண்டும் (அதன் வேர் நீளும் அளவு) என்பதையே இப்பழமொழி வெளிப்படுத்துகிறதுmother and child க்கான பட முடிவு

பெண் புத்தி பின் புத்தி "

பெண் புத்தி பின் புத்தி "

இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும், காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், எங்கு எந்த பிரச்சனை வந்தாலும், அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும்.

பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" girl க்கான பட முடிவுஎன்றார்கள்.

அடியாத மாடு படியாது.

அடியாத மாடு படியாது.
விளக்கம்: உண்மை பொருள் என்னவென்றால் மாட்டின் கால்களுக்கு லாடம் அடித்தால் தான் அதனால் கடுமையான வேலைகளை (உழுதல் போன்ற ) செய்ய முடியும் என்பது தான்.maadu க்கான பட முடிவு

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்

இப்பழமொழியில் வரும் 'ஆத்துல' என்னும் கொச்சைச் சொல்லின் தூய தமிழ்வடிவம் 'அகத்தில்' என்பதாகும். அகம் என்ற சொல்லிற்குப் பல பொருட்கள் உண்டெனினும் இப் பழமொழியில் வரும் பொருள் 'மனம் அல்லது நினைவு' என்பதாகும். அகத்தில் போடுதல் என்பது நினைவில் வைத்தலாகும். 'அளந்து' என்ற சொல்லில் எழுத்துப் பிழை உள்ளது. இது 'அறிந்து' என்று வரவேண்டும். இவையே இப் பழமொழிக்கான திருத்தங்கள் ஆகும்.

சரியான பழமொழி: “அகத்தில் போட்டாலும் அறிந்து போடவேண்டும். “

நமது அறிவு தெளிவாக இல்லாவிட்டால் விளைவு மோசமாகிவிடும் அல்லவா?. அதனால் தான் கருத்துக்களை நினைவில் கொள்ளும்போது தெளிவாக அறிந்தபின்னரே நினைவில்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றனர். இதுவே இப்பழமொழியின் உண்மையான விளக்கமாகும்.magilchi க்கான பட முடிவு